ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் புதிய எஸ்-400 ஏவுகணைகளின் சிறப்புகள்!

Written By:

ரூ.39,000 கோடி மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 நவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்புத் துறை கொள்முதல் பிரிவு அனுமதி வழங்கியிருக்கிறது.சீனா, பாகிஸ்தான் எல்லோயோரங்களில் இந்த புதிய ஏவுகணை நிலைகளை நிறுத்துவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் நுழையும் எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை வழிறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த எஸ்-400 ஏவுகணை மற்றும் அதன் ஏவு தள அமைப்பு குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரஷ்யாவின் முக்கிய அஸ்திரம்

ரஷ்யாவின் முக்கிய அஸ்திரம்

சமீபத்தில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி வீழ்த்தியது நினைவிருக்கலாம். எனவே, துருக்கி போர் விமானத்தை வீழ்த்தி தீர்த்துக் கொள்ள ரஷ்யா துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தனது எஸ்-400 ஏவுகணையை சிரியாவில் ரஷ்யா நிலைநிறுத்தியிருக்கிறது. இது எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

Picture credit: Соколрус/Wiki Commons

ஏவுகணையின் ரேஞ்ச்

ஏவுகணையின் ரேஞ்ச்

ஒவ்வொரு ஏவுகணை மற்றும் அதனை செலுத்து அமைப்பின் மூலமாக 400 கிமீ தூரத்தில் வரும் எதிரிநாட்டு விமானங்கள், ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது. அதேபோன்று, அதிகபட்சமாக 185 கிமீ உயரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும்.

Picture credit: Goodvint/Wiki Commons

ஒருங்கிணைந்த அமைப்பு

ஒருங்கிணைந்த அமைப்பு

எஸ்-400 ஏவுகணை மற்றும் அதனை செலுத்துவதற்கான லாஞ்சர், ரேடார் உள்ளிட்டவை ஒருங்கிணைந்த முறையில் எஸ்-400 மிஸைல் சிஸ்டம்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இதில், 5 எஸ்-400 மிஸைல் சிஸ்டம்ங்களை இந்தியா வாங்குகிறது.

Picture credit: UMNICK/Wiki Commons

ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைகளின் சிறப்புகள்

மொத்தம் 5 எஸ்-400 மிஸைல் சிஸ்டம்களை இந்தியா வாங்க உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரும் மூன்று எஸ்-400 மிஸைல் சிஸ்டம்களையும், இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சீன எல்லையோரும் இரண்டு எஸ்-400 மிஸைல் சிஸ்டம்களும் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Picture credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

மூன்று வகைகளின் விபரம்

மூன்று வகைகளின் விபரம்

எஸ்-400 ஏவுகணை அதன் பயணிக்கும் தூரத்தை வைத்து மூன்று ரகங்களில் குறிப்பிடப்படுகிறது. அவை நீண்ட தூரம் சென்று இலக்குகளை அழிக்க வல்ல 40N6 48N6 ஆகியவையும், 9M96 என்ற எஸ்-400 வகை ஏவுகணை குறைந்த தூர இலக்குகளுக்கும் பயன்படுத்தப்படும்.

Picture credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

தாக்கும் திறன்

தாக்கும் திறன்

எஸ்-400 ஏவுகணைகளில் 40N6 மற்றும் 48N6 ஆகியவை 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டவை. 9M96 என்ற எஸ்-400 ஏவுகணை குறைந்த தூர இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும். அதாவது, 9M96E ஏவுகணை 40 கிமீ தூரம் வரையிலும், 9M96E2 என்ற வகை ஏவுகணை 120 கிமீ வரையிலும் பயணித்து இலக்குகளை அழிக்கும்.

Picture credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

வேகம்

வேகம்

எஸ்-400 ஏவுகணைகள் அதிகபட்சமாக வினாடிக்கு 4.8 கிமீ வேகம் என்ற அசுரத்தனமாக பறந்து செல்லும். மேலும், இலக்குகளை மிகவும் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வல்லமை கொண்டது.

Picture credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

தயார் நிலை

தயார் நிலை

எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் வருவது ரேடார் மூலமாக கண்டறியப்பட்டால், வெறும் ஒரு நிமிடத்திலிருந்து, 3 நிமிடத்திற்குள் ஏவுவதற்கு தயாராகிவிடும்.

Picture credit: Соколрус/Wiki Commons

ஒப்பந்தம் எப்போது?

ஒப்பந்தம் எப்போது?

தற்போது மத்திய பாதுகாப்புத் துறையின் கொள்முதல் பிரிவு அனுமதி வழங்கியிருந்தாலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். எனவே, அதற்கு சில காலம் பிடிக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Picture credit: Goodvint/Wiki Commons

சீனாவிடம் ஆறு...

சீனாவிடம் ஆறு...

ஏற்கனவே, ரஷ்யாவிடமிருந்து 6 எஸ்-400 மிஸைல் சிஸ்டம்களை சீனா வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, எல்லையோரத்தை பலப்படுத்த இந்த திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை உடனடியாக அனுமதி வழங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

Picture credit: UMNICK/Wiki Commons

 
மேலும்... #military #ராணுவம்
English summary
The Central government has approved the Rs 39,000-crore acquisition of five advanced Russian S-400 Triumf air defence missile systems, which have even rattled NATO countries.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark