ஹார்லி டேவிட்சன் பெண் உரிமையாளர்களுக்கான முதல் குழு இந்தியாவில் துவக்கம்!

ஹார்லி டேவிட்சன் பெண் உரிமையாளர்களுக்காக பிரத்யேக குழு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. அதைக்குறித்து தற்போது பார்க்கலாம்

By Azhagar

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழு (HOG), நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இயங்கி வருகிறது, உலகளவில் HOG அமைப்பு பல இடங்களில் நிறுவப்பட்டுயிருக்கிறது.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

ஃபிரீயாக ரைட் போகலாம் என்பது தற்போதைய காலத்தில் அனைவரது கனவு. அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் பயணத்திற்கான முதல் தேவை ஒரு வண்டி தான், அந்த வண்டி ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளாக இருக்கவேண்டும் என்பது பெரும்பாலனவர்களின் எதிர்பார்ப்பு.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

ஹார்லி டேவிட்சன் வண்டிகளை சொந்தமாக்கிக் கொள்ள பலரும் ஏக்கம் கொண்டுயிருக்க, அதற்கு ஏற்றவாறான மார்கெட்டிங்கை அவ்வப்போது அந்நிறுவனம் செய்து வருகிறது. இம்முறை இளைஞர்களை, தாண்டி ஹார்லி டேவிட்சன் தனது மார்க்கெடிங்கை விரிவுப்படுத்த டார்கெட் செய்திருப்பது பெண்களை.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் அனைவரும் ஹார்லி ஓனர்ஸ் குரூஃப் (HOG) என்ற அமைப்பை உலகளவில் வைத்திருக்கிறார்கள். இதில் ஆரம்பக் காலம் முதல் பெண்கள் இருந்தாலும், சமீபத்தில் இந்தியப் பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தை உணர்ந்து HOG, இந்த பெண் உரிமையாளர்கள் குழுவை தொடங்கியிருக்கிறது.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

இந்தியாவில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 28வது அமைப்பாக தொடங்கப்பட்டுள்ள லேடீஸ் ஆஃப் ஹார்லி (LOH) அமைப்பிற்கு இயக்குநராக பல்லவி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். "புல்லட்டுகளில் ஜாலி ரைட் செல்ல ஆண்களுக்கு சமமாக பெண்களும் ஆதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அதனால் ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கவேண்டும் என்ற எண்ணமும் பெண்களிடம் உள்ளது" என தெரிவிக்கிறார்.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

பெண் சுதந்திரத்தை அனைவரும் பேசிக்கொண்டுயிருக்கும் இந்த வேளையில், பெண்கள் மோட்டர் சைக்கிள்களை ஓட்டும் திறன் அறிந்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முயற்சி பலருக்கும் ஒரு ஊக்கசக்தியாக இருக்கும் என்கிறார் LOH இயக்குநர் பல்லவி சிங்.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு, பெண் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்காக மட்டுமே செயல்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் மீது பெண்களின் ஆர்வத்தை தொடர்ந்து அதிகரிக்கும் வகையிலும், ரைட்டிங்கின் மீது பெண்களுக்கு இருக்கும் பேஷனை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் விதத்திலும் பல செயல்பாடுகளை கொண்டுள்ளது LOH.

ஹார்லிடேவிட்சன் பெண் உரிமையாளர்கள் குழு துவக்கம்!

தேசியளவில் தனது செயல்பாடுகளை கொண்டுசெல்ல LOH பல்வேறு பிரச்சார யுக்திகளை வைத்துள்ளது. அதில் ஃபீரி ரைட்டிங்க் திட்டமும் முதன்மையான ஒன்று, மேலும் ரைட்டிங் சென்று வருபவர்களின் உணர்வுகளை, வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அனுபவத்தையும் பெண்களுக்கு LOH ஏற்படுத்தி தரவுள்ளது.

எங்களத் தளத்தில் பலரால் அதிக முறை பார்க்கப்பட்ட மிரட்டலான தோற்றம் கொண்ட பைக் மற்றும் மோட்டார் சைக்கள்களை காண கீழே உள்ள புகைப்படங்களை க்ளிக்குங்கள்.

Most Read Articles
English summary
The Harley Owners Group (HOG) is a sponsored community marketing club. The community is operated by Harley-Davidson and is spread all over the globe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X