போர் விமானத்தை இயக்குவதற்கு எவ்வாறு பயிற்சி கொடுக்கப்படுகிறது தெரியுமா?

By Saravana

பெரும்பாலும் போர் விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டதாகவே வடிவமைக்கப்படுகின்றன. 2 லட்ச ரூபாய்க்கு வாங்கும் பைக்கை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் எழும்போது, பல ஆயிரம் கோடி விலை மதிப்புமிக்க, போர் விமானத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி இயக்குவதற்கு போதிய பயிற்சி அவசியம்.

இந்தநிலையில், உலகிலேயே நவீன ரக விமானமாக கருதப்படும் அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங்-II போர் விமானத்தை இயக்குவதற்கு பைலட்டுகளுக்கு எவ்வாறு பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

வகுப்புகள்

வகுப்புகள்

பயிற்சி விமானிகளுக்கு முதலில் வகுப்புகளில் விமானத்தின் கட்டுப்பாடு மற்றும் சிறப்பாக இயக்குவதற்கான கற்பித்தல் முறையில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதன்மூலம், விமானத்தை இயக்கும் முறைகள் பற்றி அடிப்படை அறிவை பைலட்டுகள் பெற்று விடுகின்றனர்.

சிமுலேட்டர்

சிமுலேட்டர்

விலை மதிப்புமிக்க போர் விமானங்களை இயக்குவதற்கு சிமுலேட்டர் சாதனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையாகவே விமானத்தை இயக்குவது போன்ற கட்டுப்பாட்டு வசதிகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. 50 சதவீதம் அளவுக்கு நேரடி பயிற்சியாக இது அமைகிறது.

எரிபொருள் நிரப்பும் பயிற்சி

எரிபொருள் நிரப்பும் பயிற்சி

வானிலையே போர் விமானத்துக்கு மற்றொரு விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பும் பயிற்சியும் சிமுலேட்டர் வழியாகவே வழங்கப்படுகிறது. விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் இலக்கில் சரியாக ஏவுவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

சாதகங்கள்

சாதகங்கள்

சிமுலேட்டர் பயிற்சி மூலமாக எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுகிறது. விபத்துக்களும் அறவே தவிர்க்கப்படுகிறது. மேலும், உண்மையான நிலையில், அந்த குறிப்பிட்ட விமானம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாக உணர்ந்து கொள்ள முடியும்.

பல கட்ட பயிற்சி

பல கட்ட பயிற்சி

எஃப்-35 போர் விமானத்தை இயக்குவதற்கு 10 முதல் 12 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது. அது முடிந்த பின்னர், பைலட்டுகள் நேரடியாக எஃப்-35 போர் விமானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

பைலட்டுகள்

பைலட்டுகள்

அமெரிக்கா உள்பட 6 நாடுகளில் எஃப்-35 போர் விமானங்கள் விமானப்படையில் சேவையாற்ற வருகின்றன. இதற்காக, 200 பைலட்டுகள் இதுவரை பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி மையங்கள்

பயிற்சி மையங்கள்

அமெரிக்காவில், எஃப்-35 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை வழங்குவதற்காக 3 பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

கடும் சவால்கள்

கடும் சவால்கள்

போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் கடும் சவால்கள் நிறைந்தாகவே இருக்கிறது. விலையுயர்ந்த போர் விமானங்கள் பெரும்பாலானவற்றை இயக்குவதற்கு சிமுலேட்டர் பயிற்சி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆளில்லா போர் விமானங்கள்

ஆளில்லா போர் விமானங்கள்

ஆள் இல்லா போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை பல நாடுகள் தீவிரமாக துவங்கியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் போர் விமானங்களை இயக்குவதற்கான பைலட்டுகளுக்கான பயிற்சிக்கு அளிக்கப்படும் நிதியை வெகுவாக குறைக்க திட்டமிடப்பட்டுளளது.

எஃப்- 35 லைட்னிங்-II

எஃப்- 35 லைட்னிங்-II

உலகின் விலையுயர்ந்த போர் விமானமாக கருதப்படும், அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங்- II போர் விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு. இதுவரை 162 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 98 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. பல்வேறு நாடுகளில் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

Picture credit: Facebook

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Fighter pilots undergo specialized training in aerial warfare and dogfighting (close range aerial combat)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X