ஹார்லி டேவிட்சன்.. தெரிந்த பிராண்டு, தெரியாத உண்மைகள்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் பிராண்டு தனித்துவமான வரலாறு கொண்டது. 1904ம் ஆண்டு வில்லியம் எஸ் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் என்பவர்களால் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட 110 ஆண்டுகள் ஆகியும் ஸ்திரமான மார்க்கெட்டுடன் பீடு நடைபோடுகிறது. ஹார்லியின் குரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு உலக அளவில் பெரும் தொகையிலான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தரம், ஸ்டைல் மற்றும் பவர் உள்ளிட்டவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் நூற்றாண்டு கண்ட ஹார்லி டேவிட்சன் வரலாற்றிலும் ஏராளமான சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் பகிரந்து கொள்கிறது. பலரது கனவாக திகழும் ஹார்லி டேவிட்சனின் சுவாரஸ்ய தகவல்கள், ஹார்லியின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் என அனைத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

மதிமயங்கச் செய்யும் தோற்றம்

மதிமயங்கச் செய்யும் தோற்றம்

முதல் பார்வையிலேயே மதி மயங்கச் செய்யும் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டு வரும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளின் சுவாரஸ்யங்கள் அடுத்தடுத்து காணலாம்.

ஹார்லி டேவிட்சன் உதயம்

ஹார்லி டேவிட்சன் உதயம்

21வயதே நிரம்பிய வில்லியம் எஸ் ஹார்லிதான் ஹார்லி பைக்குக்கான முதல் எஞ்சினை டிசைன் செய்தவர். இந்த எஞ்சின் மிதிவண்டியின் பிரேமில் பொருத்துவதற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஆர்தர் டேவிட்சனுடன் இணைந்து ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை 1904ம் ஆண்டு துவங்கினார்.

முதல் மோட்டார்சைக்கிள்

முதல் மோட்டார்சைக்கிள்

10*15 அளவில் மரத்தால் ஆன கட்டடம் கொண்ட இடத்தில்தான் முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் 1904ல் தயாரிக்கப்பட்டது. இதுதான் அந்த நிறுவனத்தின் முதல் ஆலையும் கூட.

 முதல் வாடிக்கையாளர்

முதல் வாடிக்கையாளர்

அமெரிக்காவின், விஸ்கன்சின் மாகாணத்தை சேர்ந்த ஹென்றி மேயர்தான் ஹார்லி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர்.

முதல் டீலர்ஷிப்

முதல் டீலர்ஷிப்

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் சி.எச்.லாங் என்பவர் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப்பை துவங்கினார்.

பிரபலமானது எப்படி?

பிரபலமானது எப்படி?

1905ம் ஆண்டு முதன்முறையாக ஹார்லி டேவிடன்சன் நிறுவனம் ரேஸ்களில் பங்கேற்க துவங்கியது. பலவிதமான பைக் ரேஸ் பந்தயங்கள் மூலம் ஹார்லி டேவிட்சன் புகழ் வெகு சீக்கிரமாக பரவத்துவங்கியது.

புதிய ஆலை

புதிய ஆலை

1906ம் ஆண்டில் 6 தொழிலாளர்களை பணியமர்த்தி புதிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையை ஹார்லி டேவிட்சன் அமைத்தது. 1910ம் ஆண்டில் இந்த ஆலையில் முழு நேரமாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ஹார்லி பைக் ஓட்டிய முதல் பெண்

ஹார்லி பைக் ஓட்டிய முதல் பெண்

நம் நாட்டில் தற்போது ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்கும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர்.நம் நாட்டில் ஹார்லி மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் சில பெண்கள் பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம். ஆனால், ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை ஓட்டிய முதல் பெண் யார் தெரியுமா? ஹார்லி டேவிட்சனின் நிறுவனர்களில் ஒருவரான ஆர்தர் டேவிட்சனின் அத்தை ஜானத் டேவிட்சன்தான் ஹார்லி பைக் ஓட்டிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். அது மட்டுமல்லாது ஹார்லி மோட்டார்சைக்கிள்களில் பிராண்டு பெயரை பொறிப்பதற்கும், எழுதுவதற்குமான ஐடியாவை கொடுத்து உதவியவரும் இவரே.

 முதல் வி டிவின் எஞ்சின்

முதல் வி டிவின் எஞ்சின்

1909ம் ஆண்டு முதல் வி டிவின் எஞ்சினுடன் கூடிய முதல் மோட்டார்சைக்கிளை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்தது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

ஹார்லியின் மீது பைத்தியம்

ஹார்லியின் மீது பைத்தியம்

பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழின் நிறுவனர் மால்கம் ஃபோர்ப்ஸ் ஹார்லியின் மோட்டார்சைக்கிள் மீது பைத்தியமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தம் அவரிடம் 50 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் இருந்தன. அது மட்டுமல்ல, தனது நண்பர்கள் ஏராளமானோருக்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

 அன்னிய தேசத்தில்...

அன்னிய தேசத்தில்...

ஹார்லி துவங்கப்பட்டு 94 ஆண்டுகள் கழித்துத்தான்1998ல் அமெரிக்காவை விட்டு முதன்முறையாக வெளிநாட்டில் ஹாரில் பைக்குகள் அசெம்பிளிங் செய்யப்பட்டன. பிரேசில் நாட்டிலுள்ள மணஸ் என்ற இடத்தில் தனது முதல் அயல்நாட்டு அசெம்பிளிங் ஆலையை ஹார்லி டேவிட்சன் அமைத்தது.

ஹார்லியின் காஸ்ட்லி பைக்

ஹார்லியின் காஸ்ட்லி பைக்

ஹார்லி டேவிட்சனின் காஸ்ட்லியான மோட்டார்சைக்கிளாக சிவிஓ அல்ட்ரா எலக்ட்ரா கிளைடு கருதப்படுகிறது. ரூ.22 லட்சத்துக்கும் அதிகமாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவில் விற்பனையாகும் மாடல்கள்

இந்தியாவில் விற்பனையாகும் மாடல்கள்

ஹரியானாவில் ஆலை அமைத்து ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை அசெம்பிளிங் செய்து விற்று வருகிறது. இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்து வரும் மாடல்களையும், விலை விபரத்தையும் அடுத்தடுத்த படங்களில் காணலாம்.

 சூப்பர் கிளைடு கஸ்டம்

சூப்பர் கிளைடு கஸ்டம்

தயாரிப்பாளரின் ஆலையில் கஸ்டமைஸ் செய்யப்பட்டு வெளிவந்த முதல் பைக். ரூ.11.71 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்ட்ரீட் பாப்

ஸ்ட்ரீட் பாப்

சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட ஹார்லி பைக். ரூ.10.16 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

ரோடு கிங்

ரோடு கிங்

ரூ.22.81 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

 நைட் ரோடு ஸ்பெஷல்

நைட் ரோடு ஸ்பெஷல்

ரூ.19.86 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

அயர்ன் 883

அயர்ன் 883

ரூ.6.71 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக்

ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக்

ரூ.20.51 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபார்ட்டி எயிட்

ஃபார்ட்டி எயிட்

ரூ.8.76 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

ஃபேட் பாய் ஸ்பெஷல்

ஃபேட் பாய் ஸ்பெஷல்

ரூ.20.01 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஃபேட் பாய்

ஃபேட் பாய்

டிவின் காம் எஞ்சின் கொண்ட இந்த பைக் எந்தவொரு சாலைக்கும் ஏற்றதாக இருக்கும். ரூ.12.81 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

883 ரோட்ஸ்டெர்

883 ரோட்ஸ்டெர்

ரூ.7.71 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

 சூப்பர் லோ

சூப்பர் லோ

ரூ.5.71 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

Most Read Articles
English summary
There are several tit bits about Harley-Davidson that very few know. Drivespark wants to share some Harley Davidson facts that you probably did not know. Flip through the photo feature below to read some interesting Harley-Davidson facts along with beautiful images of the motorcycle that we all dream to ride.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X