போக்குவரத்து நெரிசலை குறைக்க மடக்கக்கூடிய சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

நாம் சாலைகளில் செல்லும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது வழக்கமாகி கொண்டே வருகிறது. அது பெரிய நகரங்களில் இந்த பிரச்னைக்கு தீர்வாக, டெர்ன் எனப்படும் மடக்க கூடிய சைக்கிள் வெளியாகியுள்ளது.

ஃபோல்டிங் பைக் எனப்படும் மடக்க கூடிய சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

டெர்ன்...

டெர்ன்...

டெர்ன் எனப்படும் ஃபோல்டிங் பைக் என்ற வகைபடுத்தலின் கீழ் மடக்க கூடிய சைக்கிள் வெளியாகியுள்ளது.

இது ஃபைர்ஃபாக்ஸ் பைக்ஸ் என்று அழைக்கபடும் நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிடபடுகிறது.

சைக்கிள்களின் பிரயோகம்;

சைக்கிள்களின் பிரயோகம்;

சைக்கிள்கள் நாம் உபயோகிக்கும் வாகனங்களிலேயே சுற்றுசூழலுக்கு மிகவும் இணக்கமான வாகனமாக உள்ளது.

பெரும்பாலான சைக்கிள்கள், அதை இயக்குபவரின் சக்தியால் தான் இயங்குகிறது. நாம் நமது அலுவலகங்கள், மார்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சைக்கிள் உபயோகிப்பது உடலுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உதவுகிறது.

நோக்கம்;

நோக்கம்;

ஃபைர்ஃபாக்ஸ் பைக்ஸ் என்ற நிறுவனம், அரசு கொண்டு வந்த ஆட்-ஈவன் ஃபார்முலா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மடக்க கூடிய சைக்கிள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு வருவதையே முக்கிய நோக்கமாக கொண்டு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

டெர்ன் ஃபோல்டிங் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டதை ஒட்டி, ஃபைர்ஃபாக்ஸ் பைக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஷிவ் இந்தர் சிங் மிகுந்த பெருத்தை வெளிப்டுத்தினார்.

இது குறித்து கூறுகையில், "ஆட்-ஈவன் ஃபார்முலா திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சுற்றுசூழல் மாசுபடுவதை குறைப்பதற்கும் சிறந்த திட்டமாக உள்ளது. சைக்கிள்கள் இயக்குவது, சுற்றுசூழலுக்கு இணக்கமான நடவடிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல உடற்பயிற்சி நடவடிக்கையாகவும் உள்ளது" என ஷிவ் இந்தர் சிங் என தெரிவித்தார்.

சிஇஓ கருத்து - எளிமையான வாகனம்;

சிஇஓ கருத்து - எளிமையான வாகனம்;

"டெர்ன் ஃபோல்டிங் பைக், நமது அலுவலகங்கள். ஜிம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு எளிமையாக எடுத்து செல்ல முடியும். சர்வதேச அளவில், ஏராளமான மக்கள் இத்தகைய ஃபோல்டிங் பைக்குகளை அலுவலகங்களுக்கும், குறுகிய தூர பயணங்களுக்கும் உபயோகிக்கின்றனர்.

இந்த சைக்கிள் உபயோகிக்கும் கலாச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. எனினும், மக்கள் ஃபோல்டிங் பைக்களை உபயோகிக்கும் வழக்கத்தை அதிகரித்து கொண்டால், அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்" ஷிவ் இந்தர் சிங் என தெரிவித்தார்.

எடை;

எடை;

டெர்ன் ஃபோல்டிங் பைக், வெரும் 12 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

பிற தயாரிப்புகள்;

பிற தயாரிப்புகள்;

ஃபைர்ஃபாக்ஸ் பைக்ஸ் நிறுவனம், டெர்ன் ஃபோல்டிங் பைக் தவிர்த்து சுமார் 75 பிற சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த மாடல்கள் வெவ்வேறு வகையினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

ஃபைர்ஃபாக்ஸ் பைக்ஸ் நிறுவனம், இந்த டெர்ன் ஃபோல்டிங் பைக்கிற்கு உயர்மட்ட வருமானம் பெரும் ஊழியர்களையும், கார்ப்பரேட் பணியாளர்களையும் இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

விலை;

விலை;

டெர்ன் ஃபோல்டிங் பைக், 31,000 என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

முதல் கார்பன் ஃபைபர் பிரேமுடன் புதிய சைக்கிள்: ஹீரோ அறிமுகம்

காருக்கு மட்டுமா... சைக்கிளுக்கான வித்தியாசமான ஆக்சஸெரீஸ்கள்!

அஸ்டன் மார்ட்டினின் லிமிடேட் எடிசன் சைக்கிள்: விலை 21 லட்சமாம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Biking company named Firefox Bikes has launched their TERN bike in India. TERN bike is basically a foldable cycle. It weighs just 12 kg. TERN foldable bike is launched at price of Rs. 31,000. Firefox Bikes are currently targeting at high-income salaried groups, and corporate professionals for their TERN foldable bike and other products. To know more, check here...
Story first published: Friday, April 22, 2016, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X