இந்தியாவின் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்!

Written By:

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பது குறித்து செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தை விட அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை இந்தியா வடிவமைத்து வருகிறது.

ரஷ்யாவின் கூட்டணியில் ஐந்தாம் தலைமுறை சுகோய் போர் விமானம் தயாரிக்கும் பணி ஒருபுறம் இருந்தாலும், இந்த புதிய விமானம் நம் நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து வெளிநாட்டு போர் விமானங்களுக்கும் மாற்றாக இது சேர்க்கப்பட உள்ளது. இந்த விமானம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

Advanced Medium Combat Aircrat[AMCA] என்று குறிப்பிடப்படும் இந்த போர் விமானத் திட்டம் மிக நவீன ரக போர் விமானத்தை உருவாக்கும் நோக்கில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ரூ.25,000 கோடி மதிப்புடைய திட்ட வரைவு டிஆர்டிஓ அமைப்பால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

நடுத்தர வகை

நடுத்தர வகை

தேஜஸ் போர் விமானம் இலகு வகையை சேர்ந்தது. ஆனால், புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நடுத்தர வகையிலான போர் விமானம். இது 25 டன் எடை கொண்டதாக இருக்கும். குண்டு வீச்சு, எதிரி விமானங்களை இடைமறித்தல், வான் பகுதியை கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட பல்வகை திறன் கொண்ட போர் விமானம்.

ஐந்தாம் தலைமுறை

ஐந்தாம் தலைமுறை

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம், எதிரி நாட்டு ரேடார் கண்களில் சிக்காமல், இலக்குகளை தாக்கிவிட்டு தப்பித்து வருவது. அதனை இந்த விமானம் திறம்பட செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிரி நாட்டு ரேடார்களிலும் சிக்காத வடிவமைப்பும், ஏவுகணை தாக்குதல்களை மோப்பம் பிடிக்கும் ரேடார்கள், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.

பணிகள்

பணிகள்

2008ம் ஆண்டு இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டு 2011ல் பணிகள் துவங்கப்பட்டன. 2014ம் ஆண்டு பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 2013ம் ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியில் 1:8 என்ற விகிதத்திலான இதன் ஸ்கேல் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு இந்த புதிய போர் விமானத்தின் புரோட்டோடைப் மாடலை பறக்கவிட்டு சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி தேவை

நிதி தேவை

இந்த போர் விமானத்தை உருவாக்க ரூ.25,000 கோடி நிதி தேவைப்படும் என்று டிஆர்டிஓ மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 15 ஆண்டுகளில் இந்த புதிய போர் விமானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வரும் 2023-24ம் ஆண்டில் முழுமையான போர் விமானமாக தயாராகி முறைப்படி பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படும்.

கடற்படை ஆர்வம்

கடற்படை ஆர்வம்

இந்திய விமானப்படைக்காக இந்த புதிய போர் விமானத்தின் தொடங்கப்பட்ட நிலையில், இந்த விமானத்தை பெறுவதற்கு இந்திய கடற்படையும் ஆர்வம் தெரிவித்ததுடன், பணிகளில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தது. மேலும், விமானம் தாங்கி போர் கப்பல்களிலில் இருந்து இயக்குவதற்கான மாடலை தயாரிப்பதற்கான தேவைகளையும், ஆலோசனைகளையும் டிஆர்டிஓ அமைப்பிடம் கடற்படை வழங்கி வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

தேஜஸ் போர் விமானம் ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இரட்டை எஞ்சின்கள் கொண்டதாக இருக்கும். ரோல்ஸ்ராய்ஸ், ஜிஇ, ஸ்நெக்மா உள்ளிட்ட எஞ்சின் தயாரிப்பு நிறுவனங்களுடன் டிஆர்டிஓ பேச்சு நடத்தி வருகிறது. இந்த விமானத்திற்கு 110கேஎன் த்ரஸ்ட் பவரை வழங்க வல்ல எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.

வேகம்

வேகம்

மணிக்கு 2,665 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமையை பெற்றிருக்கும். அதிகபட்சமாக 1,650 கிமீ வேகம் வரை இயக்க முதலில் அனுமதிக்கப்படும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 1,800 கிமீ தூரம் வரை பறக்கும். 1,000 கிமீ சுற்றளவுக்கு போரில் பயன்படுத்த முடியும்.

முதல் பிரிவு

முதல் பிரிவு

ஏஎம்சிஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஐந்தாம் தலைமுறை சுதேசி போர் விமானங்கள் கொண்ட முதல் பிரிவு 2025ம் ஆண்டு அமைக்கப்பட உள்ளது. அதன்பிறகு நாட்டின் முக்கியப் பகுதிகளில் இந்த போர் விமானங்கள் அடங்கிய படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்படும்.

சொந்த போர் விமானங்கள்

சொந்த போர் விமானங்கள்

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டு பழமையாகிவிட்ட மிக்-21 மற்றும் மிக்-23 விமானங்களுக்கு பதிலாக தற்போது தேஜஸ் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது. அதேபோன்று, இந்திய விமானப்படையில் உள்ள ஜாகுவார், மிராஜ்2000, மிக்-27 பகதூர் உள்ளிட்ட அயல்நாட்டு போர் விமானங்களுக்கு மாற்றாக இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சேர்க்கப்பட உள்ளது. மொத்தத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் சொந்த தயாரிப்பு போர் விமானங்களே ஆதிக்கம் செலுத்தும்.

 

Via

மேலும்... #ராணுவம் #military
English summary
Some fHAL Advanced Medium Combat Fighter Aircraft (AMCA)

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark