ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வரவேற்பு! செம்ம பிளானில் மோடி

சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் அதே வேலையில் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் கதவு திறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீன இரு நாட்டு வீரர்களிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் சிலர் வீர மரணமடைந்தனர். சீனாவின் இந்த அடாவடித் தனம், இரு நாட்டிற்கிடையே பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா இறங்கியது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

குறிப்பாக, சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதன் தயாரிப்புககளுக்கு தடை விதிக்க ஆரம்பித்தது இந்தியா. இதனடிப்படையில், செல்போன் செயலிகள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான கூறுகளின் இறக்குமதி வரை பலவற்றிற்கு அறிவிக்கப்படாத தடையை ஏற்படுத்தியது. மேலும், சீனாவிற்கு எதிராக வினையாற்றுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

இதுபோன்று சீனாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்நாட்டு தயாரிப்புகளுக்கு தடைவிதித்து வரும் அதே வேலையில், பிற நாட்டு தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான வாசல் கதவை புதிய திட்டத்தின்மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திறந்து வைத்துள்ளது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

ஆம், தற்போது ஹெல்மெட் பாதுகாப்பு விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகளை இந்தியாவில் விற்பனைக்கு அனுமதிப்பதும் ஒன்றாகும். இதனால், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் புதிய பாதுகாப்பு நிறைந்த தலைக் கவசங்களை இந்தியாவில் இனி வரும் காலங்களில் விற்பனைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

இந்த புதிய விதி, வருகின்ற செப்டம்பர் மாதம் 4ம் தேதி முதல் நாட்டில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் வெளிநாட்டு தயாரிப்பு ஹெல்மெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனைக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

வெளிநாட்டு தயாரிப்பு ஹெல்மெட்டுகளின் விற்பனைக்கு அனுமதியளித்ததைப் போலவே ஹெல்மெட் விஷயத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்களையும் பிஐஎஸ் செய்திருக்கின்றது. இதன்படி, முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச எடையளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வரை ஹெல்மெட் அதிகபட்சமாக 1.5 கிலோ வரை இருக்கலாம் என விதிகள் கூறுகின்றன.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

ஆனால், செப்டம்பர் 4ம் தேதிக்கு முதல் அறிமுகமாக இருக்கும் புதிய விதிகள் இதை 1.2 கிலோவாக குறைத்துள்ளது. அதேசமயம், அனைத்து ஹெல்மெட்டுகளும் ஐஎஸ்ஐ தரநிலைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வர வேண்டும். இந்த முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை விற்க மற்றும் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

குறைவான தரத்தில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய விதிகளை அமைச்சகம் செயல்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், விலைக் குறைவான ஹெல்மெட்டுகள் எப்போதுமே போதுமான பாதுகாப்பை வழங்காது என்பதையும் அது அறிவுறுத்தியுள்ளது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

அரசின் இந்த முடிவு, உள் நாட்டு மற்றும் சில்லறை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு ஹெல்மெட்டுகளின் வருகை மக்களைத் திசை திருப்பலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால், தங்களின் விற்பனைப் பாதிப்பதுடன், போட்டி அதிகரிக்கும் சூழல் உருவாகும் எனவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

அதேசமயம், ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் அரசின் இந்த முடிவிற்கு வரவேற்பு அளித்துள்ளது. இது, வாடிக்கையாளர்களுக்கு பல முக தேர்வை வழங்க உதவும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தனி வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு பக்கம் சீனாவுக்கு எதிர்ப்பு - மறுபுறம் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு வாசல் திறப்பு! செம்ம பிளானில் மோடி அரசு!

இதில், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களையேப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பலர் டூ வீலர் பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டும் இருக்கின்றனர். எனவே, விரைவில் இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் சார்ந்த துறை நல்ல வளர்ச்சியைக் காணும் என ஆட்டோத்துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகையால், ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதே அவர்கள் கூறுகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmet Safety Rules Revised: Government To Allow For Foreign Helmets To Be Sold Starting 4 September. Read In Tamil.
Story first published: Wednesday, July 22, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X