இந்தியாவின் முதல் மெக்லாரன் கார் பெங்களூர் தொழிலதிபருக்கு டெலிவிரி!

இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் முதல் மெக்லாரன் காரை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வாங்கி இருக்கிறார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை ஃபெராரி, லம்போர்கினி, மஸேரட்டி உள்ளிட்ட உயர் வகை கார்கள் இந்திய சந்தையில் தடம் பதித்திருந்த நிலையில், இந்த வரிசையில் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் காரும் இணைந்துள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

ஆம், பெங்களூரை சேர்ந்த கார் ஆர்வலரும், தொழிலதிபருமான ரஞ்சித் சுந்தரமூர்த்தி இந்தியாவின் முதல் மெக்லாரன் காரை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

Recommended Video

2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

மெக்லாரன் 720எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலைத்தான் ரஞ்சித் சுந்தரமூர்த்தி தேர்வு செய்து வாங்கி இருக்கிறார்.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. மெக்லாரன் 650எஸ் மாடலுக்கு மாற்றாக வந்தது. மொத்தமாக 400 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும்.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த காருக்கு மெக்லாரன் நிறுவனத்தின் ஃபெர்ஃபார்மென்ஸ் பேக் 3 என்ற விசேஷமான ஆக்சஸெரீ பேக்கேஜுடன் வாங்கி இருக்கிறார். மெம்பிஸ் ரெட் என்ற பளபளக்கும் விசேஷ சிறப்பு வண்ணம் கொண்டதாக இருக்கிறது இந்த கார்.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த காரில் அதிக அளவில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இதன் ரகத்தில் எடை குறைந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அல்கான்டரா இன்டீரியர் பேக்கேஜும் சிறப்பு சேர்க்கிறது.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த காரில் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 710 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் ரியர் வீல் சிஸ்டத்தில் செலுத்தப்படுகிறது.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். 0 - 200 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 341 கிமீ வேகம் வரை செல்லும்.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

இந்த கார் துபாய் ஷோரூமிலிருந்து ஆர்டர் செய்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் இடதுபக்க ஸ்டீயரிங் வீல் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதான் இந்தியாவின் முதல் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்!

புதிய மெக்லாரன் 720எஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருக்கும் ரஞ்சித் சுந்தரமூர்த்தியிடம் ஏற்கனவே ஃபெராரி 458 இட்டாலியா, ஃபெராரி 488ஜிடிபி மற்றும் லம்போர்கினி ஹூராகென் உள்ளிட்ட கார்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Memphis Red McLaren 720S owned by Bangalore businessman and petrolhead Ranjit Sundaramurthy also has the distinction of being the first ever car from the British supercar marque McLaren to hit Indian roads.
Story first published: Thursday, August 31, 2017, 19:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X