வேலைவாய்ப்பில் பெண் பொறியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஃபோர்டு முடிவு!

Written By: Azhagar

சர்வதேச அளவில் அனைத்து தேவைகளுக்கான சந்தையில் ஆசிய பசிஃபிக் நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு பன்முகத்தன்மையோடு செயல்பட உள்ளது, அதில் ஒரு பகுதியாக கார் உற்பத்தியில் ஆசியப் பெண் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

ஆசிய பசிஃபிக் கண்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஃபோர்டு நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் நடைபெற்றிருக்கும் இந்த வளர்ச்சியால், ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் உயர் அதிகாரிகளாகவும், சீனியர் பிரிவிலும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு பற்றி பேசிய ஆசிய நாடுகளுக்கான ஃபோர்டு நிறுவனத்திற்கான தலைமை அதிகாரி டேவ் ஸ்கோச் "ஆசிய நாடுகளில் பெண்களை வேலைக்கு எடுப்பதும், அவர்களை தக்கவைத்துகொள்வதும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. சீனா உட்பட மற்ற ஆசிய நாடுகளில் நாங்கள் வளர்ச்சி பெற பெண் பொறியாளர்களின் தேவை அவசியமாகவுள்ளது" என கூறுகிறார்.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

ஆட்டோமொபைல் துறையில் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள், அதை கலையும் முயற்சியில் தனது வேலைவாய்ப்பு முறையில் ஃபோர்டு திட்டங்களை வகுத்து வருவதாகவும் டேவ் ஸ்கோச் தெரிவிக்கிறார். வரும் காலங்களில் பொறியியல் மற்றும் ஒட்டுமொத்த துறைகளிலும் பெண்களுக்கான தேவையை அதிகரிக்கவும் ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் பெற்றிருக்கக்கூடிய கல்வியை சாதகமாக்கிக் கொள்ள ஃபோர்டு கார் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதை தனது எதிர்கால வளர்ச்சிக்கான வெற்றியாகவும் அந்நிறுவனம் கருதுகிறது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

பணிச்சூழலில் பன்முகத்தன்மையை வளர்க்க ஃபோர்டு ஒரு கூட்டணிக் குழுவை இம்மாதத்தில் உருவாக்க உள்ளது. அந்த செயல்பாடுகள் மூலம், அறிவியல், தொழில்நுட்பம் என ஏனையை துறைகளில் பெண்களின் கல்விதரத்தை அறிந்து , அவர்களுக்கு ஏற்றவாற்றான தொழில் சார்ந்த வாய்ப்புகளை உருவாக்க ஃபோர்டு தீர்மானத்திருக்கிறது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

பெண்களை ஒரு ஊழியராக மட்டும் பார்க்காமல், தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஃபோர்டு நிறுவனம் முக்கியத்துவம் தருகிறது. இதற்காக சீனாவில் தனது நிறுவனம் அமைந்திருக்கும் சில பகுதிகளில், பணியில் இருக்கும்போதே பெண்கள் தங்களது குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், ஒரு இல்லத்தரசிக்கான பணிகளை அவர்கள் செய்யவும் ஃபோர்டு வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

ஃபோர்டு நிறுவனத்தில் புதியதாக வேலை சேரும் பெண்களுக்கான உடனடி பயிற்சி வகுப்புகளும், உயர் பதிவிகளை ஏற்படுத்திக்கொள்ளும் லீடர்ஷிப் பயிற்சிகளையும் ஃபோர்டு நிறுவனம் வழங்கவுள்ளது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

சமீபத்தில் ஆசிய பசிஃபிக் நாடுகளில் வேலை பார்க்கும் 13,000 ஊழியர்களுக்கு மற்ற பணியார்களிடம் பாராபட்சம் இல்லாமல் நடந்துகொள்வதற்கான பயிற்சியை ஃபோர்டு கார் நிறுவனம் வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஃபோர்டு!

ஊழியர்கள் தங்களை அறியாமேலேய ஒரு சிலருக்கு வேலையில் முன்னுரிமை அளிக்ககூடும் என்பதால், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த முடிவுகளில் அவர்கள் பரந்த நோக்கத்துடன் செயல்பட, ஊழியர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் எப்படி சிந்திக்கலாம் என்பதற்காக பயிற்சியை ஃபோர்டு கார் நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களது தளத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட முஸ்டாங் சூப்பர் ஸ்னேக் காரின் புகைப்பட தொகுப்பை நீங்களும் பார்க்க கீழே க்ளிக்குங்கள்

English summary
Women have been traditionally underrepresented in the auto industry, particularly in Asia, and we see that as a massive untapped opportunity
Story first published: Thursday, March 9, 2017, 13:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark