ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

ராமோஜி பிலிம் சிட்டியைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் மற்றுமொரு சிறப்பு விஷயம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

பயண பிரியர்களைக் குஷிப்படுத்தக் கூடிய ஓர் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக, ரேஸ் பயணத்தை விரும்பக் கூடியவர்களை இது மிகவும் சந்தோஷப்படுத்தக் கூடிய செய்தியாக இருக்கும். அதிலும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியிருக்கக் கூடிய வாகன ஓட்டப் பந்தய வீரர்கள் இதனால் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தில் தற்போது பிரமாண்டமான ராமோஜி பிலிம் சிட்டி அமைந்திருப்பது நம் அனைவரும் அறிந்ததே. இதைத்தொடர்ந்து அங்கு விரைவில் புதிய ரேஸ் டிராக் ஒன்றும் அமைய இருப்பதே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே பயண பிரயர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஆகும். இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரேஸ் டிராக்குகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமான மற்றும் தனித்துவமான ரேஸ் டிராக்காக அமைய இருக்கின்றது.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

இந்த புதிய ரேஸ் டிராக்கிற்கு பிஸ்தா மோட்டார் ரேஸ்வே என்ற குறிபெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தின் துண்டிகல் (Dundigal) எனும் பகுதியிலேயே ரேஸ் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருகின்றன.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

இது ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுமார் 1 மணி நேர பயண இடைவெளியில் அமைய உள்ளது. வட்ட சாலையில் (Ring Road) இருந்தும் அதே ஒரு கிமீ இடைவெளியில்தான் புதிய ரேஸ் அமைய இருக்கின்றது. இதனை ஹைதரபாத்தைச் சேர்ந்த நிஷாந்த் சபூ எனும் தொழிலதிபர் உருவாக்கி வருகின்றார்.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

பிஸ்தா எனும் பெயரை ஃபெர்ராரி 488 பிஸ்தா காரின்மீதிருக்கும் ஆர்வத்தின்காரணமாக வைத்திருக்கின்றார். இத்தாலி மொழியின்படி 'பிஸ்தா' என்பதற்கு ரேஸ் டிராக் என்பது பொருள் ஆகும். இதுவும், இந்த டிராக்கிற்கு பிஸ்தா என பெயர் வைப்பதற்கு காரணமாக உள்ளது.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

மூன்று கட்டங்களாக இந்த ரேஸ் டிராக் கட்டமைக்கப்பட இருக்கின்றது. இதன் பணிகள் 2021 ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலும் முடிவடைந்துவிடும் என கூறப்படுகின்றது. அதேசமயம், முழுமையாக 2023ம் ஆண்டில்தான் இந்த டிராக் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இது 3.708 கி.மீ நீளமுள்ள டிராக் ஆகும்.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

இதில் 16 கார்னர் பகுதிகள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிவேக ஓட்டங்களுக்காக 50 முதல் 100 மீட்டர் ரன்-ஆஃப் பகுதி இருக்கும். சுமார் 145 அடி விட்டம் கொண்ட ஸ்டீயரிங் பேட் மற்றும் 150 மீட்டர் நீளமுள்ள குழி பாதைகளும் இருக்கும்.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

ரேஸ் டிராக்கில் ஆஃப்-ரோட் அட்வென்சர் பயணத்திற்கு ஏற்ற டிராக் இருக்கும். அதே நேரத்தில் ஒரு டர்ட் டிராக்கும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கின்றது. எனவேதான், இந்த டிராக்கை தனித்துவமான ரேஸ் டிராக் கூறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சுற்று வடிவமைப்பு FIA அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இதுமாதிரியான ஓர் டிராக்கைதான் பலர் விரும்புகின்றனர்.

ராமோஜி பிலிம் சிட்டியை அடுத்து ஹைதராபாத்தில் அமையும் மற்றுமொரு சிறப்பு... என்ன தெரியுமா அது?

இதுபோன்ற தனித்துவமான வசதிகள் கொண்ட ரேஸ் டிராக் தற்போது மஹாராஷ்டிராவின், நானோலி ஸ்பீட்வே பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது எஃப்ஐஏ அங்கீகாரம் பெற்ற டிராக்காகும். மும்பை மற்றும் புனே நகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் ரேஸ் பயண பிரியர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad To Get A New Racetrack Soon: Here Are All The Details. Read In Tamil.
Story first published: Tuesday, November 10, 2020, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X