Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாஸ்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூலில் புதிய சாதனை... ஒரே நாளில் இவ்வளவு கோடி ரூபாய் கலெக்ஸனா?
இந்தியாவில் பாஸ்டேக் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்டேக் முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக பாஸ்டேக் மூலமான சுங்க சாவடி கட்டண வசூல் தற்போது 90 சதவீதத்தை நெருங்கி வருகிறது. தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இந்த சதவீதம் உடனடியாக மேலும் அதிகரிக்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளின் அனைத்து லேன்களையும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கடந்த திங்கள் கிழமை பாஸ்டேக் லேன்களாக மாற்றியது. அதாவது கடந்த பிப்ரவரி 15-16ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு முன்பும் கூட இப்படியான அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் காலக்கெடுவை நீட்டிப்பதுமாகதான் மத்திய அரசு இருந்தது. ஆனால் இம்முறை காலக்கெடு நீட்டிக்கப்படாமல், பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாகதான் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடைசி 2 நாட்கள் தொடர்ச்சியாக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட டேக்குகள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் கட்டாயம் என்பதால், வாகன உரிமையாளர்கள் வேகமாக பாஸ்டேக்கிற்கு மாறி வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன் கடந்த பிப்ரவரி 17ம் தேதி இமாலய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பாஸ்டேக் மூலம் கிட்டத்தட்ட 60 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் அன்று ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூலில் இது ஒரு சாதனையாகும்.

அதாவது குறிப்பிட்ட ஒரு நாளில் பாஸ்டேக் மூலம் வசூலான அதிகபட்ச தொகை இதுதான். இதற்கு முன்பாக ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் இவ்வளவு தொகை வசூலானது கிடையாது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ''பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் ஒட்டுமொத்தமாக 87 சதவீதத்தை தொட்டுள்ளது.

வெறும் இரண்டே நாட்களில் 7 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 100க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் 90 சதவீதத்தை தொட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இந்த சதவீதம் இன்னும் உயரும்'' என்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதற்காக பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் மூலம் சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்பதுடன், வாகனங்களின் விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்படும். இதுதவிர காகித பயன்பாடு குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக இடைவெளி என பாஸ்டேக் மூலம் இன்னும் பல்வேறு நன்மைகள் உள்ளன.