இந்த சம்பவம் எல்லாம் நடந்தா கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்கள்

புதிய பேட்டரியை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம் மற்றும் பேட்டரி வீக்காக மாறும் முன் ஏற்படும் சமிக்ஞைகள் உள்ளிட்டவை குறித்த தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

உங்கள் காரை ஸ்டார்ட் செய்வதில் சிக்கலைச் சந்திக்கின்றீர்கள் என்றால் பேட்டரியில் ஏதோ கோளாறு இருக்கின்றது என்றே அர்த்தம். குறிப்பாக, பேட்டரிகள் பழதடைந்து இருந்தாலோ அல்லது மின்சார திறன் குறைந்திருந்தாலோ மட்டுமே ஸ்டார்ட் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

ஆகையால், அவ்வப்போது பேட்டரியை பராமரிப்பது மற்றும் அதனை ஆய்வு செய்வது மிக சிறந்தது. அதேசமயம், பேட்டரிகள் முழுமையாக செயலற்று போவதற்கு முன்னர் அல்லது பலவீனமாக மாறும் முன்னர்கூட இதுமாதிரியான சில சமிக்ஞைகளை பேட்டரிகள் நமக்கு வழங்கும். ஆனால், நாம் அதனை பொருட்படுத்திக் கொள்வதில்லை.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

கடைசியில் முழுமையாக முடங்கியநிலையில் காரை மெக்கானிக்கிடம் கொண்டு செல்லும் நிலை ஏற்படுகின்றது. ஆகையால், இந்த நிலை வருவதற்கு முன்னரே பேட்டரிகள் வழங்கும் சமிக்ஞைகள்மீது கவனம் செலுத்துவது நல்லது. அந்தவகையில், பேட்டரிகள் வழங்கக் கூடிய சில சமிக்ஞைகள் மற்றும் பேட்டரியை வாங்கும் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

பெரும்பாலும் கார்களில் 12.6 வோல்ட் அல்லது இதற்கும் அதிகமான பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. இது எப்போது 12.2 வோல்டுக்கும் குறைகிறதோ அப்போது 50 சதவீதம் மட்டுமே அந்த பேட்டரி சார்ஜாகிறது என அர்த்தம். மேலும், 12 வோல்டிற்கும் குறைவாக செல்கிறது என்றால் அப்பேட்டரி இறந்துவிட்டது என்றே அர்த்தமாகும். ஆகையால், அதனை மாற்றியே ஆக வேண்டும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

வீக்கான (பலவீனமான) பேட்டரியின் சமிக்ஞைகள்:

ஸ்டார்ட்டாக கூடுதல் நேரம்:

பேட்டரி பலவீனமாகின்றன என்பதற்கான முதல் அறிகுறியே காரை ஸ்டார்ட் செய்யும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்வதுதான். வழக்கமான நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் அது எடுத்துக் கொள்ளும். அதாவது, நல்ல தர நிலையில் இருக்கும் பேட்டரியால் ஒற்றை முயற்சியிலேயே காரை ஸ்டார்ட் செய்துவிட முடியும். அதுவே, அது பழுதாகி இருந்தால் பல முறை முயற்சிக்கு பின்னரே அதனை ஸ்டார்ட் செய்ய முடியும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

குறிப்பாக, மழை மற்றும் குளிர்காலங்களில் இந்த பிரச்னை பலர் சந்திக்க நேரிடும். சில இயக்கத்திற்கு பின்னர் இந்த நிலை மாறிவிடும். இது சுற்றுச் சூழல் அதிக குளிர்ச்சியாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிலை ஏற்படும். குறிப்பாக, லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கின்றன.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

அதேசமயம், இவை புதியதாக இருக்குமானால் எந்தவொரு சிக்கலையும் சந்திக்காது. மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான வயதை அவைக் கொண்டிருக்குமானால் இந்த நிலை ஏற்படும். ஆகையால், பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்துவன் வாயிலாக இந்த நிலையை சற்று தள்ளிபோட முடியும். இல்லையெனில், பேட்டரியை விரைவில் மாற்றும் நிலை ஏற்படும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

மின்சாதனங்களின் தன்மை மாறும்

பேட்டரி தரமான நிலையில் இருக்கும் என்றால் அனைத்து மின்சாதனங்கள் வழக்கமான அல்லது சற்று கூடுதல் பிரகாசமானதாக இயங்கும். அதுவே, பேட்டரி கோளாறுடன் இருக்குமானால் மின் விளக்குகள் மிகவும் மங்கலாக ஒளிரும். தொடர்ந்து, ரேடியோ போன்ற மின்சாதனங்கள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த திறனில் செயல்படும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

இந்த மாதிரியான நேரங்களில் பேட்டரியை மறுசீரமைத்தல் வேண்டும். இல்லையெனில் அதன் தரம் இன்னும் குறைந்து நாளடைவில் பயனற்றதாக மாறும் நிலை உருவாகும். அதேசமயம், பேட்டரி திறன் குறைவாக தென்படும் நேரங்களில் அதிக மின்பயன்பாட்டை குறைப்பது கூடுதல் சிறந்தது.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

எச்சரிக்கை ஒளி (Warning light)

மாடர்ன் ரக வாகனங்களில் வார்னிங் லைட் எனப்படும் எச்சரிக்கை மின் விளக்கு ஒன்று டேஷ்போர்டில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மின் விளக்குகள் கோளாறுகள் ஏதேனும் ஏற்படுமானால் அதனை வெளிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், பேட்டரிக்காக கொடுக்கப்பட்டிருக்கும் சமிக்ஞை மின் விளக்கு திடீரென ஒளிருமானால் பேட்டரியில் ஏதோ ஓர் பிரச்னை உருவாகியிருக்கின்றது என்று அர்த்தம்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

புதிய பேட்டரி வாங்கும்போது கவனம் வேண்டும்

பேட்டரி மூன்று ஆண்டுகளான பின்னர் அதன் திறன் வெளிப்பாட்டில் குறைவு ஏற்படுகின்றது. இது நாம் வாழும் இடம், சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும். அதேசமயம், 3 ஆண்டுகளுக்கு மேல் பேட்டரியின் வயதாகிவிட்டு என்றால் அதில் நீங்கள் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

அதேசமயம், நீங்கள் புதிய பேட்டரியை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த பேட்டரி புதியதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதாவது, ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே தயாரிக்கப்பட்ட பேட்டரியா அது என்பதை பார்த்து வாங்க வேண்டும். தயாரிக்கப்பட்டு ஏழு மாதங்களுக்கும் மேல் ஆகிறது என்றால் அதனை தவிர்ப்பது சிறந்தது.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

பேட்டரியின் தயாரிப்பு மாதத்தைக் கண்டறிவது எப்படி?

மாதத்தை ஆங்கில எழுத்தாலும் ஆண்டினை கடைசி இரு இலக்காளும் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, ஜனவரிக்கு ஏ என்றும், பிப்ரவரி மாதத்திற்கு பி என்றும் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து, 2012ம் ஆண்டு எனில் அதில் 12 என குறிப்பிடப்படும். அதாவது, 2012 ஜனவரி தயாரிக்கப்பட்ட பேட்டரி எனில் அதில் ஏ12 என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் எல்லாம் நடந்த உங்க கார் பேட்டரி வீக்கா இருக்குனு அர்த்தம்! மெக்கானிக்குகள்கூட சொல்ல தயங்கும் தகவல்!

சாவியை திருப்பும் போது வரும் க்ளிக்கிங் ஒலி:

வெறும் மோட்டார் மட்டும் சுழலக் கூடிய ஓர் சத்தம் வருமேயானால் அது பேட்டரி முழுமையாக இறந்துவிட்டது என்பதற்கான அர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் மட்டுமே கிர்.... எனக் கூடிய ஓர் ஒலி உருவாகும். ஆகையால், இந்த மாதிரியான நேரங்களில் ஸ்டார்ட் செய்வது என்பது இயலவே முடியாத ஓர் நிகழ்வாக மாறிவிடுகின்றது.

Most Read Articles
English summary
Here Is The Common Signs Of Weak Car Battery. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X