ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்- சிறப்புத் தகவல்கள்

By Saravana

பாரிஸ் நகரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்க பிரான்ஸ் அரசு சபதம் பூண்டிருக்கிறது. பாரீஸ் நகர தாக்குதல் முடிந்த கையோடு, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வசம் இருக்கும் பகுதிகளில் கடும் தாக்குதலை வெறிகொண்டு நடத்தி வருகிறது பிரான்ஸ்.

இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஏன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளே, தாக்குதலை கண்டு பிரான்ஸ் அரசு பயந்துவிடும். தங்களது மீதான தாக்குதலை குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மாறாக போர் பிரகடனம் செய்து, தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் தனது விமானம் தாங்கி போர்க்கப்பலான சார்லஸ் டி கல்லமையும் களமிறக்கியுள்ளது பிரான்ஸ். தற்போது கிழக்கு மத்திய தரைகடல் பகுதியை நோக்கி அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்து கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் மிகவும் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பலான சார்லஸ் டி கல்லே பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அணுசக்தி போர்க்கப்பல்

அணுசக்தி போர்க்கப்பல்

சார்லஸ் டி கல்லே விமானம் தாங்கி கப்பல் அணுசக்தியில் இயங்கும் மிக பிரம்மாண்டமான போர்க்கப்பல். இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்தது. அமெரிக்காவை தவிர்த்து, பிற நாடுகளில் இருக்கும் ஒரே அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுதான்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த சார்லஸ் டி கல்லே பெயர்தான் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. 1989ல் கட்டுமானம் துவங்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 2000ம் ஆண்டில் பிரான்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2007ம் ஆண்டில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டது.

வடிவம்

வடிவம்

260 மீட்டர் நீளமும், 64 மீட்டர் அகலமும் கொண்ட இந்த போர்க்கப்பல், 40,000 டன் எடை கொண்டது. இதன் ரகத்தில் மிக நீளமானது என்று குறிப்பிட முடியாவிட்டாலும், அதிகசக்திவாய்ந்து. கடந்த பல ஆண்டுகளாக நேட்டோ படையின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெற்றது.

Photo Credit: AFP/Getty

 விமானங்கள்

விமானங்கள்

ஒரே நேரத்தில் 40 விமானங்கள் வரை நிறுத்த முடியும். இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலில், ரஃபேல் எம், சூப்பர் எட்டன்டார்டு விமானங்களும், இ-2 என்ற வான்வழி தாக்குதல்களை முன்கூட்டியே எச்சரிக்கும் விமானம், என்எச் 90, கசேல்லே மற்றும் புமா ஆகிய ஹெலிகாப்டர்களும் உள்ளன.

Photo Credit: Wikipedia

விமானங்களின் ரேஞ்ச்

விமானங்களின் ரேஞ்ச்

ஒருமுறையில் ரஃபேல் எம் விமானம் 3,340 கிமீ தூரம் வரையிலும், சூப்பர் எட்டன்டார்டு விமானம் 1,682 கிமீ தூரம் வரையிலும் செல்லும் திறன் கொண்டவை.

Photo Credit: AP

விமானப் புறப்பாடு

விமானப் புறப்பாடு

ஒரு நிமிடத்துக்கு ஒரு விமானத்தை டேக் ஆஃப் செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 100 முறை விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை கொண்டது. இந்த கப்பலின் விமான ஓடுதளம் 195 மீட்டர் நீளம் கொண்டது.

Picture credit: USN/Wiki Commons

எரிபொருள் திறன்

எரிபொருள் திறன்

2007ல் மேம்படுத்தப்பட்டதற்கு பின்னர், 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணு உலைக்கு எரிபொருள் நிரப்பினால் போதுமானது. இந்த போர்க்கப்பலில் இருக்கும் பணியாளர்களுக்கு 45 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருக்கும்.

Picture credit: U.S. Navy

பணியாளர்கள்

பணியாளர்கள்

மாலுமிகள், போர் விமான பைலட்டுகள், கப்பல் பணியாளர்கள், வீரர்கள் உள்பட மொத்தம் 800 பேர் இந்த கப்பலில் இருக்கின்றனர். 500 டன் எடை கொண்ட ஆயுதங்களை வைப்பதற்கும், கையாள்வதற்குமான கிடங்கு வசதி உள்ளது.

Picture credit: U.S. Navy

வேகம்

வேகம்

மணிக்கு 50 கிமீ வேகத்தில் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் பயணிக்கும் வல்லமை படைத்தது.

Picture credit: U.S. Navy

தற்காப்பு திறன்

தற்காப்பு திறன்

இந்த போர்க்கப்பல் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவதை எதிர்கொள்வதற்காக ஏவுகணை லாஞ்சர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பிரத்யேகமான உளவு சாதனங்களும், தனி உளவு விமானத்தின் உதவியுடன் தன்னை தற்காத்து கொள்ளும் திறன் கொண்டது.

பிரான்ஸ் பலம்

பிரான்ஸ் பலம்

தற்போது ஜோர்டான் மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள தளங்களிலிருந்து 12 பிரான்ஸ் போர் விமானங்கள் சிரியாவிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாககுதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சார்லஸ் டி கில்லம் போர்க்கப்பலிலிருந்து மேலும் 20 விமானங்களை தாக்குதலில் களமிறக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மூன்று மடங்கு திறன்

மூன்று மடங்கு திறன்

சிரியா மட்டுமின்றி, ஈராக்கிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சார்லஸ் டி கில்லம் போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போர்க்கப்பலிலிருக்கும் விமானங்கள் தாக்குதலை துவங்கும்போது, தற்போதுள்ளதைவிட, மூன்று மடங்கு கூடுதல் உக்கிரமான தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகளின் மீது பிரான்ஸ் எடுக்க இருக்கிறது.

அதிபர் சூளுரை

அதிபர் சூளுரை

"ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் அச்சமூட்டுவது பற்றி நான் பேசவில்லை. அவர்களை முற்றிலுமாக அழிக்கப்படுவதே எமது நோக்கம்," என்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில், அந்நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே சூளுரைத்துள்ளார்.

இதர தொடர்புடைய செய்திகள்

01. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்...

02.புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் கல்வாரியின் சிறப்புகள்

03. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பல்...

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
France's nuclear-powered aircraft carrier Charles de Gaulle leaves its home port of Toulon, southern France, Wednesday, Nov.18, 2015. France has decided to deploy its aircraft carrier in the eastern Mediterranean sea for fighting Islamic State group. We compiled some interesting facts about the Chales De Gaulle war ship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X