குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

பெட்ரோல், டீசல் வெவ்வேறு நிறத்தில் இருப்பதைபோல், விமானத்திற்கான எரிபொருளும் கலரா இருக்குமா? அப்படி இருக்கும்னா அது என்ன நிறத்தில் இருக்கும். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

விமானத்துறையில் பல வகைப்பட்ட எரிபொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு சில நிறம் கொண்டதாகவும், சிலது நிறமற்றதாகவும் காட்சியளிக்கின்றன. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் பெட்ரோல், டீசலை போலவே விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருளும் சற்று வித்தியாசமான கலர்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

இவற்றில் சிலவற்றிற்கு வேண்டுமென்றே நிரம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த செயலை ஏன் செய்கிறார்கள்? நிரமற்ற விமான எரிபொருள் எது என்கிற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள்ச விரிவான பதிவிற்குள் போகலாம்.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் வகைகள்:

விமான துறையில் ஜெட் ஏ/ஏ-1 (Jet A/A-1), ஜெட் பி (Jet B), டிஎஸ்-1 (TS-1), அவ்கஸ் 100 (Avgas 100), அவ்கஸ் 100எல்எல் (Avgas 100LL) மற்றும் ஜிபி-1 (JP-1) தொடங்கி ஜிபி-10 (JP-10) வரையில் என பன்முக வகை எரிபொருள்கள் உபயோகத்தில் உள்ளன.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

இவற்றில் ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களே நிறமற்றதாக காட்சியளிக்கின்றன. ஜெட் ஏ, ஜெட் ஏ-1 உள்ளிட்ட ஜெட்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளே நிரமற்றவையாக உள்ளன. அதேவேலையில், விமான துறையில் பயன்படுத்தப்படும் ஏவி கேஸ் 80, 100 மற்றும் 100எல்எல் உள்ளிட்டவை வெவ்வறு நிறங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. இவற்றில் பிரத்யேகமாக நிறங்கள் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. பாதுகாப்பு காரணம் காட்டி இவற்றிற்கு நிறங்கள் சேர்க்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

ஏன் ஜெட் ஃப்யூவல் நிறமற்றதாகவும், ஏவிகேஸ் நிறம் கொண்டதாகவும் உள்ளன?

சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணையே ஜெட் ரக விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. டர்பைன் எஞ்ஜின், ஜெட் எஞ்ஜின் கொண்ட விமானங்களுக்கே இந்த எரிபொருள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த ஆயிலை சுலபமாக அடையாளம் காண முடியும் என்கிற காரணத்தினால் இதற்கு நிறமி சேர்க்கும் வேலை செய்யப்படுவதில்லை. அதேநேரத்தில், அவை ஏற்கனவே தனித்துவமான நிறங்களைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

சிறிய பிஸ்டன் எஞ்ஜின் கொண்ட விமானங்களில், அதாவது, பிரைவேட் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவிகேஸ் நிறமிக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

உதாரணமாக:

ஏவிகேஸ் 80 : சிவப்பு

ஏவிகேஸ் 100 : கிரீன்

ஏவிகேஸ் 100எல்எல் : ப்ளூ, நிறங்களில் காணப்படும்.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

ஏவிகேஸ்கள் பல வகையில் இருப்பதால் அவற்றை அடையாளம் நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்தும் இயற்கையாகவே ஒரே நிறத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இவற்றை பிரத்யேக நிறத்திற்கு கொண்டு வர ஏவியேஷன் துறை நிறமிகளை சேர்க்கின்றன. ஏவிகேஸ் 80, ஏவிகேஸ் 100 மற்றும் ஏவிகேஸ் 100எல்எல் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான அளவுகளில் பெட்ரோல் சேர்க்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில வகை விமானங்களுக்கான எரிபொருளில் சாயம் கலக்கப்படுகிறதாம்... ஏன் தெரியுமா?

அளவு குறைவான பெட்ரோலை பயன்படுத்த வேண்டிய விமானங்களில் அதிகளவு பெட்ரோல் கொண்ட ஏவிகேஸை பயன்படுத்த நேரிட்டால் அது சில கசப்பான அனுபவங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இத்தகைய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டே வெவ்வேறு விதமான நிறமிகளால் இவை அடையாளம் காணப்படுகின்றன. சில நேரங்களில் இந்த நிறமிகள் சரியான அளவில் எரிபொருளை நிரப்பவும் உதவுவாதகக் கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Here is the reason why jet fuel colorless and avgas colored
Story first published: Tuesday, October 4, 2022, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X