இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... அண்டை நாடுகளின் இம்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

Written By:

அண்டை நாடான பாகிஸ்தான் நேரடியாக மோதுவதற்கு திராணி இல்லாமல், தீவிரவாதிகளை ஏவி மறைமுக போரை இந்தியா மீது ஏவிவிட்டு வருகிறது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வாய்ப்புகளை இந்தியா பரிசீலித்து வருகிறது. இது ஒருபுறம் நடந்தாலும், மறுபுறத்தில் ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா துரிதப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ டிரியன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகள் எல்லைப்பகுதியில் வாலாட்டி வரும் நிலையில், இந்த ரஃபேல் போர் விமானங்கள் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்களில் சில நவீன சிறப்புகள் எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்புதான் ரஃபேல் போர் விமானம். கடந்த ஆட்சியிலேயே இதற்கான ஒப்பந்தங்கள் போட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரஃபேல் போர் விமானத்தின் மிக முக்கிய சிறப்பு, எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பு கொண்டது. இதன் அசாத்திய வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரஃபேல் போர் விமானங்கள் ஏர் சுப்பீரியாரிட்டி என்ற வகையை சேர்ந்தது. அதாவது, வானிலிருந்து தரை தாக்குதல்கள், வான் இலக்குகளை தாக்கும் என்பதுடன், எதிரி நாட்டு வான் பகுதியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும் திறன் வாய்ந்தது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

எனவே, எதிரி நாடுகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். தற்போது நம்மிடம் இருக்கும் ஏர் சுப்பீரியாரிட்டி ரகத்தை சேர்ந்த சுகோய் எஸ்யூ- 30எம்கேஐ விமானத்தை விட இலகு எடை கொண்டதுடன், அதிசக்திவாய்ந்த விமானம்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ஏர் சுப்பீரியாரிட்டி போர் விமானங்களில் இருக்கும் சாதாரண ஏவுகணைகள் 37.04 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களில் இருக்கும் நவீன ரேடார் கருவிகள் மூலமாக, எதிரியின் வான்பகுதியை எளிதாக கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரஃபேல் விமானத்தை வாங்குவது ஒரு பக்கம் பலம் என்பதுடன், அதனுடன் சேர்த்து வாங்கப்படும் இரண்டு ஏவுகணைகள் அண்டை நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆம், ரஃபேல் விமானத்தை இயக்கும் போர் விமானிகளுக்கு இஸ்ரேல் நாட்டின் அதிநவீனமான திரையுடன் கூடிய ஹெல்மெட்டும் சேர்த்து வழங்கப்படும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

அதேபோன்று, ரஃபேல் விமானத்தில் பொருத்துவதற்கான மீட்டியோர் என்ற ரகத்தை சேர்ந்த அதிநவீன ஏவுகணைகளும் வாங்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த எம்பிடிஏ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மீட்டியோர் ஏவுகணைகள் கண்ணுக்கு புலப்படாத 100 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக அடிக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

விமானத்திலிருந்து 560 கிமீ தூரத்தில் இருக்கும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய என்ற அதிநவீன ஏவுகணைகளும் சேர்த்து வாங்கப்படுகிறது. எதிரி நாட்டு வான் பகுதியில் நுழையாமலேயே, அங்குள்ள இலக்குகளை துல்லியமாக அடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரஃபேல் விமானத்தின் மிக முக்கிய திறன்களில் ஒன்று. அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால், எதிரி நாடுகள் தயக்கத்துடனே இந்த விமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

பைலட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. எந்த ஒரு சூழலிலும் பைலட்டின் கவனம் சிதறாமலும், உடல் பாதிப்பு இல்லாமலும் எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து விளையாடலாம்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவமைப்பு அம்சங்களை கொண்டது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

ரபேல் போர் விமானத்தில் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், ஒற்றை எஞ்சின் போர் விமானங்களை விட இது பாதுகாப்பு அதிகம் கொண்டது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

இந்த விமானத்தில் முப்பரிமான நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

சுகோய் எஸ்யூ 30எம்கேஐ விமானத்தைவிட இது எடை மிகவும் குறைந்தது. எனவே, ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதாவது, எதிரிகளின் பகுதிகளுக்குள் அதிக தூரம் பயணித்து திரும்பும் ஆற்றல் கொண்டது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. இயல்பாக மணிக்கு 1,912 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். எனவே, இதனை ஏவுகணைகளை வீசி தாக்குவது என்பதும் சவாலானதாகவே இருக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

மூன்று மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. ரபேல் சி என்ற சிங்கிள் சீட்டர் மாடலும், ரபேல் பி என்ற 2 சீட்டர் மாடலும் விமானப்படையின் தரை தளங்களிலிருந்து பயன்படுத்தும் வசதியுடனும், ரபேல் எம் என்ற மற்றொரு சிங்கிள் சீட்டர் மாடல் விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப்படுகிறது. அதாவது, குறைவான தூரத்தில் நிறுத்துவதற்கு ஏதுவான கொக்கி அமைப்பை கொண்டிருக்கும்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

இந்திய விமானப் படையில் ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், அவற்றைவிட இந்த நான்காம் தலைமுறை ரபேல் விமானம் கூடுதல் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ரபேல் விமானம் இரண்டு சுகோய் 30 விமானங்களுக்கு சமமானதாக இருக்கும் என்று விமானப் படை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

அண்டை நாடுகளால் இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க குறைந்தது ரபேலுக்கு இணையான 44 போர் விமானங்கள் தேவைப்படுகிறதாம். இந்த நிலையில், இந்தியா வாங்கும் 36 ரபேல் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டின் வான் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு, ரஃபேல் போன்ற அதிநவீன பல் செயல்திறன் கொண்ட போர் விமானங்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

குறிப்பாக, எல்லைகளில் அண்டை நாடுகளின் வாலாட்டும் போக்கை கட்டுப்படுத்த ரஃபேல் போர் விமானங்கள் துணை நிற்கும். இந்திய மதிப்பில் ரூ.59,000 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது.

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

அடுத்த 36 மாதங்களில் ரஃபேல் போர் விமானங்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். அதன்பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக அடுத்த 66 மாதங்களில் 36 ரஃபேல் விமானங்களும் இந்தியாவிற்க வந்துவிடும். ஆனால், இந்த விமானங்களை இயக்குவதற்கு போர் விமானிகளுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படும்.

விமானப்படையில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தின் தனிச் சிறப்புகள்!

விமானப்படையில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தின் தனிச் சிறப்புகள்!

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானங்கள்!

36 ரஃபேல் போர் விமானங்களை வைத்து இரண்டு விமானப் படை பிரிவுகள் உருவாக்க முடியும். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநில எல்லையோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ரஃபேல் போர் விமான படைப்பிரிவுகள் செயல்படும்.

English summary
Rafale Fighter Jet Deal Will give Tough Message To Pakistan. Read the complete details in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark