எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

இந்திய அரசாங்கம் எத்தனால் கலந்த பெட்ரோலை 2025க்குள் மொத்த பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் வந்துவிடும் என்று நம்பிக்கையாக உள்ளது. ஏனென்றால் இதன் மூலமாக கிட்டத்தட்ட 33 - 35 சதவீத கார்பன் மாசுவை குறைக்க முடியும் என அரசு நம்புகிறது.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

தற்சமயம் இவ்வாறான பெட்ரோல் 8.5% மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. 2022 முடிவதற்குள் 10 சதவீதம் வந்துவிடலாம். ஆதலால் 2025க்குள் 35% எட்டுவது என்பது சாத்தியமான காரியமே. இருப்பினும் சிலருக்கு இப்போதும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா என்கிற சந்தேகம் இருக்கலாம்.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

அதில் ஒருவர் தான் நீங்கள் என்றால் கவலை வேண்டாம், ஸ்டூவர்ட் ஃபில்லிங்கம் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் இதனை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால் என்ஜினை பொருத்து எரிபொருள் திறன் கிட்டத்தட்ட 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரையில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது என்ஜின் வாகனத்திற்கு வழங்கும் ஆற்றல் குறைவதுடன், எரிபொருளையும் ஒவ்வொரு கிமீ-க்கும் கூடுதலாக என்ஜின் பயன்படுத்தும். 2025ஆம் ஆண்டில் மைலேஜ் இதைவிட கூடுதலாக குறையலாம். வழக்கமான பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில் இத்தகைய பெட்ரோலின் விலை குறைவு என யுகே அரசாங்கம் தெரிவிக்கிறது.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

ஆனால் மற்ற நாடுகளில் வழக்கமான பெட்ரோலே மலிவானதாக உள்ளது. இதனால் எதிர்காலத்தில் பெட்ரோலின் விலை இப்போது இருப்பதை காட்டிலும் விலைமிக்கதாக விளங்கும். அதேநேரம் வாகனத்தின் மைலேஜும், செயல்படுதிறனும் குறையும்.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

இருப்பினும் இந்திய அரசாங்கம் இத்தகைய எரிபொருளை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுவதற்கு காரணம், எத்தனால் கலந்த பெட்ரோல் சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடியவை. ஆதலால் இவற்றை எளிதில் பற்ற வைக்க முடியாது.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

ஆனால் ஈரப்பதத்தை எத்தனால் உறிஞ்சுவதால் வாகனத்தின் என்ஜின் பழுதாகுவதற்கு வாய்ப்புள்ளது. பயப்படாதீர்கள், நீண்ட நாட்களுக்கு வாகனத்தை பயன்படுத்தாமல் இருந்தால் தான் இவ்வாறு எல்லாம் நிகழும். கிட்டத்தட்ட 6 மாதம் இருக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

அடிக்கடி காரை அல்லது மோட்டார்சைக்கிளை வெளியே எடுப்பீர்கள் என்றால் பயப்பட தேவையில்லை. இங்கிலாந்தில் இ5 என்ற பெயரில் விற்பனையாகும் எத்தனால் கலந்த பெட்ரோலிற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்தியாவிலும் எத்தனால் கலந்த பெட்ரோலிற்கு வரவேற்பு கிடைக்கலாம்.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

இங்கிலாந்தின் இ5-இன் விலை இந்தியாவின் எத்தனாலை காட்டிலும் விலைமிக்கது. இதனை நீண்ட மாதங்களுக்கு எந்தவொரு பயமும் இல்லாமல் வாகனத்தில் தேக்கி வைக்கலாம். அதேபோல் வழக்கமான பெட்ரோலை போன்று இதுவும் எளிதில் தீப்பற்றி கொள்ளக்கூடியதாக உள்ளது.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

வாகனத்தின் மைலேஜ் குறையும், மதிப்பு அதிகமாகும் என்பதையெல்லாம் விட வாகனத்தை தனது ஈரப்பததால் அரிக்கும் என்பது தான் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதில் இருக்கும் முக்கியமான பிரச்சனையாகும். இரும்பு மட்டமல்ல, பித்தளை, கண்ணாடியிழை, பிளாஸ்டிக், இவ்வளவு ஏன் ரப்பரில் தயாரிக்கப்படும் பொருட்களை கூட எத்தனால் சேதப்படுத்தக்கூடியது.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்று தான், உரிமையாளர் தயாரிப்பு நிறுவனத்திடம் தனது வாகனம் இ10-க்கு இணக்கமானதா? என்பதை கேட்டறிய வேண்டும். இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள இ10 எத்தனாலுக்கு இணக்கமானதாகவே வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

2011ல் இருந்து தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் இ10-க்கு இணக்கமானவை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தை தயாரித்த நிறுவனத்தை தொடர்புக்கொண்டு இதனை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது. இவ்வாறான எரிபொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், எதிர்கால போக்குவரத்து மின்சாரத்தையே சார்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

இதற்கு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் அறிமுகமாகியுள்ள ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் கிடைத்த வரவேற்பே சாட்சி. இப்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆரம்பித்துள்ள பசுமை போக்குவரத்து நான்கு சக்கரங்களுக்கும் நகர உள்ள நாள் நீண்ட தொலைவில் இல்லை.

எத்தனால்-பெட்ரோலை கொண்டுவருவதில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! எதனால் தெரியுமா?

தமிழகத்தில் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.99,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்1 மட்டுமின்றி எஸ்1 பிரோ வேரியண்ட்டிலும் இந்த இ-ஸ்கூட்டர் கிடைக்கவுள்ளது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.09 லட்சமாகும்.

Most Read Articles

மேலும்... #பெட்ரோல் #petrol
English summary
Ethanol mixed petrol is coming soon: Is this good or bad for your car/motorcycle’s engine?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X