துபாய விடுங்கோ... ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய குஜராத் போலீஸ்!

Written By:

துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் போலீசார் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்ககளை வாங்குவது பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது. அப்படி, வெளிநாடுகளை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்ட நம்மவர்களுக்கு ஓர் குட் நியூஸ்.

அதாவது, நாட்டிலேயே முதல்முறையாக விலையுயர்ந்த பைக்குகளை குஜராத் போலீசார் வாங்கியிருக்கின்றனர். போலீசாரின் தேவைகளுக்கு ஏற்ப அந்த பைக்குகளில் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. படங்களுடன் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பைக் மாடல்

பைக் மாடல்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடலை தேர்வு செய்து குஜராத் போலீசார் வாங்கியுள்ளனர். மொத்தம் 6 பைக்குகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் குறைவான விலை ஹார்லி டேவிட்சன் பைக் மாடல் இது.

கஸ்டமைஸ் மாடல்

கஸ்டமைஸ் மாடல்

நைன் பிரிட்ஜஸ் என்ற ஹார்லிடேவிட்சன் டீலர்தான் அந்த பைக்குகளை கஸ்டமைஸ் செய்து கொடுத்திருக்கிறது. வெள்ளை நிற பெயிண்ட்டில் கருநீலம், இளஞ்சிவப்பு நிற கோடுகள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது. போலீஸ் வாகனம் என்பதை காட்டும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சுழல் விளக்கு, சைரன் போன்றவை போலீசார் பபயன்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கின்றன.

 பயன்பாடு

பயன்பாடு

முதல்கட்டமாக அம்மாநிலத்தின் மூத்த அமைச்சர்கள் மற்றும் விவிஐபி.,களுக்கான பைலட் வாகனங்களாக இவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இயற்கை பேரழிவு சமயங்களில் அவசர பயன்பாட்டிற்காகவும் இந்த பைக்குகள் பயன்படுத்தப்படும்.

 டீலர் பெருமிதம்

டீலர் பெருமிதம்

இந்த பைக்குகளை கஸ்டமைஸ் செய்து கொடுத்த ஹார்லிடேவிட்சனின் நைட் பிரிட்ஜஸ் டீலரின் அதிகாரி பிரணவ் நந்தா கூறுகையில்,"இந்த பைக்குகள் போலீசாரின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும். அதி செயல்திறன் கொண்ட எஞ்சின் இரு்பபதால், அவசர சமயங்களிலும் எளிதாக குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும்," என்றார்.

எஞ்சின்

எஞ்சின்

ஹார்லி டேவிட்சன் 750 மோட்டார்சைக்கிளில் 749சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 53 எச்பி பவரையும், 64.9 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

விலை

விலை

ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக் விற்பனை செய்யப்படுகிறது. கஸ்டமைஸ் செய்வதற்கு கூடுதலாக தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

 
English summary
Policemen riding big V-Twins and thundering down highways is a common thing we see in movies. Now that has come real and in India now. Yes, policemen in Gujarat now have Harley-Davidson motorcycles, thanks to Nine Bridges Harley-Davidson, who have customised the Street 750 motorcycles for the police department.
Story first published: Wednesday, May 27, 2015, 18:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark