ஃபோர்டு மஸ்டாங் கார்கள் கலக்கிய ஹாலிவுட் திரைப்படங்கள் - சிறப்புத் தொகுப்பு

ஃபோர்டு மஸ்டாங் கார்கள் கலக்கிய ஹாலிவுட் திரைப்படங்கள்

By Saravana Rajan

பாரம்பரியம் மிக்க ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சந்தையில் மட்டுமே கலக்கி வந்த இந்த புதிய கார் தற்போது முதல்முறையாக வலது பக்க டிரைவிங் வசதி கொண்டதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்கள் கலக்கி வருவதுபோன்றே, பல ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஃபோர்டு மஸ்டாங் கார் கலக்கி இருக்கிறது. மேலும், ஃபோர்டு மஸ்டாங் காரின் வல்லமையை காட்டும் விதத்தில் வெளிவந்த, டாப் 10 திரைப்படங்களை தற்போது காணலாம்.

01. கோல்டுஃபிங்கர்[1964]

01. கோல்டுஃபிங்கர்[1964]

கோல்டுஃபிங்கர் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக தங்க வண்ணத்திலான ஓர் பிரத்யேகமான மஸ்டாங் ஃபாஸ்ட்பேக் மாடலை ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியது. ஆனால், டெலிவிரி கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டத்தையடுத்து, அந்த வாய்ப்பை அஸ்டன் மார்ட்டின் டிபி5 கார் பெற்றது. அதேநேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த காரை லிமிடேட் எடிசன் மாடலாக ஃபோர்டு விற்பனை செய்தது.

02. புல்லிட்[1968]

02. புல்லிட்[1968]

கார் சாகச காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் ஃபோர்டு மஸ்டாங் கார் மிக முக்கிய இடத்தை பெற்றது. இந்த திரைப்படத்தில் 1968 ஃபோர்டு மஸ்டாங் ஜிடி390 ஃபாஸ்ட்பேக் மாடல் பயன்படுத்தப்பட்டது.

03. டைமன்ட்ஸ் ஆர் ஃபார்எவர்[1971]

03. டைமன்ட்ஸ் ஆர் ஃபார்எவர்[1971]

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிஎம்டபிள்யூ, அஸ்டன் மார்ட்டின், லோட்டஸ் கார்களே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்ட நிலையில், முதல்முறையாக இந்த அமெரிக்க தயாரிப்பு ஏழாவதாக வெளியான இந்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்கியது. இந்த படத்தில் 1971 மஸ்டாங் மேக்-1 கார் பயன்படுத்தப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் விரல் அசைவுகளுக்கு ஏற்ப நர்த்தனமாடி பலரையும் வியக்க வைத்தது.

04. தாமஸ் க்ரவுன் அஃபெயர்[1999]

04. தாமஸ் க்ரவுன் அஃபெயர்[1999]

இந்த படத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி ஜிடி350 கார் மாடல் பயன்படுத்தப்பட்டது. பின்புறம் சற்று உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, ரோல் பார் மற்றும் நான்கு கூடுதல் பனி விளக்குகள் என பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இந்த காரை நாயகன் மிக அனாயசமாக ஓட்டும் காட்சிகளுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

05. கான் இன் சிக்ஸ்டி செகன்ட்ஸ்[2000]

05. கான் இன் சிக்ஸ்டி செகன்ட்ஸ்[2000]

இந்த படத்தில் 1967 ஃபோர்டு மஸ்டாங் எலியனோர் கார் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தில் பல மஸ்டாங் கார்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரேயொரு கார் மட்டும் தப்பி பிழைத்தது. அதுவும் பல மில்லியன் டாலர் விலைக்கு ஏலம் போனது. இளம் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட மாடலாக மாறியது.

06. தி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 3: டோக்கியோ டிரிஃப்ட்[2006]

06. தி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 3: டோக்கியோ டிரிஃப்ட்[2006]

கார் சேஸிங் காட்சிகளுக்கு பிரபலமான தி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்பட வரிசையில் வெளியான தி டோக்கியோ டிரிஃப்ட் படத்திலும் மஸ்டாங் கார் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தில் 1967ம் ஆண்டு மஸ்டாங் ஃபாஸ்ட்பேக் மாடல் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த காரில் ஜப்பானில் தயாரான எஞ்சின் பயன்படுத்ப்பட்டது.

07. ஐ ஆம் லெஜன்ட்[2007]

07. ஐ ஆம் லெஜன்ட்[2007]

இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் ஜிடி500 கார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நியூயார்க் சாலைகளில் மஸ்டாங் கார் சீறிப்பாயும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன.

08. டிரான்ஸ்ஃபார்மர்ஸ்[2007]

08. டிரான்ஸ்ஃபார்மர்ஸ்[2007]

2007ம் ஆண்டு வெளிவந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் 2007 சலீன் எஸ்281 எக்ஸ்ட்ரீம் மஸ்டாங் மாடல் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 3 மஸ்டாங் கார்கள் தயாரிக்கப்பட்டன. இந்த படத்தின் மூலமாக பிரபலமான இரண்டாம் நம்பர் எண் கொண்ட கார் இ-பே ஆன்லைன் தளம் மூலமாக ஏலம் விடப்பட்டது.

09. நைட் ரைடர்[2008]

09. நைட் ரைடர்[2008]

1982ல் வெளியான நைட் ரைடர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மீண்டும் 2008ல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி ஜிடி500கேஆர் கேஐடிடி மாடல் பயன்படுத்தப்பட்டது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

10. டெத் ரேஸ்[2008]

10. டெத் ரேஸ்[2008]

இந்த படத்தில் 2006 ஜிடி மஸ்டாங் கார் மாடல் பயன்படுத்ப்பட்டது. பல்வேறு விசேஷ அம்சங்கள், ஆயுதங்களுடன் இந்த கார் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஹீரோவின் விரல் அசைவுகளை ஏற்ப சாகசங்களை புரிந்த இந்த காரும் ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டது.

Most Read Articles
English summary
Ford Mustang And Its Hollywood Connections.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X