பாகுபலி போன்று ஆட்டோமொபைல் உலகில் கோலோய்ச்சும் ஹோண்டா சிபி ஷைன் படைத்துள்ள புதிய சாதனை..!

Written By:

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் செக்மெண்டை தொடர்ந்து தற்போது 125சிசி பைக் பிரிவிலும் தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பைக் செக்மெண்ட் ஆக 125சிசி செக்மெண்ட் விளங்குகிறது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா சிபி ஷைன் பைக் இந்தப் பிரிவில் தற்போது புதிய மைல்கல்லை அடைந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,00,824 சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 125சிசி பைக் பிரிவில் ஒரே மாதத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள ஒரே பைக் ஹோண்டா சிபி ஷைன் மட்டுமே ஆகும். இது 51 சதவீத அசுர வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

இதன் மூலம் ஸ்கூட்டர் மற்றும் 125சிசி என இரண்டு பைக் செக்மெண்ட்களிலுமே தற்போது ஹோண்டா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ நிறுவனத்திற்கு அடுத்த இடத்தை ஹோண்டா நிறுவனம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் இந்த திடீர் வளர்ச்சிக்கு காரணம் சமீபத்தில் அதன் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலின் அறிமுகமே ஆகும்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஷைன் பைக்கில் பிஎஸ்-4 இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

125சிசி பைக் செக்மெண்டின் வளர்ச்சியைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதல் வளர்ச்சியை ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

ஹோண்டா சிபி ஷைன் பைக் முதன் முதலாக 2006ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது முதல் அந்நிறுவனத்தின் டாப் பிராண்டாக ஹோண்டா சிபி ஷைன் உள்ளது. இதுவரையிலும் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை வாங்கியுள்ளனர்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

இதன் மூலமே ஹோண்டா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

இது தொடர்பாக ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறுகையில், "10 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள சிபி ஷைன் பைக், எங்கள் நிறுவனத்தின் பைக் மாடல்களில் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது" என்றார்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

சிபி ஷைன் பைக் மட்டுமே ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் 55 சதவீத பங்களிப்பை அளிப்பதாகவும் சராசரியாக ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சிபி ஷைன் பைக் விற்பனையாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோண்டா சிபி ஷைன் பைக் அடைந்துள்ள புதிய உச்சம்..!!

ஹோண்டா சிபி ஷைன் பைக்கில் 124.73சிசி திறன் கொண்ட பிஎஸ்4 இஞ்சின் உள்ளது, இது அதிகபட்சமாக 10.16 பிஹச்பி ஆற்றலை அளிக்கவல்லது. இதில் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் ரூ.55,799 முதல் ரூ.61,047 வரையிலான விலையில் கிடைக்கிறது.

English summary
Read in Tamil about Honda CB Shine creates new record
Story first published: Thursday, May 25, 2017, 14:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark