தீவிரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கப்போகும் கூகுள் ரோபோ!

Written By:

இயந்திர மனிதன் என்று அழைக்கப்படும் ரோபாட்கள் மனித வாழ்வியலில் மிகவும் ஒன்றினைந்த ஒரு கருவியாகவே மாறிவிட்டன.

மனிதனின் பல்வேறு தேவைகளும் இன்று ரோபாட் உதவியுடனே நடைபெற்றுவருகின்றன. இவை தொழிற்சாலை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மனிதனுக்கு பேருதவி ஆற்றி வருகின்றன.

கூகுள் உருவாக்கியுள்ள புதிய ரோபோ

புதிது புதிதாக பல்வேறு கண்டுபிடிப்புகள் களம் கண்டு வரும் இன்றைய சூழலில், கூகுளின் துணை நிறுவனமான ‘பாஸ்டன் டைனமிக்ஸ்' நிறுவனம் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளது. இது இரண்டு வீல்கள் பொருத்தப்பட்ட நான்கு கால்கள் கொண்டதாக உள்ளது.

கூகுள் உருவாக்கியுள்ள புதிய ரோபோ

‘ஹேண்டில்' என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, மிகவும் வலிமை வாய்ந்ததாகும், இதனால் குதிக்க முடியும், தடைகளை தாவி குதிக்க, படிகளில் இலகுவாக இறங்க, மேசை மீது தாவ என பல்வேறு வேலைகளையும் ஒரு மனிதனை போன்றே செய்ய முடியும். தற்போது உள்ள ரோபோக்கள் இந்த அளவுக்கு வேளைகளை செய்ய முடியாதவையாகவே இருக்கின்றன.

கூகுள் உருவாக்கியுள்ள புதிய ரோபோ

இந்த ரோபோ அதிகபட்சமாக மணிக்கு 14.5 கிமீ வேகத்தில் செல்ல முடியும், மனிதனைப் போலவே சாய்வாகவும் செல்ல உடியும். மேலும் இதன் முன்னங்கால்கள் கொண்டு 45 கிலோ எடையை சர்வசாதாரணமாக இந்த ரோபோ தூக்குகிறது.

கூகுள் உருவாக்கியுள்ள புதிய ரோபோ

இந்த பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தான் அமெரிக்க ராணுவத்திற்காக ரோபோக்களை தயாரித்து கொடுக்கின்றன.

இந்த ஹேண்டில் ரோபோ அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும் போது, போர்க்களத்தில் தீவிரவாதிகளுக்கு செம்மசொப்பனமாக விளங்கும் என்பது நிதர்சனம்.

புதிய 2017 மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்: 

English summary
Google's new robot is considered nightmare-inducing by its own creator.
Story first published: Friday, March 3, 2017, 12:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark