இந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்!

Written By:

உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளுள் ஒன்றாக இந்திய விமானப்படை விளங்குகிறது. மிகப்பெரிய வான் பரப்பை கொண்ட நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், நமது விமானப்படையின் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

கண்காணிப்பு, உளவுப் பணி, தாக்குதல் பணி, தளவாட போக்குவரத்து என பல்வேறு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்திய விமானப்படை ஏராளமான விமானங்களை பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு, நம் நாட்டின் வான் பகுதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் இந்திய விமானப்படையின் விமானங்கள் குறித்த சிறப்புச் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. சுகோய் 30எம்கேஐ

01. சுகோய் 30எம்கேஐ

இந்தியாவின் மிக முக்கியமான போர் விமானம். இது பன்னோக்கு போர் விமான வகையை சார்ந்தது. ஒலியைவிட இருமடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், இடைநில்லாமல் 3,000 தூரம் செல்லும் வசதி கொண்டது. எதிரி நாடுகளின் வான்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வசதிகளை உடையது.

02. மிக் - 21 பைசன்

02. மிக் - 21 பைசன்

இந்தியாவின் முதல் சூப்பர்சானிக் போர் விமானம். பழமையான இந்த விமானங்கள் கடந்த 2006ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. இந்த போர் விமானங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விமானப்படையிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. தற்போது 260 மிக்- 21 பிஐஎஸ் போர் விமானங்கள் இந்தியாவிடம் உள்ளன. சோவியத் யூனியனிடமிருந்து லைசென்ஸ் பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அசெம்பிள் செய்தது.

03. மிக் -29

03. மிக் -29

கார்கில் போரின்போது பெரிதும் பயன்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் எஃப்- 16 போர் விமானத்தை அதன் தளத்திலிருந்து வெளியே விடாமல் கட்டுப்படுத்தியது. இப்போது இந்த விமானமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட போர் விமானம். 1985ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

04. மிராஜ் - 2000

04. மிராஜ் - 2000

அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. கார்கில் போரின்போது இந்த விமானமும் எதிரிகளை விரட்ட உதவியது. 1985ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. மொத்தம் 49 மிராஜ் 2000 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. வரும் 2040ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் சேவையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு.

 05. மிக் - 27

05. மிக் - 27

பறக்கும்போது இறக்கைகளை தேவைக்கு ஏற்ப மடக்கி விரிக்கும் தன்மை கொண்ட போர் விமானம் இது. தரை தாக்குதல்களுக்கு ஏற்ற விமானம் இது.

Photo credit: Wiki Commons/Abhi010

 06. செபிகேட் ஜாகுவார்

06. செபிகேட் ஜாகுவார்

ஏவுகணைகளை தாங்கிச் சென்று இலக்குகளை குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டது. இங்கிலாந்து- பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. மணிக்கு 1,700 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

07. எச்ஏஎல் தேஜஸ்

07. எச்ஏஎல் தேஜஸ்

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் இலகு ரக போர் விமானம். இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை விமானப்படை பைலட்டுகள் இயக்குவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் எம்கே2 மாடலும் தற்போது மேம்பாட்டுப் பணிகளில் இருந்து வருகிறது. இதுவரை இந்திய விமானப்படையிடம் உள்ள தாக்குதல் போர் விமானங்களை பார்த்தோம். அடுத்த ஸ்லைடு முதல் இந்திய விமானப்படையின் தளவாட போக்குவரத்திற்கு பயன்படும் விமானங்களை பற்றி காணலாம்.

08. போயிங் சி- 17 குளோப்மாஸ்டர்

08. போயிங் சி- 17 குளோப்மாஸ்டர்

கனரக தளவாடங்களை எடுத்துச் செல்லும் வல்லமை கொண்ட விமானம் இது. தவிர, மீட்புப் பணிகளிலும் இந்த விமானத்தின் பங்கு அபாரமானதாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக குளோப்மாஸ்டர் விமானங்களை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

09. லாக்ஹீடு மார்ட்டின் சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்

09. லாக்ஹீடு மார்ட்டின் சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்

தற்காலிகமாக அமைக்கப்படும் ஓடுதளங்களில் கூட எளிதாக தரையிறக்கும் வசதி கொண்டது. உலகின் மிகவும் உயரமான விமானப் படைத் தளங்களில் ஒன்றான காஷ்மீரில் இருக்கும் டவுளத் பெக் ஒல்டி தளத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டது இந்திய விமானப்படையின் வல்லமையை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 10. இல்யூஷன் ஐஎல்- 76

10. இல்யூஷன் ஐஎல்- 76

குளோப்மாஸ்டர் விமானத்திற்கு முன்னதாக இந்திய விமானப்படையின் கனரக தளவாட போக்குவரத்திற்கு அதிகம் பயன்பட்ட விமானம் இது. நீண்ட தூர போக்குவரத்திற்கு தற்போது பயன்படுத்தப்படுகிறது.

11. அவ்ரோ எச்எஸ்748

11. அவ்ரோ எச்எஸ்748

போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவது, படை வீரர்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்ப்பது, தளவாடங்களை சுமந்து செல்வது என பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக விரைவில் ஏர்பஸ் சி295 விமானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

12. அன்டோனோவ் ஏஎன்- 32

12. அன்டோனோவ் ஏஎன்- 32

அன்டோனோவ் ஏ-26 சாதாரண வகை விமானத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட ராணுவ விமானம். இந்த விமானமும், தற்காலிக ஓடுபாதைகளில் இறக்க முடியும். இந்திய விமானப்படையின் தளவாட போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

13. டார்னியர் டூ 228

13. டார்னியர் டூ 228

குறைந்த தூர ஓடுபாதையில் ஏறி, இறங்கும் வசதி கொண்ட சிறிய வகை விமானம். மேலும், 15 விமானங்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது.

 14. இல்யூஷன் ஐஎல்- 78

14. இல்யூஷன் ஐஎல்- 78

சுகோய் 30, மிக் 29 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்களுக்கு வானிலேயே எரிபொருளை வழங்கும் கட்டமைப்பு வசதி பெற்றது.

Photo credit: Wiki Commons/Chris Lofting

15. பெரிவ் ஏ-50 பால்கன்

15. பெரிவ் ஏ-50 பால்கன்

இது ஒரு உளவு வகை விமானம். எதிரி நாட்டு பகுதிகளை மிக துல்லியமாக கண்காணித்து, கணித்து போர் விமானங்களுக்கும், படை வீரர்களுக்கும் தகவல் தரும்.

Photo credit: Wiki Commons/Michael Sender

16. இஎம்பி- 145 ஏடபிள்யூஇசிஎஸ்

16. இஎம்பி- 145 ஏடபிள்யூஇசிஎஸ்

இந்தியாவின் இரண்டாம் நிலை வான்பகுதியை கண்காணித்து எச்சரிக்கும் வசதி கொண்ட விமானம். கடந்த ஜனவரி மாதம் குடியரசுத் தினத்தின்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தபோது, டெல்லி வான்பகுதியை முழு கண்காணிப்பில் வைத்திருக்க இந்த விமானம்தான் பயன்படுத்தப்பட்டது.

17. பிஏஇ ஹாக்

17. பிஏஇ ஹாக்

இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு இறுதி நிலை பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், இதனை போர் விமானமாகவும் பயன்படுத்த முடியும். சூர்ய கிரண் விமான சாகசக் குழுவினரும் இந்த விமானத்தை பயன்படுத்துகிந்றனர்.

Photo credit: Wiki Commons/G-BYGB

18. எச்ஏஎல் எச்ஜேடி- 16 கிரண்

18. எச்ஏஎல் எச்ஜேடி- 16 கிரண்

இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு இடைநிலை பயிற்சி தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் சாகச குழுவினரும் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக எச்ஜேடி-36 விமானங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கின்றன.

19. பிளையட்டஸ் பிசி-7

19. பிளையட்டஸ் பிசி-7

இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்பவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், 38 விமானங்களை இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ளது.

 

மேலும்... #ராணுவம் #military
English summary
The Indian Air Force is one of the largest air forces in the world. The Indian Air Force is keeping the skies safe and here are the warbirds that make this possible.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more