அதிவேகமாக செல்லும் வாகனஓட்டிகளை தடுக்க மக்கள் மேற்கொண்ட நூதன முயற்சி!

Written By:

பொதுவாகவே சலையில் செல்வோர் அதிக வேகத்தில் செல்வது அன்றாடம் நாம் காணக்கூடிய நிகழ்வாகும். அவ்வாறாக செல்வோரால் பல நேரங்களில் நடந்து செல்வோரோ அல்லது மற்றவர்களோ தான் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

இதைப்போலவே, அதிவேகத்தால் செல்வோரால் ஏற்படும் பிரச்சனையை ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ‘ஹோப்மென்' என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த மக்கள் நூதன வகையில் கையாண்டுவருகின்றனர்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

அந்த நகரின் வழியாக செல்லும் ஒரு முக்கியச் சாலையின் அதிகபட்ச வேகவரம்பாக மணிக்கு 48கிமீ என்றே நிர்னயிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதைவிட இரண்டு மடங்கான வேகத்தில் , ஏறத்தாழ 100 கிமீ-க்கும் கூடுதலான வேகத்தில் தான் அந்நகரை வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

இதனால் அந்த சாலையை கடக்கும் நகர மக்கள் விபத்துகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர். இதனை தடுக்க பலமுறை காவல்துறையிடம் முறையிட்டு தீர்வு கிடைக்காததால், பிரச்சனையை சமாளிக்க அவர்களாகவே ஒரு நூதன செயலில் இறங்கியுள்ளனர்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து காவலர்களை கண்டால் சிறிது அச்சம் கொள்வது இயல்பானதே, அதனை மனதில் கொண்டு இந்நகர மக்கள் காவலர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் பாணியை கையிலெடுத்துள்ளனர்.

நூதன முறை

நூதன முறை

தொலைவில் இருப்பவர்கள் அடையாளம் காணும் வகையிலான ஃபிளாரசண்ட் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு, முடியை உலர்த்தும் ஹேர் டிரையரை கையில் வைத்துக்கொண்டு வாகனங்களில் வருவோரை நோக்கி அதனை

நீட்டியவாறு நிற்கின்றனர் இந்நகர மக்கள் பிரதிணிதிகள்.

எதற்காக இப்படி செய்கின்றனர்?

எதற்காக இப்படி செய்கின்றனர்?

போக்குவரத்து காவலர்கள் ஹேர் டிரையர் போன்ற காட்சிதரும் ‘ஸ்பீடு கன்' எனப்படும் வேகஅளவீட்டு சாதனத்தை வைத்து தான் அதிவேகத்தில் வரும் வாகங்களின் வேகத்தை கணக்கிடுவர். இதற்காக அவர்கள் சாலை ஓரத்தில் ஒளியை எதிரொலிக்கும் மேலாடையான ஃபிளாரசண்ட் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு இந்த பணியில் ஈடுபடுவர். வேகவரம்பை மீறுவோர்க்கு அபராதமும் விதிக்கப்படும்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

தற்போது போக்குவரத்து காவலர்கள் செய்ய வேண்டிய வேலையை, இந்நகர மக்கள் தாங்களாகவே ஒரு குழு அமைத்து சுழற்சி முறையில் செய்து ஒருவரை சாலையில் நிற்க வைக்கின்றனர். மக்களின் இந்த நூதன செயலால், வாகன ஓட்டிகள் இந்நகரத்தை கடக்கும் போது அபராதத்திற்கு பயந்து தங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்தே செல்கின்றனர்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உள்ளது, பெரியவர்கள் மட்டும் இந்த செயலில் ஈடுபடவில்லை, அந்நகர சிறுவர் சிறுமியரும் கூட போலீஸ் போன்ற தோற்றத்தில் மக்களை எச்சரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

இது குறித்து அந்நகர கவுன்சிலர் கூறுகையில், "மக்களின் இந்த முயற்சி, இப்பிரச்சனையின் ஆழத்தை உணர்த்துகிறது, குழந்தைகளும் கூட இச்செயலில் ஈடுபட்டிருப்பது கவனிக்கத்தது எனவும், அதிவேகத்தில் செல்ல நினைப்போர் பொதுமக்கள் உபயோகிக்கும் சாலைகளில் அதிவேகத்தில் இயக்குவதை விட அதற்கான ரேஸ் ட்ராக்கில் வாகங்களை ஓட்டுவது சிறந்தது" என்றார்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த நூதன முயற்சி!

மேலும், இது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மெர்சிடஸ்-ஏஎம்ஜி ஜிடிஆர் காரின் படங்கள்: 

English summary
People decided to take the law into their hands after motorists kept ignoring the speed limit.
Story first published: Friday, February 24, 2017, 12:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more