ஆவலைத் தூண்டும் ஃபியட் ஐ கான்செப்ட்டின் சிறப்பம்சங்கள்: ஒரு பார்வை

நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு எளிதான வாகனங்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

2015 டொயோட்டா இன்னோவா காரின் பெங்களூர் ஆன்ரோடு விலை!

அதுபோன்று, உருவாக்கப்படும் கான்செப்ட் மாடல்களின் டிசைன் விந்தையாக இருந்தாலும், அது பயன்பாட்டுக்கு வரும்போது என்னென்ன வசதிகள் இருக்கும் என்று எண்ணி பார்த்தால் ஆர்வத்தை தூண்டுகிறது. அதுபோன்று, ஒரு வாகனத்தின் சிறப்பம்சங்களைத்தான் ஸ்லைடரில் காண இருக்கிறோம்.


ஃபியட் ஐ

ஃபியட் ஐ

Fiat Eye என்று அழைக்கப்படும் இந்த கான்செப்ட்டை டினார்டு டா மாதா என்பவர் டிசைன் செய்துள்ளார். இதன் இயக்கம், சிறப்பம்சங்கள் அனைத்தும் ஆர்வத்தை தூண்டுகின்றன.

 செக்வே வகை

செக்வே வகை

செக்வே ஸ்கூட்டர்களை போன்றே இந்த ஒற்றை இருக்கை வசதி கொண்ட வாகனமும், தானாகவே சமன் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. சுற்றுப்புறத்தை கண்காணித்து செல்லும் தொழில்நுட்ப வசதி கொண்டிருக்கிறது.

கன்வேயர் பெல்ட்

கன்வேயர் பெல்ட்

இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நீள்வட்ட வடிவ சக்கரங்களில் கன்வேயர் பெல்ட் போன்று இயங்கும் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

எலக்ட்ரிக் வாகனம்

எலக்ட்ரிக் வாகனம்

இந்த வாகனம் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்குகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராது என்பதுடன் மிகவும் அடக்கமாக இருப்பதால், எளிதாக பார்க்கிங் செய்ய முடியும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த ஃபியட் ஐ கான்செப்ட் மாடலில் வாகனத்தை சுற்றிக் கண்காணித்து செல்லும் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. நேவிகேஷன் சிஸ்டமும் உண்டு. இந்த வாகனத்தின் மூடி போன்ற கதவை மேல்நோக்கி திறந்து விட்டு ஏறி அமர்ந்து கொள்ளலாம்.

மோட்டார் உலகம் செய்திகள்

மோட்டார் உலகம் செய்திகள்

இதுபோன்ற சுவாரஸ்யமான மோட்டார் உலகம் பற்றிய செய்திகளை படிக்க டிரைவ்ஸ்பார்க் தளத்தின் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்.

Most Read Articles
English summary
The concept Fiat Eye personal vehicle was developed in order to optimize space, and facilitating individual displacement in large cities. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X