ஹிரோஷிமா, நாகாசாகியை அணுகுண்டால் நாசம் செய்த நாசகாரி விமானம் இதுதான்!

By Saravana

இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல்கள் உலக வரலாற்றின் மிக முக்கிய கருப்பு தினங்களாக பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் செயற்கை பேரழிவாக கருதப்படும் இந்த அணுகுண்டு தாக்குதல்களில் 4 லட்சம் பேர் வரை பலியாகினர். அணுக்கதிர் வீச்சின் கோரத்தால் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன், பல தலைமுறைகளை அணுகுண்டுகளின் வீரியம் துரத்தி துரத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த அணுகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக தனது நேச நாடான இங்கிலாந்துடன் இணைந்து அமெரிக்கா மாபெரும் ரகசியத் திட்டத்தை கையிலெடுத்தது. அதற்காக, அந்த காலக்கட்டத்தின் உலகின் மிக நவீன ரக விமானமாக கருதப்பட்ட போர் விமானத்தை விசேஷ மாற்றங்களை செய்து களத்தில் இறக்கியது. ஜப்பானை அடிபணிய வைக்க, அமெரிக்கா கையாண்ட அணுகுண்டு தாக்குதல் சம்பவம் பற்றியும், அதற்காக அமெரிக்கா பயன்படுத்தி விசேஷ குண்டு வீச்சு விமானம் பற்றியத் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

இறுதிக்கட்ட போர்

இறுதிக்கட்ட போர்

1945ல் அமெரிக்கா, இங்கிலாந்து நேசப்படைகள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாக ஜெர்மனி ஒப்புக்கொண்டது. 1945ம் ஆண்டு மே 8ந் தேதி இதற்கான ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், நிபந்தனையற்ற வகையில், சரணடைவதற்கு ஜப்பான் ஒப்புக்கொள்ளவில்லை.

அமெரிக்கா திட்டம்

அமெரிக்கா திட்டம்

ஜப்பானை அடிபணிய வைக்க அந்நாட்டின் மீது வலிமையான தாக்குதல்களை நடத்துவதற்கு தனது நட்பு நாடான இங்கிலாந்துடன் சேர்ந்து அமெரிக்கா ரகசிய திட்டம் தீட்டியது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல், இந்த திட்டத்தில் சீனாவும் சேர்ந்துகொண்டது.

ஒரே வழி

ஒரே வழி

ஜப்பானை அடிபணிய வைக்க ஒரே வழி அணுகுண்டு தாக்குதல்தான் என்று முடிவு செய்தன. 1945ம் ஆண்டு ஜூலை 26ந் தேதி ஜப்பான் ஆயுதங்களை போட்டு சரணடைய கெடு விதிக்கப்பட்டது. ஆனால், இதனை ஜப்பான் ஏற்க மறுத்துவிட்டது.

அணுகுண்டால் நாசம் செய்த நாசகாரி விமானம் இதுதான்!

ஜப்பானை அடிபணிய வைக்க வலிமையான தாக்குதல்களை அந்நாட்டின் முக்கிய நகரங்களின் மீது நடத்த அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் முடிவு செய்தன. இதற்காக, ஜப்பானிய நகரங்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டன.

 அணுகுண்டு சோதனை

அணுகுண்டு சோதனை

1945ம் ஆண்டு ஜூலையில் மான்ஹாட்டன் திட்டம் என்ற பெயரில், நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வைத்து அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தியது. அதன் அடிப்படையில், மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தன்மைகள் கொண்ட அணுகுண்டுகளை அமெரிக்க தயாரித்தது.

குண்டு வீச்சு விமானம்

குண்டு வீச்சு விமானம்

அணுகுண்டு தயாரிப்பு தீவிரமாக ஒருபுறம் நடந்து வந்த வேளையில், மறுபுறத்தில் அதனை பக்குவமாக எடுத்துச் சென்று இலக்கை தாக்குதவதற்கான விமானத்தை தயாரிக்கும் பணியிலும் அமரிக்கா ஈடுபட்டிருந்தது. இதற்கு இங்கிலாந்து முழு ஒத்துழைப்பும், தொழில்நுட்ப உதவியையும் செய்தது.

விமான மாடல்

விமான மாடல்

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் போயிங் பி29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் குண்டு வீச்சு விமானம் மிகச் சிறப்பான செயல்பாட்டை வழங்கி வந்தது. அந்த காலக்கட்டத்தின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்திய விமானமாகவும், குறைந்த உயரம் மற்றும் அதிக உயரத்தில் பறக்கும் தன்மையுடையதாகவும் இருந்தது.

முதலில் ஜெர்மனிக்கு...

முதலில் ஜெர்மனிக்கு...

1942ம் ஆண்டு முதல்முறையாக ஜெர்மனிக்கு எதிராக இந்த போயிங் பி29 குண்டு வீச்சு விமானங்கள் களமிறக்கப்பட்டன. இங்கிலாந்து விமான தளங்கள் அதிக பரபரப்புடன் இருந்ததால், துருக்கியை மையமாக கொண்டு ஜெர்மனி மீது தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த விமானங்கள் களமிறக்கப்பட்டன. ஜெர்மனி சரணடைந்ததையடுத்து, ஜப்பான் மீது தாக்குதலுக்காக இவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தேர்வு

தேர்வு

ஜெர்மனி சரணடைந்தபோதிலும், ஜப்பான் சரணடைய மறுத்ததையடுத்து, அணுகுண்டு தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.ஆனால், உற்பத்தி தாதமாகியதையடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டபோதிலும், அணுகுண்டு தாக்குதலுக்கு, இந்த விமானங்களை சரியானதாக கருதப்பட்டது. இதற்காக, 15 போயிங் பி29 விமானங்களை பிரத்யேக அம்சங்கள் கொண்டதாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. சாதாரண மாடலைவிட இந்த விமானத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக மாற்றினர்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக மாறறப்பட்ட போயிங் பி29 விமானங்களை சில்வர்பிளேட் வெர்ஷன் என்ற குறியீட்டுப் பெயரில் அழைத்தனர். அணுகுண்டுகளை பக்குவமாக எடுத்துச் சென்று இலக்கை துல்லியமாக தாக்குதல் நடத்துவதற்காக இந்த விமானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

சில்வர்பிளேட்

சில்வர்பிளேட்

அணுகுண்டுகளை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு சில்வர் பிளேட் புரொஜெக்ட் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்ததிட்டத்தின் முதல்படியாக, வெர்ஜீனியாவில் உள்ள ராணுவ ஆய்வு மையத்தில் ஸ்கேல் மாடல் எனப்படும் மாதிரி விமான மாடல்களை வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

புரோட்டோடைப்

புரோட்டோடைப்

ஸ்கேல் மாடல்களின் சோதனை வெற்றி பெற்றதையடுத்து, போயிங் பி29 விமானத்தின் புரோட்டோடைப் மாடல் தயாரிக்கப்பட்டது. இதனை புல்மேன் என்ற பெயரில் குறிப்பிட்டனர். 1944ல் கலிஃபோர்னியாவில் உள்ள முரோக் விமானப் படை தளத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின்போது கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மேலும் சில கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆர்டர்

ஆர்டர்

சில்வர் பிளேட் திட்டத்திற்காக மொத்தமாக 17 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. மேலும், இந்த விமானங்களை பல்வேறு நிலைகளில் வைத்து சோதனைகள் நடத்துவதற்கு 509வது காம்போசிட் குரூப் என்ற ராணுவப்படை பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பயிற்சி, சோதனை

பயிற்சி, சோதனை

அதாவது, இந்த 509வது காம்போசிட் குரூப் விமானப்படை பிரிவை சேர்ந்த விமானிகள்தான் போர் களத்திற்கு அணுகுண்டு தாக்குதல்களை நடத்த அனுப்புவதற்காக பயிற்சியளிக்கப்பட்டது. அணுகுண்டுகளை சோதிப்பதற்கு 216வது ஏர் ஃபோர்சஸ் பேஸ் யூனிட் ஏற்றுக் கொண்டது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

அணுகுண்டுகளை எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் விடுவிப்பதற்கான கட்டமைப்பு சாதனத்தை இங்கிலாந்து வழங்கியது. அணுகுண்டு வீசிய இடத்திலிருந்து வெகு வேகமாக தப்பிக்க ஏதுவாக, எஞ்சின் மேம்படுத்தப்பட்டதோடு, நவீன எரிபொருள் செலுத்து அமைப்பு, புதிய குளிர்விப்பு அமைப்பு கொண்டதாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டது. மேலும், தரையிறக்கும்போது குறைந்த தூரத்தில் நிறுத்துவதற்காக பிரேக் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டது.

கூடுதல் ஆர்டர்

கூடுதல் ஆர்டர்

சோதனைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்ததையடுத்து, கூடுதலாக 28 போயிங் பி29 சில்வர்பிளேட் விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டது. மேலும், அணுகுண்டு தாக்குதல்களுக்காக உருவான இந்த விமானத்தை இயக்கும் படைப்பிரிவாக 509வது காம்போசிட் குரூப் அழைக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த விமானத்தில் நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தது. ரிமோட் கன்ட்ரோல் தீத்தடுப்பு நுட்பமும், வெளிக்காற்றழுத்தத்தால் பாதிக்கப்படாத கேபின் அமைப்புடன் கட்டமைக்கப்பட்டது. அனைத்து சக்கரங்களும், இரண்டு டயர்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

தளம்

தளம்

டியனின் தீவிலிருந்து அணுகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கான போயிங் பி29 சில்வர்பிளேட் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, கெடுவிதிக்கப்பட்ட நாளில் ஜப்பான் சரணடையாததையடுத்து, தாக்குதல் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது.

முதல் தாக்குதல்

முதல் தாக்குதல்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ந் தேதி ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய் என்பது உங்களுக்கு தெரியும். மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய இந்த முதல் அணுகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட போயிங் பி29 போர் விமானத்திற்கு Enola Gay என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த தாக்குதலில் பல லட்சம் பேர் இறந்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

முதல் அணுகுண்டு தாக்குதலைத்தொடர்ந்து, 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ் ட்ரூமேன் ஜப்பானுக்கு மீண்டும் கெடு விதித்தார். நீங்கள் சரணடையாவிட்டால், இதுவரை பூமி கண்டிராத பெரும் தாக்குதலை நீங்கள் சந்திப்பீர்கள். மழை போல பொழியும் கடும் வான் தாக்குதலை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்தார்.

இரண்டாவது தாக்குதல்

இரண்டாவது தாக்குதல்

ஹிரோஷிமா மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து,3 நாட்கள் கழித்து நாகாசாகி மீது இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. ஃபேட் பாய் என்று பெயரிடப்பட்ட இந்த அணுகுண்டை வீசிய போயிங் பி29 விமானம் Bockscar என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 44 சதவீதம் அளவுக்கு நகரம் பூண்டோடு அழிந்தது.

நாகாசாகிக்கு வந்த சோதனை

நாகாசாகிக்கு வந்த சோதனை

முதல் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட எனோலா கே விமானம் இரண்டாவது தாக்குதலின்போது, வேவு பார்க்கும் பணியை மேற்கொண்டது. மேலும், ஜப்பானிலுள்ள கோகுரா நகரின் மீதுதான் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால், அங்கிருந்த சீதோஷ்ண நிலை ஒத்துவராததால், நாகாசாகி இலக்காக மாறியது.

விமானத்தின் ஸ்பெஷல்

விமானத்தின் ஸ்பெஷல்

இரவு நேரத்தில் குறைந்த உயரத்தில் பறந்து, இலக்கை துல்லியமாக தாக்குதலில் போயிங் பி29 விமானம் சிறப்பானது. அதுமட்டுமில்லை, அதிக உயரத்தில் பறந்து துல்லியமாக அடிப்பதிலும் கில்லி. அதாவது, அதிக உயரத்தில் பறக்கும்போதுகூட இந்த விமானத்தின் கேபின் சிறப்பான காற்றழுத்ததை தாங்கி, பைலட்டுக்கு உடல் உபாதைகளை தவிர்க்கும் வசதிகொண்டது.

வேகம்

வேகம்

அணுகுண்டு வீசிய இடத்திலிருந்து வெகு வேகமாக வெளியேற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட இந்த விமானங்கள் மணிக்கு 574 கிமீ வேகத்தில் செலுத்தப்பட்டது. விமானத்திலிருந்து குண்டு விடுவிக்கப்பட்டு 43 வினாடிகளில் தரையில் விழுந்து வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்குள் படு வேகத்தில் அந்த இரண்டு விமானங்களும் அங்கிருந்து வெளியேறி பத்திரமாக தளத்திற்கு திரும்பின.

மியூசியத்தில் விமானங்கள்

மியூசியத்தில் விமானங்கள்

இந்த அணுகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து, முதல் எனலோ கே விமானம் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாகாசாகி மீது தாக்குதல் நடத்தி பாக்ஸ்கார் விமானம் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ராணுவ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதாவது, ஃபேட் பாய் அணுகுண்டின் மாதிரிக் வடிவத்திற்க அடுத்தாற்போல் இந்த விமானம் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

சரணடைந்த ஜப்பான்

சரணடைந்த ஜப்பான்

நாகாசாகி அணுகுண்டு தாக்குதலை தொடர்ந்து, 1945ம் ஆண்டு செப்டம்பர் 2ந் தேதி அமெரிக்கா கூட்டணியிடம் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது.

காப்பியடித்த ரஷ்யா

காப்பியடித்த ரஷ்யா

போயிங் பி29 விமானத்தின் செயல்திறனை பார்த்து, அதனை காப்பியடித்து ரஷ்யா உருவாக்கிய விமானம்தான் டுபுலோவ் டியூ4 விமானம்

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்

Source: Wikipedia

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Historical Snapshot: Boeing B-29 Superfortress.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X