அமெரிக்காவே திணறும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்: அசால்ட்டாக தயாரிக்கும் இந்தியா!

Written By:

உலகிலேயே பயன்பாட்டில் இருக்கும் ஒரே ஐந்தாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட போர் விமானம் அமெரிக்காவின் ரேப்டர்தான். ஆனால், அந்த விமானத்திற்கான தயாரிப்பு செலவுக்கான முதலீடுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அந்த விமானத்தின் உற்பத்தியை நிறுத்திவிட்டது அமெரிக்கா.

இந்த நிலையில், அமெரிக்காவே திணறிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமான தயாரிப்பை துரிதப்படுத்தியிருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

நடுத்தர வகை

நடுத்தர வகை

சமீபத்தில் விமானப்படையில் சேர்க்கப்பட்டிருக்கும் எல்சிஏ என்று குறிப்பிடப்படும் தேஜஸ் போர் விமானம் இலகு வகையை சேர்ந்தது. ஆனால், புதிய ஐந்தாம் தலைமுறை விமானம் நடுத்தர வகையை சேர்ந்தாக இருக்கும் என்பதுடன், இரட்டை எஞ்சின்கள் கொண்டதாக இருக்கும்.

சிறப்பு என்ன?

சிறப்பு என்ன?

இது பன்னோக்கு வகை போர் விமானம்.உலகிலேயே மிக நவீன ரக விமானமாக இருக்கும். எதிரி நாடுகளுக்குள் புகுந்து ரேடார் கண்களில் சிக்காமல் தாக்குதலை கச்சிதமாக முடித்துவிட்டு திரும்பும். வான் தாக்குதல்களை முறியடிக்கும். எதிரி விமானங்களை வழிமறித்து அழிக்கும். ஒருங்கிணைந்த ரேடார் கட்டுப்பாட்டு அமைப்புடையது. எளிதாக வளைந்து நெளிந்து பறக்கும் என்பதால், எதிரிகளின் ஏவுகணைகளில் சிக்காது.

சவால்

சவால்

இதன் தொழில்நுட்பம் மிக சிக்கலானது என்பதுடன் தயாரிப்பு செலவீனம் மிக அதிகம். அதனாலேயே, பல நாடுகள் பழைய விமானங்களை மேம்படுத்தி வைத்துக் கொண்டு இந்த திட்டத்தை கையிலெடுக்க துணியவில்லை.

சூடுபட்ட அமெரிக்கா

சூடுபட்ட அமெரிக்கா

188 ரேப்டர் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை 67 பில்லியன் டாலர் முதலீட்டில் அமெரிக்கா தயாரித்தது. இது கட்டுப்படியாது என்று கருதி, அதன் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அடுத்து, எஃப்-35 லைட்னிங் விமானத்தை பயன்பாட்டில் வைத்து ஈடுகட்ட முடிவு செய்திருக்கிறது. எனினும், தொழில்நுட்பப் பிரச்னைகளால் தாமதம் ஏற்பட்டு வருவது உண்மை.

இந்தியாவின் துணிச்சல்

இந்தியாவின் துணிச்சல்

அமெரிக்கா நிதி பிரச்னையை வைத்து ரேப்டர் போர் விமான தயாரிப்பை கைவிட்டது. ஆனால், இந்தியா அந்த திட்டத்தை வெகு எளிதாக முடிக்கும். ஏனெனில், அமெரிக்காவை ஒப்பிடும்போது பன்மடங்கு குறைவான முதலீட்டில் புதிய ஐந்தாம் தலைமுறை விமானத்தை இந்திய விஞ்ஞானிகள் மிக சிறப்பான அம்சங்களுடன் தயாரித்துக் கொடுக்கும் திறமை பெற்றவர்கள். இதனால், இந்த திட்டத்தில் இந்தியா துணிச்சலாக களமிறங்கியிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தற்போது இந்திய விமானப்படையில் உள்ள பழமையான விமானங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக, ஐந்தாம் தலைமுறை வான் பலத்தை வெகுவாக அதிகரித்துக் கொள்ளவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்ய உதவி

ரஷ்ய உதவி

இந்தியாவின் நெருங்கிய ராணுவக் கூட்டாளியான ரஷ்யாவும் ஐந்தாம் தலைமுறை விமானத்தை தயாரித்து வருகிறது. சுகோய் டி-50 விமானத்தின் அடிப்படையில் புதிய ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சொந்த விமானம்

சொந்த விமானம்

அதேநேரத்தில், இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்பதால், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இந்த வடிவமைப்பு பணியில் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதைதவிர, முழுக்க முழுக்க சொந்த முயற்சியில் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் பணிகளிலும் மத்திய பாதுகாப்புத் துறை ஈடுபட்டிருக்கிறது.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய ஐந்தாம் தலைமுறை விமானத்தை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் புரோட்டோடைப் 2023-24ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

சொந்த விமானங்கள்

சொந்த விமானங்கள்

அடுத்த தசாப்தத்தில் இந்திய விமானப்படையில் உள்ள அனைத்து வெளிநாட்டு போர் விமானங்களையும் நீக்கிவிட்டு, முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படும் விமானங்களை முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டிருக்கிறது.

முதலீடு

முதலீடு

புதிய ஐந்தாம் தலைமுறை விமானங்களை தயாரிப்பதற்காக ரூ.25,000 கோடி வரை செலவிடப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.5,000 கோடியில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செலவு

செலவு

வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்குவதற்காகவே பல பில்லியன் டாலர்களை இந்தியா செலவழிக்க வேண்டியிருக்கிறது. மேலும், பண பரிமாற்றம், பராமரிப்பு செலவு என்று பார்க்கும்போது போர் விமானங்களின் உண்மையான மதிப்பைவிட பல மடங்கு கூடுதல் செலவிட வேண்டிய அவல நிலை இருக்கிறது.

குறைவு

குறைவு

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக போர் விமானங்களை தயாரிக்கும்போது உற்பத்தி செலவு பன் மடங்கு குறைவாக இருக்கிறது. அத்துடன், பராமரிப்பு செலவும் மிக குறைவு. இதனால், அதிக எண்ணிக்கையிலான போர் விமானங்களை இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலம் பெருகும்

பலம் பெருகும்

இந்திய விமானப்படையில் சொந்த போர் விமானங்கள் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வரும்போது, இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு இந்த போர் விமானங்கள் வரப்பிரசாதமாக அமையும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்- சிறப்புத் தகவல்கள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்- சிறப்புத் தகவல்கள்

 
மேலும்... #ராணுவம் #military
English summary
India Plans to develop Of Its Own 5th-generation fighter aircraft.
Story first published: Tuesday, August 2, 2016, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark