ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் பெட்டர்... யூ-டர்ன் அடித்த மத்திய அரசு... காரணம் என்ன?

Posted By:

நாட்டின் பாதுகாப்பிற்கான அவசர தேவையை கருத்தில்கொண்டு, விமானப் படையின் பலத்தை பெருக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும், 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு, பிரான்ஸ் சுற்றுப் பயணத்தின்போது பிரதமர் மோடி தலைமையில் சென்ற குழுவும் ஒப்பந்தம் போட்டது. இந்த நிலையில், ரஃபேல் விமானத்தை வழங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் பல்வேறு கெடுபிடிகளை விதித்திருப்பதோடு, விலையையும் மிக அதிகமாக சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அப்செட்டான மத்திய அரசு தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்து வரும், இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு போர் விமானமான தேஜஸுக்கு பல்க் ஆர்டருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

பல்க் ஆர்டர்

பல்க் ஆர்டர்

ஏற்கனவே, 40 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், 120 தேஜஸ் போர் விமானங்களை சப்ளை செய்வதற்கான ஆர்டருக்கு மத்திய அரசு பச்சை கொடி காட்டியிருக்கிறது. ரஃபேலின் அடாவடி விலை, மத்திய அரசையும், மத்திய பாதுகாப்புத் துறையையும் யூ- டர்ன் போட வைத்துள்ளது. இதன்மூலம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் புதுத்தெம்புடன், தேஜஸ் போர் விமான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

ரஃபேல் ஒப்பந்தம்?

ரஃபேல் ஒப்பந்தம்?

விமான தயாரிப்பு செலவு மட்டுமின்றி, ரஃபேல் விமானத்தை வடிவமைத்த செலவீனத்தையும், இந்தியாவின் தலையில் கட்டுவதற்கு பிரான்ஸ் டஸ்ஸால்ட் நிறுவனம் முனைந்திருக்கிறது. இதனால், ஒரு ரஃபேல் விமானத்தின் விலை, நிர்ணயிக்கப்பட்டதையெல்லாம் தாண்டி, ஆயிரம் கோடியை நெருங்குகிறதாம். இதனால், ரஃபேல் விமானத்தை வாங்கும் முயற்சிகளை மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
 தேஜஸ் திட்டம்

தேஜஸ் திட்டம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த தொழில்நுட்பத்தில் தேஜஸ் மார்க்- 1 போர் விமானத்தை தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததையடுத்து, வெளிநாட்டிலிருந்து போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வெளிநாட்டு விமானங்களை ஒப்பிடும்போது, தேஜஸ் விமானத்தின் விலை பன்மடங்கு குறைவாக இருக்கும்.

 தேஜஸ் மார்க் - 1

தேஜஸ் மார்க் - 1

தேஜஸ் மார்க் 1 போர் விமானத்தில் பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இதன் மேம்படுத்தப்பட்ட மாடலாக தேஜஸ் மார்க் 2 போர் விமானத்தை வழங்குமாறு மத்திய பாதுகாப்புத் துறை கேட்டுக் கொண்டது. ஆனால், இருக்கும் சூழலில் உடனடி தேவையை கருதி, தேஜஸ் மார்க் 1 போர் விமானத்தையே வழங்குமாறு மத்திய பாதுகாப்புத் துறை தற்போது கேட்டுக் கொண்டு ஆர்டர் செய்துள்ளது.

 திட்ட செலவு

திட்ட செலவு

1983ம் ஆண்டு முதல் இதுவரை தேஜஸ் போர் விமானத்தை உருவாக்குவதற்காக இதுவரை ரூ.14,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. 2004ம் ஆண்டில் இந்த விமானத்திற்கு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தேஜஸ் என்று பெயர் சூட்டினார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், 120 தேஜஸ் போர் விமானங்களை சப்ளை செய்யுமாறு எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மாற்று மாடல்

மாற்று மாடல்

தற்போது இந்திய விமானப் படையின் வசம் உள்ள மிக்-21 ரக விமானங்களுக்கு மாற்றாக, தேஜஸ் விமானம் சேர்க்கப்பட உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு வகை போர் விமானம். ஒரு விமானி மட்டுமே, அமர்ந்து இயக்கும் விதத்திலான வசதி கொண்டது.

உதிரிபாகங்கள்

உதிரிபாகங்கள்

இந்த விமானத்திற்கான 60 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பெற்று அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதனால், உற்பத்தி செலவீனம் கணிசமாக குறைகிறது. ஆண்டு்கு 8 முதல் 16 விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் திட்டமிட்டிருக்கிறது.

சோதனை

சோதனை

இதுவரை 7 ஆயிரம் மணி நேரம் பறந்து முதல் கட்ட சோதனைகளில் வெற்றி கண்டிருக்கிறது. மேலும், பறக்கும்போது, விண்ணிலிருந்து தரையிலுள்ள இலக்கை மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் வைத்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. லேசர் சமிக்ஞை வழிகாட்டுதலின்படி, வெடிகுண்டுகளை வீசுதல், வான் தாக்குதல்களை முறியடிக்க ஏவுகணை செலுத்துதல் தொழில்நுட்பங்கள் உள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த போர் விமானம் ஒற்றை எஞ்சினில் இயங்குகிறது. அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் எஃப் 404 ஜிடி எஃப்2ஜே3 டர்போஃபேன் எஞ்சின் கொண்டுள்ளது.

கட்டுப்பாட்டு வசதி

கட்டுப்பாட்டு வசதி

டிஜிட்டல் ப்ளை- பை- ஒயர் என்ற நவீன விமான கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால், விமானி இதனை எளிதாக இயக்க முடியும். இதனை விமானவியல் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து கொடுத்திருக்கிறது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் ரூ.1,000 கோடி மதிப்பை நெருங்குவதாக சொல்லப்படும் நிலையில், உள்நாட்டு தயாரிப்பரில் உருவாக்கும் ஒரு தேஜஸ் மார்க் 1 விமானம் ரூ.200 கோடி மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்போது, விலை ரூ.180 கோடியாக குறையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேஜஸ் மார்க்- 2

தேஜஸ் மார்க்- 2

தேஜஸ் மார்க் 1 விமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் மாடலை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 2018ம் ஆண்டில் இந்த தேஜஸ் மார்க் 2 உருமாதிரி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மத்திய அரசு யூ- டர்ன்

மத்திய அரசு யூ- டர்ன்

தேஜஸ் போர் விமான திட்டத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சில மாதங்களுக்கு முன் வரை குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த நிலையில், வெளிநாட்டு போர் விமானங்களின் விலையும், அதன் கெடுபிடிகளும் தற்போது உள்நாட்டு தயாரிப்பு மேல் என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், தேஜஸ் மார்க் 2 போர் விமானம்தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு துறையும், தற்போது உடனடி தேவையை சமாளிக்க தேஜஸ் மார்க் 1 போர் விமானங்களுக்கான ஆர்டருக்கு உடனடியாக சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

புதுத் தெம்பு

புதுத் தெம்பு

சில மாதங்களுக்கு முன்பு வரை குறைபாடுகளை சுட்டிக் காட்டி தேஜஸ் போர் விமானத்துக்கு ஆர்டர் கிடைக்காத நிலை இருந்தது. இது எச்ஏஎல் எதிர்காலத்திற்கு பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்திற்கான பல்க் ஆர்டர் அந்த நிறுவனத்துக்கு புதுத் தெம்பு அளித்துள்ளது. அத்துடன், மஹிந்திரா,டாடா உள்ள பல நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமையை வழங்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால், தேஜஸ் போர் விமானத்தின் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.

கேவலமாகிவிடும்...

கேவலமாகிவிடும்...

சீனாவிடமிருந்து டிசைன் உரிமைகளை பெற்று ஜேஎஃப் - 17 என்ற போர் விமானத்தை உள்நாட்டிலேயே பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், தேஜஸ் திட்டத்துக்கு கைகொடுக்காவிட்டால், எதிர்காலத்தில் போர் விமான தயாரிப்பில் பாகிஸ்தானைவிட பின்தங்கிவிடுவோம் என்பதுடுன், வெளிநாடுகளையே நம்பி இருக்க வேண்டிய நிலைக்கும் இந்தியா தள்ளப்படும். எனவேதான் தேஜஸ் போர் விமானத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த பல்க் ஆர்டரை மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது

  
மேலும்... #ராணுவம் #military
English summary
The Indian Air Force will now induct 120 home-grown Tejas light fighter jets instead of the 40 planned earlier.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark