கார் டிரைவிங் வல்லவர்களின் கைகளுக்கு சவால்விடும் பென்ஸ் ஏஎம்ஜி.,யின் பின்னணி தகவல்கள்!

By Saravana

ஏஎம்ஜி என்ற பெயரை கேட்டாலே போட்டியாளர்களின் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்தும். அதன் ஃபெர்ஃபார்மென்ஸ், பிரத்யேக ஸ்டைல் கொண்ட மாடல்கள் இன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கு மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை உருவாக்கி தந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் ஏஎம்ஜி பிராண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், ஏஎம்ஜி பிராண்டு உருவானதன் பின்னணியில் பல சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன. கடந்த 1965ம் ஆண்டு மோட்டார்ஸ்போர்ட்ஸ்களிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் வெளியேற முடிவு செய்தது. இதனால், கடும் அதிருப்தியடைந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஹான்ஸ் வெர்னர் ஆஃப்ரெச் மற்றும் எர்ஹார்டு மெல்சர் என்ற இரு எஞ்சினியர்கள் இணைந்து உருவாக்கியதே ஏஎம்ஜி பிராண்டு.

மெர்சிடிஸ் பென்ஸ் மீது கடும் அதிருப்தி அடைந்த ஹான்ஸ் வெர்னர் ஆஃப்ரெச் மற்றும் எர்ஹார்டு மெல்சர் ஆகியோர் ஒரு பென்ஸ் 300இ காரை வாங்கினர். அந்த காரை ட்யூனிங் செய்தனர். 170 பிஎச்பி கொண்ட அந்த காரின் எஞ்சினை 238 பிஎச்பி வரை ஆற்றலை அளிக்கும் வகையில் ட்யூனிங் செய்தனர். அந்த கார் 1965ம் ஆண்டு ஜெர்மன் டூரிங் கார் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 வெற்றிகளை குவித்தது.


வெற்றிகரமான பிராண்டு

வெற்றிகரமான பிராண்டு

தனது நிறுவனத்தின் மீதான அதிருப்தியில் வெளிவந்த எஞ்சினியர்கள் துவங்கிய ஏஎம்ஜி., பிராண்டு பின்னாளில் அதே பென்ஸுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏஎம்ஜி ஸ்தாபிதம்

ஏஎம்ஜி ஸ்தாபிதம்

1967ம் ஆண்டு ஹான்ஸ் வெர்னர் ஆஃப்ரெச் மற்றும் எர்ஹார்டு மெல்சர் ஆகியோர் ஏஎம்ஜி பிராண்டை ஸ்தாபிதம் செய்தனர். ஏஎம்ஜி மோட்டாரன்பாவ் என்ற பெயரில் எஞ்சின் தயாரிப்பு மற்றும் மேம்படுத்துதல் நிறுவனமாக செயல்பட துவங்கியது. மேலும், நிறுவனத்தை துவங்கிய ஆஃப்ரெச் மற்றும் மெல்சர் ஆகியோரின் பெயரின் முதல் எழுத்தான ஏஎம் மற்றும் ஆப்ரெச் பிறந்த ஊரான குரோபஸ்பக் என்ற இடத்தின் முதல் எழுத்தான ஜி ஆகியவற்றை இணைத்து ஏஎம்ஜி என்ற பிராண்டை உருவாக்கினர்.

Picture credit: Flickr

900hp

முதல் ரேஸ் வெற்றி

முதல் ரேஸ் வெற்றி

1971ம் ஆண்டு ஸ்பா 24 ஹவர்ஸ் போட்டியில் ஏஎம்ஜி நிறுவனத்தின் ஏஎம்ஜி மெர்சிடிஸ் 300 எஸ்இஎல் 6.8 கார் அதன் ரகத்தில் சாம்பியனானது. மேலும், ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியது. இது ஏஎம்ஜி பிராண்டின் தொழில்நுட்ப திறனை உலக அளவில் பேச வைத்தது.

Picture credit: Wiki Commons

Silosarg

வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

1970ம் ஆண்டுகளில் கார் கஸ்டமைசேஷன் பிரபலமடைந்தது. அதற்கான தேவைகளும் அதிகரித்தது. இதையடுத்து, எஞ்சின் தயாரிப்பு தவிர்த்து, கார்களுக்கான கஸ்டமைஸ் செய்யப்பட்ட இன்டிரியர்களையும் தயாரித்து வழங்க ஆரம்பித்தது ஏஎம்ஜி. 1976ல் அஃபால்டர்பக் என்ற இடத்திற்கு ஏஎம்ஜியின் அலுவலகமும், ஒர்க்ஷாப்பும் மாற்றப்பட்டது. 1986ல் இ கிளாஸ் கூபே காருக்கான புதிய 5.0 லிட்டர் வி8 எஞ்சினை ஏஎம்ஜி அறிமுகப்படுத்தியது.

Picture credit: Flickr

Kickaffe

பென்ஸுடன் கூட்டணி

பென்ஸுடன் கூட்டணி

1980களில் ஏஎம்ஜி., பிராண்டை தனது அதிகாரப்பூர்வ ரேஸ் பார்ட்னராக மெர்சிடிஸ் பென்ஸ் இணைத்துக் கொண்டது. மொத்தம் இந்த கூட்டணியில் 190 ரேஸ் கார்கள் உருவாக்கப்பட்டதுடன், 1988- 1993ம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 50 வெற்றிகளையும் பதிவு செய்தது.

Picture credit: Flickr

pilot_michael

அடுத்த மைல்கல்

அடுத்த மைல்கல்

1990ம் ஆண்டில் ஏஎம்ஜி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியது. மெர்சிடிஸ் பென்ஸ் தாய் நிறுவனமான டெய்ம்லர் பென்ஸ் ஏஜி., நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதன்மூலம், ஏஎம்ஜி தயாரிப்புகளை உலகம் முழுவதும் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்ஷிப்புகள் வழியாக விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. மேலும், புதிய தயாரிப்புகளை டிசைன் செய்வதில் இரு நிறுவனங்களும் இணைந்து செய்வதற்கு வாய்ப்பு கிட்டியது. இந்த கூட்டணியில் முதலாவதாக, 276 பிஎச்பி திறன்கொண்ட சி36ஏஎம்ஜி கார் வெளிவந்தது. இந்த புதிய கார் பிஎம்டபிள்யூவின் இ36 எம்3 காருக்கு நேர் போட்டியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்கள் பென்ஸ் கார்களின் அடிப்படையில் ஏஎம்ஜி பிராண்டில் வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானதாக சிஎல்கே- ஜிடிஆர் காரை கூறலாம்.

Picture credit: Flickr

BrisChri

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

2000ம் ஆண்டு துவக்கத்தில் பென்ஸ் - ஏஎம்ஜி கூட்டணி சூப்பர்சார்ஜ்டு வி6 மற்றும் வி8 எஞ்சின்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தன. 2006ல் 6.2 லிட்டர் வி8 எஞ்சினை உருவாக்கியது.

Picture credit: Wiki Commons

Hatsukari715

ஏஎம்ஜி மாடல்கள்

ஏஎம்ஜி மாடல்கள்

இன்று ஏஎம்ஜி பிராண்டில் 20க்கும் மேற்பட்ட மாடல்கள் உலக அளவில் விற்பனையில் இருக்கின்றன. ஒவ்வொரு ஏஎம்ஜி மாடலும் தனது அதீத பெர்ஃபார்மென்ஸ் காரணமாக வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகின்றன. மேலும், one man, one engine என்ற எஞ்சின் தயாரிப்பு கொள்கையை இன்றளவும் கடைபிடித்து வருகிறது. அதாவது, ஒரு எஞ்சினை ஒரு ஒரு பொறியாளர் உற்பத்தி பிரிவில் தயாரித்து கொடுப்பதுடன், அந்த எஞ்சினில் அவரது கையொப்பம் இடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஃபார்முலா-1 ஆதிக்கம்

ஃபார்முலா-1 ஆதிக்கம்

ஏஎம்ஜி.,யின் ஃபார்முலா- 1 பங்களிப்பையும் இங்கே குறிப்பிடவேண்டும். மெர்சிடிஸ்- ஏஎம்ஜி.,யின் பெட்ரோனாஸ் அணி ஃபார்முலா- 1 போட்டிகளில் முன்னணி அணிகளுள் ஒன்றாக விளங்குகிறது. லூயிஸ் ஹாமில்டன் மற்றும் நிகோ ரோஸ்பெர்க் ஆகிய வீரர்கள் பெட்ரோனாஸ் அணியை முக்கிய இடத்தில் வைத்துள்ளனர்.

Most Read Articles
English summary
Just a mention of the acronym "AMG" is enough to send shivers down the chassis of other ‘mortal' automobiles. Mercedes-Benz AMG cars are known to be brutally fast with unabashedly aggressive styling - performance figures usually step into supercar territory. If you thought Mercedes-Benz cars were highly desirable, AMG sport sedans and SUVs take it to the next level.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X