GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

உலக எலக்ட்ரிக் வாகன தினத்தில், சென்னையை சேர்ந்த எரிபொருள் தொழில்முனைவோர் நிறுவனமான கோஃப்யுல் பிரைவேட் லிமிடெட், எலக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறித்த கவலையை தீர்க்க சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டீசல் விநியோகிப்பதில் கோஃப்யுல் வெற்றியை ருசித்துவருகிறது. சென்னையில் மட்டும் தற்போதைக்கு இந்த டோர்ஸ்டெப் டீசல் திட்டத்தை செயல்படுத்திவரும் இந்த எரிபொருள் தொழில்முனைவோர் நிறுவனம் சமீபத்தில் இரு ஸ்மார்ட் டேங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இருந்தது.

இவற்றின் மூலமாக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 12,000 லிட்டர் டீசலை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது. இந்த ஹோம் டெலிவிரியில், கடந்த 5 மாதங்களில் 5.35 லட்ச டீசல்களை கோஃப்யுல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்துள்ளது. மேலும் இதன் வாயிலாக ரூ.5 கோடி வரையிலான வருவாயை இந்த சென்னை எரிபொருள்-தொழில்முனைவு நிறுவனம் ஈட்டியுள்ளது.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

அஸ்ஸாம், ஆந்திரா பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ‘கோ ஃப்யுலர்ஸ்' (GoFuelers) போன்ற திட்டங்களை கோஃப்யுல் நிறுவனம் மேற்கொண்டுவந்தாலும், இந்த சென்னை எரிபொருள் நிறுவனத்தின் டீசல் டோர்ஸ்டெப் டெலிவிரி தான் நாடு முழுவதும் வேகமாக வளர்ந்துவரக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது, வேகமாக வளர்ச்சி கண்டுவரும் எலக்ட்ரிக் போக்குவரத்திற்கு ஏற்ப தனது வணிகத்தை மாற்றி கொள்ள புதிய முயற்சியை கோஃப்யுல் கையில் எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்த திட்டமிட்டுவரும் கோஃப்யுல் நிறுவனம் இதற்காக உள்நாட்டில் சூரிய EPC விநியோகஸ்தர்கள் & இடமாற்றம் செய்யக்கூடிய சார்ஜிங் பாக தயாரிப்பாளர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

அத்துடன் ஐரோப்பாவை சேர்ந்த சார்ஜர் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடனும் கூட்டணி சேரும் பேச்சுவார்த்தையில் கோஃப்யுல் உள்ளது. இதன் மூலமாக முழுக்க முழுக்க சூரிய ஒளியின் மூலமாக இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இவி மொபைல் சார்ஜிங் தீர்வை பெற முடியும் என இந்த நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஐரோப்பிய கூட்டணி நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 15,000 சார்ஜிங் நிலையங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கூட்டணியின் மூலமாக கிடைக்கும் சார்ஜிங் தீர்வினால் எலக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறித்த கவலை தீர்வது மட்டுமின்றி, எலக்ட்ரிக் இயக்கத்திற்கான மாற்றமும் வேகமாக நிகழும்.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

இந்த வகையில் வாடிக்கையாளர்கள் கோஃப்யுல் மொபைல் செயலியில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சார்ஜிங்கிற்கான தீர்வினை பெறலாம் என்கிறது கோஃப்யுல். இந்த நிறுவனத்தின் துணை பிராண்ட், கோ எலக்ட்ரிக். இந்த பிராண்டில் இருந்து தான் நகரக்கூடிய சார்ஜிங் நிலையமாக ‘சார்ஜ்-ஆன்-தி-கோ' தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

இது ஒரு புதுமையான இவி ‘சார்ஜிங்-ஆன்-டிமாண்ட்' அணுகுமுறையை பின்பற்றுகிறது மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது தொலைநிலை கண்காணிப்பு, போக்குவரத்து ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. 240 VAC முதல் 480 VAC வரையிலான உள்ளீட்டு தேவைகளுடன் 200 கிலோவாட்ஸ் வரை சார்ஜிங் வேகத்தை வழங்கும் வகையில் இந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

ப்ளக் & சார்ஜ் சிஸ்டம் 4-சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களின் தேவைக்கேற்ற சார்ஜ் தேவைகளை நிவர்த்தி செய்யும். குறிப்பாக அவசரகால சார்ஜிங் தேவைப்படுபவர்களுக்கு இது உதவும். உதாரணமாக, சாலையில் ஒரு எலக்ட்ரிக் வாகனம் சார்ஜ் இல்லாமல், நகர்த்த முடியாமல் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

கியர்பாக்ஸ் இல்லாததால், அத்தகைய வாகனங்களை தள்ளவோ அல்லது இழுக்கவோ முடியாது. அத்தகைய சூழ்நிலையில் இருந்து எளிமையாக விடுபட கோஃப்யுலின் ‘சார்ஜ்-ஆன்-தி-கோ' என்ற இருக்கும் இடத்திற்கே வந்து தேவைக்கேற்ப சார்ஜ் செய்வது மட்டுமே தீர்வாகும். மறுபக்கம் 2-சக்கர மற்றும் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, கடைசி மைல் விநியோகங்களுக்கு உதவும் வகையில் புதுமையான ஸ்வாப்-ஆன்-தி-கோ என்ற தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது.

GoFuel நிறுவனத்தின் நகரும் சார்ஜிங் நிலையம்!! சார்ஜ்-ஆன்-தி-கோ என்ற பெயரில் அறிமுகம்

கடைசி மைல் டெலிவிரி ஆப்ரேட்டர்கள் மற்றும் வணிக பயனர்கள் இதன் மூலம் அடையும் நன்மைகள் என்று பார்த்தால்,

  • காலப்போக்கில் பெரும் சேமிப்பு
  • எந்த சார்ஜிங் நிலையத்திற்கோ அல்லது இடமாற்ற நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை.
  • சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இயக்கம் - புதுப்பிக்க முடியாத ஆற்றலுக்கு பதிலாக சூரிய சக்தியால் இயங்கும் பேட்டரி சார்ஜிங்
  • இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் இவ்வாறான வணிகங்களும் இருப்பதினால், கோஃப்யுல் நிறுவனம் 4-சக்கர, 3-சக்கர மற்றும் 2-சக்கர வாகனங்களை குத்தகைக்கு விடுதல் போன்ற புதிய முயற்சிகளை கையில் எடுக்கவுள்ளது.

Most Read Articles
English summary
GoFuel Celebrates World EV Day
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X