விமான விபத்து மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க உதவும் கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

விமானம் அல்லதுஹெலிகாப்டர் விபத்துக்கள் நடைபெறும்போது, அதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதற்கு கருப்புப் பெட்டி குறிப்பிடப்படும் மின்னணு சாதனத்தை தேடுவது குறித்த செய்திகள் வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையிலேயே, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவத்திலும் இந்த கருப்புப் பெட்டி குறித்த விஷயம் பேசப்படுகிறது.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

நாட்டின் பாதுகாப்பு துறையின் தலைமை அதிகாரி இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளதால், இந்த முறையும் கருப்புப் பெட்டியின் உதவியுடன் காரணத்தை கண்டறிவதற்கு முயற்சிகள் துவங்கி இருக்கின்றன. விமானம் அல்லது ஹெலிகாப்டர் ஏதேனும் காரணத்தால் விபத்தில் சிக்கி கட்டுப்பாட்டை அறை தொடர்பை இழந்நதாலும், இந்த கருப்புப் பெட்டி மூலமாக கடைசி நேரத்தில் விமானிகளின் உரையாடல்கள் பதிவாகி இருக்கும் என்பதால், காரணத்தை கண்டறிவதற்கு உதவும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

விமானங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கருப்புப் பெட்டி சாதனம் இன்டர்நேஷனல் ஆரஞ்ச் என்ற பிரத்யேக வண்ணத்தில் இருக்கும். விபத்தில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்நதாலும், கருப்புப் பெட்டி சேதமடையாத வகையில் அதிக வெப்பம், நீர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

கடந்த 1950ம் ஆண்டுகளில் இருந்து கருப்புப் பெட்டி விமான விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிவதில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. தி காமட் என்ற வர்த்தக விமானம் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வந்தது. இந்த விமானத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிவதற்காக, இந்த கருப்புப் பெட்டி குறித்த யோசனையை ஆஸ்திலேலிய நாட்டு விஞ்ஞானி டேவிட் வாரன் என்பவர் தெரிவித்தார். முதலில் இந்த யோசனைக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி கொடுக்க தயங்கியது. பைலட்டுகளின் தனிப்பட்ட விஷயங்களை பாதிக்கும் என்று கருதியது.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

ஆனால், 1960ம் ஆண்டு நடந்த டிரான்ஸ் ஆஸ்திரேலியன் விமானம் விபத்தில் சிக்கியதையடுத்து, அனைத்து விமானங்களிலும் இந்த கருப்புப் பெட்டி பொருத்த வேண்டும் என்று அறிவித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க அரசும் கருப்புப் பெட்டி பொருத்துவதை கட்டாயமாக்கியது.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

கருப்புப் பெட்டியானது இரண்டு விதமான சாதனங்களை கொண்டதாக இருக்கும். விமானிகளின் உரையாடல்கள் பதிவு செய்யும் CVR மற்றும் விமான எஞ்சின், வேகம், உயரம், கட்டுப்பாட்டு சாதனங்களின் இயக்கம் குறித்த பல்வேறு தரவுகளை பதிவு செய்யும் FDR என்ற இரண்டு விதமான சாதனங்கள் இடம்பெற்றிருக்கும். சில விமானங்களின் இந்த இரண்டு சாதனங்களும் ஒரே கட்டமைப்பில் இடம்பெற்று இருக்கும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டிகளின் தயாரிப்பு செலவீனமும் மிக அதிகமாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கருப்புப் பெட்டியானது 10 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கிறது. ஆனால், விமான விபத்துக்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து பாதுகாப்பை உயர்த்துவதற்கும், விலை மதிப்பற்ற பல உயிர்களின் பாதுகாப்புக்கும் இவை உதவுகின்றன.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

ஆரம்ப காலக்கட்டத்தில் காந்த நாடாவில் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமான இயக்க தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து விட்ட நிலையில், மெமரி சிப் எனப்படும் சிறிய அளவிலான மின்னணு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள பதிவுகள் எளிதாக அழியாது என்பதுடன் வெப்பம் மற்றும் தரையில் விழுத்து நொறுங்கினாலும் அதிகம் சேதம் ஏற்படுவதில்லை.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

கருப்புப் பெட்டியில் உள்ள சாதனங்களில் விமானிகளின் கடைசி இரண்டு மணி நேர உரையாடல்கள் மட்டும் பதிவாகி இருக்கும். அதேநேரத்தில், FDR சாதனத்தில் விமானத்தின் கடைசி 25 மணிநேர இயக்கம் குறித்த தரவுகள் பதிவாகி இருக்கும். விமானத்தின் திசை, வேகம், எரிபொருள் அளவு, பறந்து கொண்டிருந்த உயரம் உள்ளிட்ட பல தகவல்கள் பதிவாக செய்யப்பட்டு இருக்கும். கடந்த 2008ம் ஆண்டு முதல் ரெக்கார்டு 91 என்ற அதிநவீன கருப்புப் பெட்டிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 1,000 விதமான தரவுகள் இதில் பதிவு செய்யப்படும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் விமானம் விழுத்து விபத்துக்குள்ளானால், கருப்புப் பெட்டியில் உள்ள ULB என்ற சாதனத்தின் சிக்னல் மூலமாக, அதன் இருப்பிடத்தை தேடுதல் குழு கண்டறிய முடியும். அதேநேரத்தில், இந்த கருவியில் இருக்கும் பேட்டரியில் 30 நாட்களுக்கான சார்ஜ் மட்டுமே இருக்கும். அதற்குள் கண்டறியவிட்டால், கருப்புப் பெட்டியை மீட்பதில் சிக்கல் எழுந்துவிடும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

விமானங்கள் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கும்போது முன்புற பகுதிதான் அதிகம் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கருப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில்தான் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, 1,100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும், 5 நிமிடங்களுக்கு 5,000 பவுண்ட் அழுத்த விசையை செலுத்தினாலும், கருப்புப் பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்படுகின்றன. மேலும், கடலுக்கு அடியில் 20,000 அடி ஆழத்தில் உள்ள நீர் அழுத்தத்தையும் தாங்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

விமானங்களின் கருப்புப் பெட்டி விபத்துக்களின்போது மிக முக்கிய விஷயமாக இருந்தாலும், சில முக்கிய விபத்துக்களில் அதனை கண்டறிய முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல்களில்கூட இரண்டு விமானங்களின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை.

விமான கருப்புப் பெட்டி பற்றிய அறிந்திராத பல தகவல்கள்!

இந்த சூழலில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து விட்ட நிலையில், செயற்கைகோள்கள் உதவியுடன் விமானிகளின் உரையாடல்களை நிகழ்நேர முறையில் கட்டுப்பாட்டு அறைகளில் பதிவு செய்யும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற யோசனைகள் எழுந்துள்ளன. ஆனால், இதற்கான செலவீனம் மிக மிக அதிகம் என்பதால், நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக விமானத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Important Details About Plane Black Box.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X