அடுத்து ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுக்கும் இந்தியா!

Written By:

அடுத்து ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் சக்ரா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் செயல்திறன் சிறப்பாக இருப்பதையடுத்து, கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலையும் கடற்படையில் சேர்க்க மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டிருக்கிறது.

ஐஎன்எஸ் சக்ரா

ஐஎன்எஸ் சக்ரா

அகுலா கிளாஸ் என்று குறிப்பிடப்படும் ரகத்தில் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை 2012ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு எடுத்தது இந்தியா. நெர்பா என்ற பெயரிடப்பட்ட இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ஐஎன்எஸ் சக்ரா என்று பெயர் மாற்றம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதன் செயல்திறன் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்து...

அடுத்து...

இதையடுத்து, அடுத்து ஒரு அகுலா கிளாஸ் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலையும் ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு எடுப்பதற்கு இந்தியா இசைந்துள்ளது. இதற்கான, ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. எனவே, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடி

ரெடி

புதிய நீர்மூழ்கி கப்பல் தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் தேவைகளுக்கு தகுந்தவாறு கருவிகள், உபகரணங்களை பொருத்தி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் மூலமாக இந்தியாவின் கடல் பாதுகாப்பு வெகுவாக மேம்படும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த கப்பலில் 3,000 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை செலுத்த முடியும். ஆனால், இந்தியாவிற்கான மாடலில் 300 கிமீ தூரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணைகளை செலுத்தும் வசதியுடன் வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக, அண்டை நாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க பக்க பலமாக இருக்கும்.

 நீரில் மூழ்கும் தகவமைப்பு

நீரில் மூழ்கும் தகவமைப்பு

அதிகபட்சமாக 520 மீட்டர் ஆழம் வரை கடலில் மூழ்கி பயணிக்கும். கடல் மட்டத்தில் மணிக்கு 11 நாட்டிக்கல் மைல் வேகத்திலும், நீருக்கு அடியில் மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக 100 நாட்கள் வரை கரைக்கு வர அவசியமிருக்காது.

ஏவுகணை செலுத்தும் திறன்

ஏவுகணை செலுத்தும் திறன்

இந்த நீர்மூழ்கி கப்பலில் 650மிமீ விட்டம் கொண்ட ஏவுகணை செலுத்தும் பீரங்கிகளும், நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை செலுத்துவதற்காக 533 மிமீ விட்டம் கொண்ட பீரங்கிகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 28 ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் வசதி கொண்டது.

விசேஷ பயிற்சி

விசேஷ பயிற்சி

ஏற்கனவே கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் சக்ரா கப்பலை இயக்குவதற்காக 300 இந்திய கடற்படை வீரர்களுக்கு ரஷ்யாவில் விசேஷ பயிற்சி வழங்கப்பட்டது. ஒருமுறையில் 73 பேர் பணியில் இருப்பார்கள். அடுத்து வர இருக்கும் புதிய அகுலா நீர்மூழ்கி கப்பலுக்காக கடற்படை வீரர்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படும்.

போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!

போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
India To Lease Second Akula-Class Nuclear-Sub From Russia.
Story first published: Wednesday, July 13, 2016, 13:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark