ஃபெராரி சூப்பர் கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

புதிய ஃபெராரி சூப்பர் கார் காரை கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளார் பகானி கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹொராசியா பகானி.

By Saravana Rajan

இத்தாலியை சேர்ந்த பகானி நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிலையில், பகானி நிறுவனத்தின் உரிமையாளர் ஹொராசியா பகானி அண்மையில் புதிய ஃபெராரி சூப்பர் கார் ஒன்றை வாங்கியது கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

பகானி நிறுவனத்தின் உரிமையாளர் ஏன் ஃபெராரி கார் வாங்கினார் என்று சட்டென பலருக்கும் கேள்வி எழுவது இயல்பு. ஆனால், உண்மையில் ஹொராசியா பகானி கார் சேகரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவர். அவரது கார் கராஜில் ஏராளமான உயர் வகை கார்கள் இருக்கின்றன.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

அண்மையில்தான் போர்ஷே 911ஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார். இந்த நிலையில், தற்போது ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா டிடிஎஃப் சூப்பர் காரை வாங்கியுள்ளார். இந்த கார் ஹொராசியோ பகானியின் விருப்பத்தின் பேரில் முழுவதும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள பிரத்யேக கார் மாடல். இத்தாலியின் மர்னெல்லோ நகரில் உள்ள ஃபெராரி ஆலைக்கு வந்து தனது காரை டெலிவிரி பெற்றிருக்கிறார்.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

சிவப்பு நிறம் கொண்ட அந்த காரில் வெள்ளை மற்றும் தங்க நிற கோடுகள் மூலமாக தனித்துவம் பெற்றுள்ளன. தங்க நிற அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், ஹொராசியோ பகானிக்காக விசேஷமாக உருவாக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில், டெயிலர் மேட் மாடல் என்பதை காட்டுவதற்காக பேட்ஜ் ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

உட்புறத்திலும் வெள்ளை வண்ண பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் மிகவும் விசேஷமாக இந்த காரை தயாரித்து டெலிவிரி பெற்றிருக்கிறார் பகானி. ஃபெராரி எஃப்12 காரின் இலகு எடை கொண்ட பாகங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட மாடல்தான் எஃப்12 டிடிஎஃப் மாடல். சாதாரண மாடலைவிட 100 கிலோ எடை குறைவானது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

இந்த காரில் 769 எ:்பி பவரை அளிக்க வல்ல சக்திவாய்ந்த 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 340 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

மொத்தம் 799 ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா காரின் வழித்தோன்றலாக, ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. அண்மையில் இந்த காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் பொது பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

ஹொராசியா பகானியின் கார் ஆர்வம் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம். லம்போர்கினி நிறுவனத்தில் பணியாற்றிய ஹொராசியா 1992ம் ஆண்டில்தான் பகானி கார் நிறுவனத்தை ஸ்தாபிதம் செய்தார். இன்று உலகிலேயே அதி உன்னதமான உயர் வகை கார்களை தயாரிக்கும் நிறுவனமாக பகானி உயர்வு பெற செய்தவர்.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

சொந்த கார் நிறுவனம் இருந்தாலும், கார் சேகரிப்பில் உள்ள மிகுதியான ஆர்வம் காரணமாக அனைத்து சூப்பர் கார்களையும் தனது கராஜில் வாங்கி வைத்துள்ளார். இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பகானி ஸோண்டா காரின் ஒவ்வொரு மாடலும் இவரது கராஜில் இருக்கிறது.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

அதுதவிர்த்து, ஃபோர்டு ஜிடி கல்ஃப் எடிசன், போர்ஷே கரீரா ஜிடி, ஜாகுவார் இ-டைப், ஃபோர்டு மாடல் டி, லம்போர்கினி கூன்டாக் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை கார் மாடல்களும் உண்டு. அர்ஜென்டினாவை பூர்விகமாக கொண்ட இவர் இன்று இத்தாலி மண்ணிற்கு தனது பகானி கார் நிறுவனம் மூலமாக உலக அளவில் புகழ் தேடி தந்துள்ளார்.

ஃபெராரி கார் வாங்கிய பகானி கார் நிறுவன உரிமையாளர்!!

விருப்பமான கார் மாடல்கள் குறித்து டாப் கியருக்கு பேட்டியளித்தபோது, லம்போர்கினி, ஃபெராரி இரண்டில் எது பிடிக்கும் என்ற கேள்விக்கு ஃபெராரி என்றும், பென்ட்லீ, ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டுகளில் எது பிடிக்கும் என்ற கேள்விக்கு ரோல்ஸ்ராய்ஸ் என்றும் மழுப்பாமல் பதில் அளித்தார். நான் கார் பிரியர். எனவே, எனக்கு பிடித்தமான பிராண்டை சொல்வதில் தயக்கமில்லை என்று கூறி வியக்க வைத்தார்.

Picture Credit: Facebook

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Horacia Pagani Gets Ferrari F12 TDF Supercar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X