உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

Written By:

உலகின் அதிவேக விமானமாக வலம் வந்த கன்கார்டு விமானத்தை போலவே, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தின் வரலாறும் ஆகிவிடும் போலிருக்கிறது. இயக்குதல் செலவு மிக அதிகமாக இருப்பதும், இதன் பிரம்மாண்ட உருவம் அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறக்குவதற்கான நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு பாதகமாக அமைந்துவிட்டன.

ஆனாலும், விமான தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய மாடலாகவே கருதப்படுகிறது ஏர்பஸ் ஏ380. இந்த இரண்டடுக்கு விமானத்தில் பறப்பதை பலரும் கனவாக கொண்டுள்ளனர். அவர்களுக்காக சில சுவாரஸ்யத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஏர்பஸ் ஏ380 விமானம் 72.7 மீட்டர் நீளமும், 80 மீட்டர் அகலமும், 24.1 மீட்டர் உயரமும் கொண்டது. அதாவது, ஒரு அடுக்குமாடி கட்டடத்திற்கு சக்கரத்தை பூட்டி நகர்த்துவது போலத்தான் இதன் உருவம் மிக பிரம்மாண்டமானது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 525 பயணிகளையும், 3000 சூட்கேஸ்களையும் எடுத்துச் செல்ல முடியும். சாதாரண வகுப்பு இருக்கைகளாகவே அமைத்தால், 850 பயணிகள் செல்ல முடியும். அதாவது, ஒரு பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை போல உட்பகுதியில் பயணிகள் அமர்ந்திருப்பர்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இரண்டடுக்கு விமானமாக கட்டமைப்பு கொண்டது. மேல் அடுக்கில் பிசினஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பு அறைகளும், கீழ் அடுக்கில் சாதாரண எக்கனாமி கிளாஸ் இருக்கைகளும் இருக்கின்றன. பிற விமானங்களை காட்டிலும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கால் வைப்பதற்கான கூடுதல் இடவசதி கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

நீண்ட தூர பயணங்களை இனிமையாக்கும் விதத்தில் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. முதல் வகுப்பில் எல்சிடி டிவி திரைகளும், சாதாரண வகுப்பில் ஒவ்வொரு இருக்கைக்கும் 10 இன்ச் திரைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்திற்கான இறக்கைகள் இங்கிலாந்திலும், உடல்கூடு மற்றும் வால் பகுதிகள் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பிரான்ஸ் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள ஏர்பஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்குவதற்கு 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ரோல்ஸ்ரா்ஸ் டிரென்ட் 900 மற்றும் பிராட் அண்ட் ஒயிட்னி அலையன்ஸ் ஜிபி7000 ஆகிய இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை வாடிக்கை நிறுவனங்கள் தேர்வு செய்து வாங்க முடியும். ஒரு எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் அளவுக்கு நீளமானது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தின் மைலேஜும் சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பயணி 100 கிமீ தூரம் பயணிப்பதற்கு 4.05 லிட்டர் எரிபொருள் செலவாகும். அதாவது, 525 பயணிகள் செல்லும் வசதி கொண்ட மாடலில்தான் இந்த கணக்கீடு. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,000 கிமீ தூரம் பயணிக்கும்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தில் 3.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 எரிபொருள் டேங்க்குகள் உள்ளன. வெறும் 40 நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி விட முடியும். பெரிய ரக பயணிகள் விமானங்களை ஒப்பிடும்போது இது மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான புகையையும் வெளியிடும்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தில் 5 உணவகங்கள் உள்ளன. 21 பணியாளர்கள் மூலமாக பயணிகள் சேவை கவனிக்கப்படுகிறது. பணியாளர்களுக்கான படுக்கை வசதியும் இந்த விமானத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானம் அதிகபட்சமாக 43,000 அடி உயரம் வரை பறக்கும். மணிக்கு 1,029 கிமீ வேகம் வரை செல்லும். சீராக செல்லும்போது 903 கிமீ வேகத்தில் பறக்கும். தரையிறங்கும்போது 240 கிமீ வேகத்தில் ஓடுபாதையில் இறங்கும். நிமிடத்திற்கு 4,500 அடி மேல் எழும்பும் திறன் கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தின் மூன்று முக்கிய உடல்பாகங்களை இணைப்பதற்கு 8,000 போல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4 மில்லியன் உதிரிபாகங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சப்ளை பெறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 320 மைல் நீளத்திற்கான மின்சார ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருமுறை வெளிப்புறத்தை பெயிண்ட்டிங் செய்ய வேண்டுமானால் 3,600 லிட்டர் பெயிண்ட் தேவைப்படும்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தின் பின்புறத்தில் தலா 6 சக்கரங்கள் கொண்ட இரண்டு லேண்டிங் கியர்களும், முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் கொண்ட லேண்டிங் கியர் அமைப்பும் உள்ளது. பின்புறத்தில் உள்ள லேண்டிங் கியர்கள் தலா 167 டன் எடையை தாங்கும் திறன் கொண்டவை.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இந்த விமானத்தை 60 மீட்டர் அகலமுடைய ஓடுபாதைகளில் இயக்க முடியும். மேலும், இந்த ஓடுபாதைகளில் 180 டிகிரி கோணத்தில் திருப்புவதற்கான வசதியும் உண்டு.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர், லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35, டஸ்ஸால்ட் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன ஏவியோனிக்ஸ் எனப்படும் மின்னணு கட்டுப்பாட்டு வசதியை பெற்றிருக்கும் முதல் வர்த்தக விமான மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதனால், பைலட்டுகள் மிக எளிதாக விமானத்தை கட்டுப்படுத்த முடியும்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

மேலும், வழக்கமான ஏர்பஸ் விமானங்களை போலவே காக்பிட் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, விமானிகளுக்கு விசேஷ பயிற்சி தேவையில்லை. ஏற்கனவே, ஏர்பஸ் விமானங்களை இயக்கும் விமானிகள் இந்த விமானத்தை எளிதாக இயக்க முடியும்.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஒரு ஏர்பஸ் ஏ380 விமானம் இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி விலை மதிப்பு கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பற்றிய சுவாரஸ்யங்கள்!
English summary
Fun Facts About Airbus A380 Plane. Read in Tamil.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark