ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய அந்த 'பிரம்மாஸ்திரம்'!!

Posted By:

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில், அதிரடி ராணுவ நடவடிக்கையை துவங்கியிருக்கிறது ரஷ்யா. சிரியாவில், அந்நாட்டு ராணுவத்திற்கு துணையாக ரஷ்ய ராணுவமும் இப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கிறது.

ஆனால், பலம் வாய்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று உணர்ந்து கொண்டு, ஓர் பிரத்யேக ஏவுகணையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிரியாவுக்கு அனுப்பியிருக்கிறார். அது தன் வேலையை இப்போது துவங்கியிருக்கிறது.

வேறுபாடு

வேறுபாடு

சாதாரண ஏவுகணைகளுக்கும், இந்த ஏவுகணைக்கும் பல விதங்களில் வேறுபாடுகள் உண்டு. மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும், இந்த ஏவுகணை மூலமாக அவர்களை துல்லியமாக அழிக்க முடியும் என்பதே இதன் சிறப்பு.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

அந்த ரகசிய ஏவுகணை

அந்த ரகசிய ஏவுகணை

Blazzing Sun என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையும், அதனை தாங்கிச் சென்று செலுத்தம் வாகனத்தையும் சேர்த்து TOS -1A என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

Photo credit: Goodvint/Wiki Commons

வெளியுலகுக்கு அறிமுகம்

வெளியுலகுக்கு அறிமுகம்

மிக ரகசியமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை முதல்முறையாக 1988ல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது ரஷ்யா ரகசியமாக பயன்படுத்தியது. அடுத்து, 1999ல் இரண்டாம் செசன்ய போரின்போது ரஷ்ய பயன்படுத்தியது.

Photo credit: Alexei Kuznetsov/Wiki Commons

மோசமானவன்...

மோசமானவன்...

உலகிலேயே மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ராணுவ ஆயுதங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. அடர்ந்த காடுகள் கொண்ட மலைப்பகுதிகள், பதுங்கு குழிகள், மற்றும் சுரங்கங்களில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கூட அழித்துவிடும் வல்லமை கொண்டது.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

பறக்கும் சூரிய பந்து...

பறக்கும் சூரிய பந்து...

இந்த ஏவுகணை செலுத்தப்பட்டவுடன், இலக்கை நெருங்கும்போது, எரியும் தன்மை கொண்ட திரவத்தை அந்த பகுதி முழுவதும் தெளித்துவிடும். பின்னர் இலக்கிற்கு அருகில் வெடித்து சிதறும். அப்போது அந்த மண்டலமே தீப்பிடித்து எரியும்.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

தாக்குதல் நுட்பம்

தாக்குதல் நுட்பம்

இந்த ஏவுகணை வெடிக்கும்போது, பெரும் தீ ஜூவாலைகளையும், 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்தும்.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

ஆக்சிஜனை உறிஞ்சிவிடும்...

ஆக்சிஜனை உறிஞ்சிவிடும்...

ஏவுகணை வெடித்தவுடன், அந்த பகுதியில் இருக்கும் ஆக்சிஜன் முழுவதையும் வெப்பத்தால் உறிஞ்சிவிடும். எனவே, தீயில் சிக்கி உயிர் பிழைத்தாலும், அந்த பகுதியில் ஆக்சிஜன் கிடைக்காமல், மூச்சுத் திணறி இறந்துவிடுவர். மேலும், அதன் புகையும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி எதிரிகளை மரணிக்க வைத்துவிடும்.

Photo credit: RIA Novosti/Wiki Commons

பேரழிவு

பேரழிவு

உதாரணத்திற்கு, ஒரு ஏவுகணையின் மூலமாக எட்டு கோபுரங்களை கூட நொடியில் தகர்த்துவிட முடியும். மலைப்பாங்கான பகுதி, பதுங்கு குழிகளில் இருப்பவர்கள் கூட இந்த ஏவுகணையிடமிருந்து தப்பிக்க முடியாது.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

தாக்குதல்

தாக்குதல்

சிரிய நாட்டின் முக்கிய கடற்கரை நகரமான லடாக்கியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறி வைத்து இந்த ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

Photo credit: Vitaliy Ragulin/Wiki Commons

உள்நாட்டு போர்களில்...

உள்நாட்டு போர்களில்...

இந்த ஏவுகணை உள்நாட்டு போர்களில் பயன்படுத்த ஏதுவானது. எனவே, இந்த ஏவுகணையை குறிப்பிட்டு புதின் அனுப்பியிருக்கிறாராம். மேலும், பன்முக ஏவு வாகனத்தின் மூலமாக எளிதாகவும், தொடர்ந்தும் தாக்குதல் நடத்த முடியும்.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

ஏவுகணை வீச்சு

ஏவுகணை வீச்சு

இந்த ஏவுகணையை 500 மீட்டர் முதல் 6,000 மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை வீச்சாக கொண்டு ஏவ முடியும். ஏவு வாகனத்தில் உள்ள ஏவுகணைகளை 6 முதல் 12 வினாடிகளுக்குள், அடுத்தடுத்து இலக்குகளை நோக்கி தொடர்ந்து செலுத்த முடியும்.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

ஏவு வாகனம்

ஏவு வாகனம்

இந்த ஏவுகணையை செலுத்துவதற்கான ஏவு வாகனம் ரஷ்யாவின் டி-72 பீரங்கியின் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 45.3 டன் எடை கொண்டது. இந்த ஏவு வாகனத்தில் 220மிமீ விட்டம் கொண்ட லாஞ்சர்கள் உள்ளன.

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

 இடைநில்லாமல் செலுத்தலாம்...

இடைநில்லாமல் செலுத்தலாம்...

840 எச்பி பவரை வழங்கக்கூடிய வி84 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 550 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பயணிக்கும். மணிக்கு அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் செல்லும். 3 பேர் இந்த வாகனத்தை இயக்க முடியும். 24 ஏவுகணைகளை பொருத்த முடியும்.

Photo credit: Vitaliy Ragulin/Wiki Commons

தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்

01. அக்னி ஏவுகணை சிறப்புகள்

02. இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்...

03. இந்தியா சொந்தமாக தயாரித்த முதல் போர்க்கப்பல்

தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்

ஆட்டோமொபைல் துறை நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் அள்ளி பருகிட டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

Photo credit: Vitaly V. Kuzmin/Wiki Commons

  

மேலும்... #ராணுவம் #military
English summary
Russia sends 'Blazing Sun' missile to Syria to wipe out ISIS.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more