தேஜஸ் போர் விமானத்தை சூப்பர்: இந்திய விமானப் படை தளபதி சர்டிஃபிகேட்!

Written By:

நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படையின் தளபதி அரூப் ராஹா நேரடியாக இயக்கிப் பார்த்தார். பெங்களூரிலுள்ள தளத்திலிருந்து தேஜஸ் விமானத்தின் சோதனை பைலட்டான ரங்காச்சாரியுடன் இணைந்து அவர் தேஜஸ் போர் விமானத்தை இயக்கினார்.

அதன்பிறகு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேசிய அவர், இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கு சிறந்த போர் விமானம் தேஜஸ் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், இந்த விமானத்தை உருவாக்கிய அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அனுபவமிக்க போர் விமானி

அனுபவமிக்க போர் விமானி

இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா அனுபவமிக்க போர் விமானி. 3,400 மணி நேரம் போர் விமானங்களை இயக்கிய அனுபவசாலி.

 ஆவல்

ஆவல்

இந்த நிலையில், பதவி உயர்வுக்கு பின் கிட்டத்தட்ட 15 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை ஆவலுடன் அவர் இயக்கி பார்த்திருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள் தேஜஸ் போர் விமானத்தில் அவர் பறந்து ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஆய்வு

மேல் எழும்பும் திறன், ரேடார் கருவியின் திறன், ஆயுதங்களை செலுத்தும் திறன், எதிரிகளின் ஏவுகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வல்லமை, வளைந்து நெளிந்து தப்பிக்கும் திறன் போன்றவற்றை அவர் பரிசோதித்து பார்த்திருக்கிறார். இவை அனைத்திலும் தேஜஸ் மிகச்சிறப்பாக இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

மாற்று...

மாற்று...

இந்திய விமானப்படையில் உள்ள பழமையடைந்துவிட்ட மிக்-21 மற்றும் மிக்-23 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக புதிய போர் விமானங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேஜஸ் போர் விமானம் பொருத்தமாக பார்க்கப்பட்டது.

 ஒதுக்கிய விமானப்படை

ஒதுக்கிய விமானப்படை

ஆனால், தேஜஸ் போர் விமானத்தில் அடுக்கடுக்கான குறைகளை சொல்லி, இந்திய விமானப்படை ஒதுக்கி வந்தது. வெளிநாட்டு விமானங்களை வாங்குவதற்கே ஆர்வம் காட்டியது. இதனால், தேஜஸ் போர் விமான தயாரிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டது.

ரஃபேல் கொடுத்த சூடு

ரஃபேல் கொடுத்த சூடு

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்களின் விலையும், பராமரிப்பு செலவும் புதிதாக பதவியேற்ற மத்திய அரசை கடுமையாக யோசிக்க வைத்தது. அதன் விளைவு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தி படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால், ரஃபேல் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து தேஜஸ் விமானத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்டர்

ஆர்டர்

தற்போது இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கு 120 தேஜஸ் போர் விமானங்களுக்கு ஆர்டர் 4வது தேஜஸ் விமானம் வரும் ஜூன் மாதம் இந்திய விமானப்படையிடம் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. இதுதவிர, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தேஜஸ் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளன.

முதல் படைப்பிரிவு

முதல் படைப்பிரிவு

தேஜஸ் போர் விமானங்கள் அடங்கிய முதல் படைப்பிரிவு கோவையில் அமைய இருக்கிறது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த தேஜஸ் படைப்பிரிவு செயல்பட துவங்கும். இந்த படைப்பிரிவில் சேர்க்கப்படும் விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.

 ஆனாலும்...

ஆனாலும்...

தற்போது நம் நாட்டிற்கு 300 தேஜஸ் போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தேஜஸ் போர் விமானத்தில் 40 விதமான மாறுதல்களை செய்து வழங்குமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஒற்றை எஞ்சினுடன் பன்முக திறன் கொண்ட இலகு வகை போர் விமானம். இது நான்காம் தலைமுறை போர் விமானமாக கூறப்படுகிறது. எனவே, நவீன தொழில்நுட்பங்களை நிரம்ப பெற்றிருக்கிறது.

வேகம்

வேகம்

இந்த விமானம் மணிக்கு 2,205 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. தற்போது 1,350 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 3,000 கிமீ தூரம் வரை பறக்கும். மூன்று கூடுதல் பெட்ரோல் டேங்குகளை பொருத்த முடியும்

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

220 ரவுண்டுகள் சுடக்கூடிய 23 மிமீ விட்டம் கொண்ட இரட்டை குழல் துப்பாக்கி, வானிலிருந்து வான் இலக்கு, வானிலிருந்து தரை இலக்கை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் கட்டமைப்பு கொண்டது. சாதாரண மற்றும் லேசர் வழிகாட்டுதல்களில் செல்லும் வெடிகுண்டுகளையும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும்.

கடற்படையிலும்...

கடற்படையிலும்...

இந்திய விமானப்படை மட்டுமின்றி, இந்திய கடற்படையிலும் தேஜஸ் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. சிறிய மாற்றங்கள் கொண்டதாக இவை இருக்கும். இதுதவிர, இலங்கை, எகிப்து உள்ளிட்ட அயல்நாடுகளும் தேஜஸ் போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்சாகம்

உற்சாகம்

இந்திய விமானப்படை தளபதியே, தேஜஸ் போர் விமானத்தை ஓட்டி பார்த்து, சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருப்பது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பணியாளர்களிடையே உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

 
மேலும்... #ராணுவம் #military
English summary
IAF chief flies Tejas fighter Jet in Bengaluru.
Story first published: Thursday, May 19, 2016, 16:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark