கைதேர்ந்த மெக்கானிக் போல் அசத்தும் 5 வயது குழந்தை!!

Written By:

கைதேர்ந்த மெக்கானிக் போல், ஆட்டோமொபைல் பணிகளை திறன்பட மேற்கொள்ளும் 5 வயது சிறுவன் பற்றி வெளியான வீடியோ வைரலாகியுள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் கார்கள் வாங்கி உபயோகித்து கொண்டிருந்தாலும், கார்களை பற்றிய அடிப்படை புரிதல் அனைவருக்கும் இருக்கிறதா என்றால், அது சந்தேகத்திற்கு உரிய விஷயமாக தான் உள்ளது.

இதனால், நமது வாகனங்களில் ஒரு சின்ன பிர்ச்னை என்றால் கூட, நமது வாகனங்களை சர்வீஸ் மைத்திற்கு கொண்டு செல்வது வழக்கமாக மாறிவிட்டது.

ஆனால், அமெரிக்காவில் வாழும் ஃபீனிக்ஸ் என்ற 5 வயது, 4 மாதங்களே ஆன குழந்தை, அனுபவம் வாய்ந்த மெக்கானிக் போல் சில அசத்தும் வேலைகளை செய்கிறார்.

ஃபீனிக்ஸ், பழுதான வீல் பியரிங்-கை (சக்கரத்தின் பியரிங்) கழற்றிவிட்டு, புதிய பியரிங்கை பொருத்தி சரி செய்கிறார். தனது தந்தையின் 2001 மாடல்

டொயோட்டா கரொல்லா காரின் பழுதான வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

அனுபவம் வாய்ந்த மெக்கானிக்களுக்கு கூட இந்த வீல் பியரிங் சரி செய்யும் பணி, கடினமானதாக கருதப்படுகிறது.

இந்த அசாதாரன பாலகன் ஃபீனிக்ஸ்-ஸுக்கு, அவரது தந்தை "கிண்டர்கார்டன் மெக்கானிக்" என்ற செல்ல பெயரை சூட்டியுள்ளார்.

ஃபீனிக்ஸ் மேற்கொண்ட பழுதை சரி செய்யும் வீடியோ, காண்போர் அனைவரையும் வியக்க வைக்கிறது.

5 வயது அமெரிக்க குழந்தை ஃபீனிக்ஸின் அதிசய திறன் !

English summary
Five year old kindergarten mechanic Phoenix from US changes wheel bearing. This Smart Child named Phoenix is just five years and four months old. Phoenix replaces a faulty front wheel bearing on his Dad's 2001 Toyota Corolla.
Story first published: Saturday, November 14, 2015, 13:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark