இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்தியாவின் முதல் 100சிசி என்றதும் பலரும் கருதுவது யமஹா ஆர்எக்ஸ்100 பைக்காக இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு முன்னதாகவே ஒரு 100சிசி பைக் இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வெற்றியை பதிவு செய்தது.

அது எந்த மாடலாக இருக்கும் என்று யூகித்துவிட்டாலும், தெரியாவிட்டாலும் தொடர்ந்து செய்தியை படியுங்கள். இந்தியாவின் முதல் 100சிசி பைக் பற்றிய பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்தியாவின் 100சிசி பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் நெஞ்சில் இன்றும் குடியிருந்து வரும் மாடல் உண்டென்றால், அது நிச்சயமாக கண்ணை மூடிக்கொண்டு யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை கூறிவிடலாம். இளையராஜா இசைக்கும், ரவிவர்மன் ஓவியத்திலும் சொக்கிக் கிடப்பது போன்ற அனுபவத்தை தந்த 100சிசி பைக் மாடல் என்றால் அது நிச்சயம் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்தான்.

Image Courtesy: Arya.Akshay/Wiki Commons

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

80s, 90s கிட்ஸ்களின் கனவு வாகனமாக இருந்த இந்த யமஹா ஆர்எக்ஸ்100 பைக் இன்றைக்கும் பலரின் பொக்கிஷ வாகனமாக பாதுகாத்து வருவதையும், இதற்கு தனி மரியாதை இருப்பதையும் கண்டிருக்கலாம். விற்பனையிலும் சக்கை போடு போட்டது. இதனால், பலரும் இன்றைக்கும் மறக்க முடியாத மாடலாக இருப்பதால், யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை முதல் 100சிசி மாடலாக கருதுவதுண்டு.

Image Courtesy: Ignesious Robin/Wiki Commons

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

ஆனால், உண்மையில் இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் இந்த் சுஸுகி ஏஎக்ஸ்100 (Ind Suzuki AZ100) பைக்தான். தமிழகத்தை சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் (இப்போது டிவிஎஸ் மோட்டார்) மற்றும் ஜப்பானிய நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் இணைந்து இந்த 100சிசி பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தன.

Image Courtesy: Arya.Akshay/Wiki Commons

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

எதிர்பார்த்தது போலவே, இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் 1989ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. முதல்கட்டமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகள் ஜப்பானில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், விலையும் சற்று அதிகமாகவே இருந்தது.

Image Courtesy: Team BHP

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

எனினும், இதன் டிசைன், பிக்கப் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவர்ந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதன் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100 உள்ளிட்ட பைக்குகளின் வரவால், இந்த பைக்கின் மவுசு குறைந்துபோனது.

Image Courtesy: Team BHP

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட ஏஎக்ஸ்100 பைக்குகளில் சில விசேஷமான அம்சங்கள் இருந்தன. ஆனால், தயாரிப்பு செலவை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மாறுதல்களால் க்ரோம் பாகங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டன.

Image Courtesy: Team BHP

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டருடன் 98சிசி திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎஸ் பவரையும், 9.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த பைக் மணிக்கு 107 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருந்தது.

Image Courtesy: Team BHP

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்த பைக்கிற்கு மாற்றாக ஏஎக்ஸ்115 மாடலை சுஸுகி அறிமுகப்படுத்தியது. இந்த பைக் 1990களில் இருந்து 2000ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. சுஸுகி நிறுவனத்துடன் கூட்டணி முறிந்த பின்னர், இதன் வழித்தோன்றலாக டிவிஎஸ் மேக்ஸ்100 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

Image Courtesy: Team BHP

 இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்த நிலையில், மாசு உமிழ்வு பிரச்னையால் 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த பைக்குகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, 100சிசி 4 ஸ்ட்ரோக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், இந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகளின் ஓட்டிய அனுபவம் இன்றும் பலரின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

Image Courtesy: Team BHP

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
RX100 Was Not India's First 100cc - Do You Know Which Bike It Was? Here is the answer. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X