ரஃபேல் விமானத்திற்கு ஹேமர் ஏவுகணை... எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

எல்லைப் பகுதிகளில் சீனா குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் போர் விமானத்தின் தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக அதிரடி முடிவு ஒன்றை இந்தியா எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

லடாக் பகுதியில் சீனா தொடர்ந்து பதட்டத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, சீனாவுக்கு எதிரான ராஜ்ய, வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டாம் என்று கூறிக்கொண்டே, லடாக் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வருகிறது சீனா. இதனால், எதற்கும் தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது இந்தியா.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

மேலும், எல்லையில் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இணைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. வரும் 29ந் தேதி 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து இறங்க உள்ளன. அன்றைய தினமே இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட உள்ளன.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

ரஃபேல் போர் விமானங்கள் பெரும் மலைத்தொடர் கொண்ட லடாக் பிரதேசத்திலும், கடும் குளிரிலும் எளிதாக இயக்க முடியும். இதனால், ரஃபேல் போர் விமானத்தின் வரவு எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை வகுப்பதில் மிக முக்கிய பங்காற்றும். சீனா மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள போர் விமானங்களை விட ரஃபேல் அதிக திறன் வாய்ந்தது.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

இந்த சூழலில், ரஃபேல் போர் விமானத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் விதத்தில், ஹேமர் ஏவுகணைகளை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஏவுகணைகளை அவசர கால கொள்கையின் கீழ் வாங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

ஹேமர் ஏவுகணைகள் ரஃபேல் போர் விமானத்தில் பொருத்தப்பட்டால், 60 முதல் 70 கிமீ தூர வரம்பு எல்லைக்குள்ளான இலக்குகளை துல்லியமாக அடிக்கும். அதாவது, வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் திறனை கொண்டது. ஹேமர் ஏவுகணைகளை இவ்வளவு அவசரமாக வாங்குவதற்கு காரணம் உள்ளது.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

ஹேமர் ஏவுகணைகளை மலைப்பாங்கான பகுதிகளில் அல்லது சமவெளிகளில் அமைக்கப்படும் பதுங்கு குழிகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இதற்காகவே, இந்த ஏவுகணைகள் விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, எல்லைப்பகுதியில் உள்ள பதுங்கு குழிகள் மற்றும் எதிரி நாட்டு ராணுவ அல்லது தீவிரவாதிகளின் கூடாரங்களை தவிடுபொடியாக்கும் திறன் வாய்ந்தது ஹேமர் ஏவுகணை.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கையில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்களில் இஸ்ரேல் நாட்டின் ஸ்பைஸ் என்ற பிரிசிஸன் கெய்டடு வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதே பாணியில்தான் இந்த ஹேமர் ஏவுகணையும் செயல்படும்.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

ஒரு ரஃபேல் விமானத்தில் 6 ஹேமர் ஏவுகணைகளை பொருத்த முடியும். மேலும், ரஃபேல் போர் விமானம் இந்தியா வரும்போதே ஆயுதங்களை தரித்தபடி கொண்டு வரப்படுகிறது. இதனால், போருக்கு தயார் நிலையில் உள்ள அனைத்து தாக்குதல் அம்சங்களையும் பெற்றிருக்கும்.

 எல்லையில் இனி கூடாரம் போட எதிரிகள் ரெண்டு தடவை யோசிக்கணும்

அதாவது, ரஃபேல் போர் விமானத்தில் வானிலிருந்து வான் இலக்குகளை அழிப்பதற்கான மிட்டியோர் மற்றும் நீண்ட தூர இலக்குகளை தரை இலக்குகளை அழிப்பதற்கான ஸ்கால்ப் ஆகிய நீண்ட தூர ஏவுகணைகளுடன் வர இருக்கிறது. அத்துடன் ஹேமர் ஏவுகணை மூலமாக எல்லையில் உள்ள எதிரி நாட்டு ராணுவ கூடாரங்கள், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை தகர்த்து அழிப்பதற்கு பயன்படும்.

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
The new Rafale fighter jets set to arrive this month which already has a deadly weapons package will be equipped with the HAMMER air to ground precision-guided munitions.
Story first published: Friday, July 24, 2020, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X