15 மில்லியன் டாலரில் ஆடம்பர படகை வாங்கிய கப்பல் அதிபர்

15 மில்லியன் டாலர் விலையில் கட்டப்பட்டுள்ள உலகின் மகா ஆடம்பர படகைத்தான் பற்றித்தான் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கப் போகிறோம். ஹாங்காங்கை சேர்ந்த கப்பல் அதிபரான ஆன்ட்டோ மெர்டன்தான் இந்த ஆடம்பர படகின் உரிமையாளர். அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஷட்டில்வொர்த் என்ற பிரபல படகு வடிவமைப்பாளர் இந்த படகை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

சொகுசு அம்சங்களின் உச்சமாக இருக்கும் இந்த படகை ஐ-பேட் துணையுடன் இயக்க முடியும் என்பது ஹைலைட். அதஸ்ட்ரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வியக்க வைக்கும் ஆடம்பர படகின் கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பிரம்மாண்ட படகு

பிரம்மாண்ட படகு

இந்த படகு 42.5 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும், 52 டன் எடை கொண்டது.

ஐ-பேட் போதும்

ஐ-பேட் போதும்

இந்த படகு கப்பல் கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன் இணைந்து இயங்குவதால், 50 மீட்டர் தூரத்திலிருந்து ஐ-பேட் மூலம் இந்த ஆடம்பர படகை இயக்க முடியும்.

செலவீனம்

செலவீனம்

15 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆடம்பர படகு உருவாகியுள்ளது.

பயண தூரம்

பயண தூரம்

இந்த படகில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,500 கிமீ தொலைவுக்கு இடைநில்லாமல் பயணம் செய்ய முடியும்.

பிரத்யேக அமைப்பு

பிரத்யேக அமைப்பு

கடல் அலையை எளிதில் கிழித்துக் கொண்டு தங்கு தடையில்லாமல் செல்லும் வகையில் பக்கவாட்டில் இரண்டு மிதவைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

இடவசதி

இடவசதி

இந்த ஆடம்பர படகு 9 பயணிகளும், 6 படகு பணியாளர்களும் செல்வதற்கான வசதிகொண்டது.

 அறைகள்

அறைகள்

ஆம்டபரமான படுக்கையறை, குளியலறை, சமையலறை, உணவுக் கூடம், கடலழகை ரசிப்பதற்கான திறந்தவெளி கூடம் ஆகியவை உண்டு.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஆடம்பர படகில் கேட்டர்பில்லர் சி18 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 1150 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதுதவிர, 110 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டு எஞ்சின்களும் உண்டு.

காக்பிட்

காக்பிட்

இதன் காக்பிட்டில் இரண்டு மாலுமிகள் அமர்ந்து இயக்கும் வகையில் இருக்கிறது.

 பயன்பாடு

பயன்பாடு

இதனை வாங்கியிருக்கும் ஆன்ட்டோ மெர்டன்(வயது 64) தனது மனைவியுடன் இந்தோனேஷியாவில் இருக்கும் தனது தீவுகளுக்கு சென்று வருவதற்காக, இந்த ஆடம்பர படகை ஆர்டர் செய்து வாங்கியுள்ளாராம்.

 முதல் பயணம்

முதல் பயணம்

இந்த ஆடம்பர படகு தனது முதல் பயணத்தை நேற்று துவங்கியது.

ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
ஆதஸ்ட்ரா ஆடம்பர படகு
Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X