சகல வசதிகளுடன் விற்பனைக்கு வந்த நடமாடும் கன்டெய்னர் இல்லம்!

By Saravana

வேன், பஸ் போன்றவற்றில் சகல வசதிகளுடன் கூடிய மோட்டார் இல்லங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தேவைக்கு தகுந்த வசதிகளுடன் இந்த மோட்டார் இல்லங்கள் கஸ்டமைஸ் செய்யப்படுகின்றன. ட்ரெயிலரை அடிப்படையாக்கொண்டும் சில மோட்டார் இல்லங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஜி- பாட் என்ற நிறுவனம் கப்பல் கன்டெய்னரை அடிப்படையாக் கொண்டு மோட்டார் இல்லத்தை அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் கன்டெய்னரை தொழிலாளிகள் வீடுகளாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த கன்டெய்னர் இல்லம் பன்முக பயன்பாட்டு அம்சங்களை கொண்டதாக வடிவமைத்து தருவதுதான் சிறப்பு. இந்த கன்டெய்னர் இல்லத்தின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


எங்கேயும்...

எங்கேயும்...

இந்த கன்டெய்னர் இல்லத்தை விரும்பிய இடத்தில் நிறுவலாம். வெறும் மூன்று மணிநேரத்தில் இந்த கன்டெய்னர் இல்லத்தை வேண்டிய இடத்தில் நிறுவவும், மீண்டும் பேக் செய்யவும் முடியும் என்கிறது ஜி- பாட்.

பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

வீடாக மட்டுமின்றி, கடைகள், சிறிய அலுவலகங்களாகவும் இதனை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கன்டெய்னரில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

வடிவம்

வடிவம்

20 அடி நீளம் கொண்ட இந்த கன்டெய்னரில் 12.5 சதரமீட்டர் உட்புற இடவசதி உண்டு. இதுதவிர, வெளிப்புறத்தில் 16.8 சதர மீட்டர் அளவுக்கு விரிவுப்படுத்திக் கொள்ளலாம். மொதத்தில் 34.8 சதுர மீட்டர் இடவசதியை பெற முடியும்.

 ஹைட்ராலிக் வசதி

ஹைட்ராலிக் வசதி

இந்த கன்டெய்னர் இல்லத்தின் மூன்று பக்கத்தை கைகளால் திறக்க முடியும். இல்லையெனில், ஒரு பொத்தானை அழுத்தினால் ஹைட்ராலிக் முறையில் திறக்கும் வசதியும் ஆப்ஷனலாக செய்து தரப்படுகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இந்த கன்டெய்னர் இல்லத்தில் படுக்கை வசதி, சமயலறை, எல்இடி விளக்குகள், சிறிய அலுவலக இடம், 7 கிலோ எடையுடைய வாஷிங் மெஷின், எரிவாயு மூலம் சுடுதண்ணீர் பெறும் வசதிகள் உள்ளன. இதுதவிர, விரிவுப்படுத்த வாயிலில் சிறிய ஸ்டூல்கள் மற்றும் சோபா ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு

இந்த கன்டெய்னர் இல்லத்தில் 6,400 லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டியும், சூரிய மின் உற்பத்தி வசதியும் உள்ளன. இந்த கன்டெய்னரின் இன்டிரியர் டிசைனில் முழுக்க முழுக்க மூங்கில் மூலப்பொருளாலான பர்னிச்சர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏசி வசதியும் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

விலை

விலை

49,000 அமெரிக்க டாலர் ஆரம்ப விலையிலிருந்து இந்த நடமாடும் கன்டெய்னர் இல்லம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


Most Read Articles
English summary
Hong Kong and Australia-based company G-pod has unveiled a new shipping container home that it hopes will stand out from the sizable competition thanks to a novel expandable design that increases usable floor space significantly. The G-pod Dwell can also operate off-grid and optional extras include a rainwater collection unit and solar array.
Story first published: Friday, September 12, 2014, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X