சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு... கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள்!

சென்னை தயாரிப்பு ஆலையிலிருந்து ஃபோர்டு நிறுவனம் கடைசி காரை வழியனுப்பி வைத்தது. இதுகுறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

அமெரிக்காவைச் சேர்ந்த பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு, இந்நிறுவனம் பல ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவைப் பொருத்தவரை குஜராத் மாநிலத்திலும் தமிழகத்திலும் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி கார்களை தயாரித்து வந்தனர்.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

கடந்த 2019ம் ஆண்டு வரை லாபத்தில் சென்ற இந்நிறுவனம் 2020ம் ஆண்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதையடுத்து இந்தியாவில் அந்நிறுவனத்தை மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் Sanand பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையை அந்நிறுவனம் மூடியது. அப்பொழுது கடைசி காராக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை தயாரித்து அனுப்பி அந்த ஆலையை மூடியது.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

தற்போது ஃபோர்டு நிறுவனம் அந்த ஆலையை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டது. குஜராத் ஆலை மூடப்பட்டாலும் சென்னை ஆலைதொடர்ந்து செயல்பாட்டில் தான் இருந்தது. இந்நிலையில் இந்த செயல்பாடுகளை படிப்படியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

அதன்படி கடைசியாகச் சென்னை ஆலையை வரும் 31ம் தேதியுடன் மூடிவிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை ஆலையில் கடைசி காராக ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் காரை அந்நிறுவனம் தயாரித்து மாலைகள் போட்டு காரை வெளியே அனுப்பியது. இந்த புகைப்படம் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

ஃபோர்டு நிறுவனம் கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்தியாவில் அதன் ஆலையை நிறுவி கார்களை தயாரித்து வந்துள்ளது. கடையாக அந்நிறுவனம் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய கார்களை தான் அதிகம் விற்பனை செய்தது. இதுதவிர மற்ற ஹிட்டான வானகங்கள் எதுவும் ஃபோர்டு நிறுவனத்திடம் இல்லை. கடந்த 2010ம் ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஃபிகோ கார் சிறிய ரக கார்களில் நல்ல விற்பனையிலிருந்தது.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அந்நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் இந்தியாவிலிருந்து அந்நிறுவனம் வெளியேறும் முடிவை எடுத்தது. இந்நிலையில் கடந்த 2021 அக்டோபர் மாதம் குஜராத் ஆலையை மூடியது. இருந்தாலும் சென்னை ஆலையைத் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் இன்ஜின்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி வந்தது.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

இந்நிலையில் சென்னை ஆலையின் தேவையையும் இல்லாத நிலை வந்த நிலையில் தற்போது அந்த ஆலையையும் மூடிவிட்டு ஃபோர்டு நிறுவனம் நிரந்தரமாக இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது. அடுத்து இந்தியாவிற்குள் தனது கார்களை விற்பனை செய்யும் எண்ணம் இதுவரை ஃபோர்டிற்கு இல்லை. தற்போது இருக்கும் ஸ்டாக்களுக்கு சர்வீஸ் மற்றும் பராமரிப்புகளை வழங்கும்.

சென்னையிலிருந்து பிரியாவிடை பெற்ற ஃபோர்டு . . . கடைசி காரை கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள் !

மேலும் வெளிநாடுகளிலிருந்து இனி இந்தியாவிற்குள் ஃபோர்டு கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் ஆனால் அதன் விலை இருமடங்கிற்கு மேல் அதிகமாகும். கிட்டதட்ட 23 ஆண்டுகளாகச் சென்னையில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் தற்போது நம்மிடமிருந்து பிரியாவிடை அளிக்கிறது.

Source: TeamAutoTrend

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford rolled out the last unit ecosport from Chennai plant as they plan adieu from India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X