பஹ்ரைன் ஏர் ஷோவில் அப்ளாஸ் வாங்கிய இந்தியாவின் தேஜஸ்... ஜகா வாங்கிய பாகிஸ்தான் ஜேஎஃப்-17!

Written By:

கடந்த மாதம் பஹ்ரைன் நாட்டில் நடந்த ஏர் ஷோவில், இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் பங்கேற்று சாகசங்களை புரிந்து வெளிநாட்டினரின் பாராட்டுதல்களை பெற்றது. அதேநேரத்தில், நம் நாட்டு தேஜஸ் போர் விமானத்துக்கு நேரடி போட்டியாக கருதப்பட்ட, பாகிஸ்தான் நாட்டின் ஜேஎஃப்-17 போர் விமானத்தின் சாகசங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

ஏனெனில், தேஜஸ் விமானத்துக்கு இணையான சாகசங்களை செய்ய முடியாது என்ற அச்சம் காரணமாகவே, ஜேஎஃப்-17 போர் விமானத்தை பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தான் கழற்றி விட்டதாக சர்வதேச பாதுகாப்புத் துறை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்முறையாக வெளிநாட்டு ஏர் ஷோவில் கலந்து கொண்டு தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் தேஜஸ் விமானம் பஹ்ரைன் ஏர் ஷோவில் செய்து காட்டிய வித்தைகள் பற்றியும், சுவாரஸ்யமான கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

தேஜஸ்

தேஜஸ்

தேஜஸ் போர் விமானத்தின் தயாரிப்புப் பணிகளை நமது நாட்டின் பொதுத் துறை நிறுவனமான HAL என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்தான் மேற்கொண்டு வருகிறது. பெங்களூரிலுள்ள விமான தயாரிப்பு தொழிற்சாலையில்தான் இந்த விமானம் அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது.

ஜேஎஃப்-17

ஜேஎஃப்-17

சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பில் உருவான விமானம்தான் ஜேஎஃப்-17 போர் விமானம். சீனா உருவாக்கித் தந்த இந்த விமானத்தை பாகிஸ்தான் சொந்தமாக அசெம்பிள் செய்கிறது. நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்துக்கு நேரடி போட்டியாகவும், ஒப்புமை செய்தும் பார்க்கப்படும் விமானம் இதுதான்.

விமர்சகர்களுக்கு பயந்து...

விமர்சகர்களுக்கு பயந்து...

பஹ்ரைன் ஏர்ஷோவில் சாகசங்களை செய்யும் போர் விமானங்களை சர்வதேச அளவிலான விமானத் துறை நிபுணர்கள் ஒப்பீடு செய்து விமர்சனங்களை முன் வைப்பது வழக்கம். எனவே, ஜேஎஃப்17 விமானத்தை அனுப்பினால், எதிர்மறை விமர்சனங்களை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதி பாகிஸ்தான் கடைசி நேரத்தில் இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.

சீன உதிரிபாகங்கள்

சீன உதிரிபாகங்கள்

ஜேஎஃப்-17 விமானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், அவற்றின் தரம், செயல்திறன் போன்றவை சர்வதேச விமானவியல் துறை நிபுணர்களின் பார்வைக்கு சென்றுவிட்டால், விமானத்தின் குறைகளை எளிதாக பட்டியலிட்டுவிடுவர். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகிவிடும் என்ற பொருளிலேயே ஜேஎஃப்-17 ஜகா வாங்கியிருக்கிறது.

கலக்கிய தேஜஸ்

கலக்கிய தேஜஸ்

பஹ்ரைன் ஏர் ஷோவில் இரண்டு தேஜஸ் விமானங்கள் சாகசங்களை செய்து காட்டி பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷங்களை பெற்றது. மேலும், சுழன்று அடித்து, சீறிப்பாய்ந்து, குட்டிக் கரணம் அடித்து தனது மொத்த திறமையையும் அங்கு காட்டி பலரையும் வியக்க வைத்தது.

 அதிகபட்ச நேரம்

அதிகபட்ச நேரம்

பாகிஸ்தான் போர் விமானம் விலகியது மட்டுமில்லை, அமெரிக்காவின் போர் விமானம் கூட சிறிய சாகசங்களேயே செய்து காண்பித்தது. ஆனால், அங்கு தேஜஸ்தான் முழுமையாக பார்வையாளர்களை கவர்ந்ததாக, விமர்சகர்களும், பத்திரிக்கையாளர்களும் பாராட்டு தெரிவித்தனர். சுமார் 8 நிமிடங்கள் வரை பறந்து, அதிக அளவில் சாகசங்களை செய்து காட்டியதில் தேஜஸ் மிக முக்கிய இடத்தை பெற்றது.

சாகசம்

சாகசம்

தலைகீழாக பிறழ்ந்து பறப்பது, குட்டிக் கரணம் அடிப்பது, மேலிருந்து வேகமாக கீழே வந்து செங்குத்தாக மேல் எழுவது என பல தரப்பட்ட சாகசங்களை வானில் நிகழ்த்திக் காட்டியது தேஜஸ் போர் விமானம்.

பைலட்டுகள்

பைலட்டுகள்

பஹ்ரைன் ஏர் ஷோவில் தேஜஸ் போர் விமானத்தை கமாடோர் ஜெய்தீப் மவ்லோன்கர் செலுத்தினார். தேஜஸ் வரிசையில் தயாரிக்கப்பட்ட LSP-4 என்ற மாடலேயே அவர் செலுத்தினார். இந்த ஏர் ஷோவில் தேஜஸ் எல்எஸ்பி-7 என்ற மாடலும் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது. மற்றொரு தேஜஸ் விமானத்தை குரூப் கேப்டன் மாதவ் ரெங்காச்சாரி செலுத்தினார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட கடும் பயிற்சி மற்றும் இந்த குழுவில் இடம்பெற்ற அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த சாகசத்தை புரிந்ததாகவும், செலுத்துவதற்கு மிக ஏதுவான விமானிகளுக்கான போர் விமானம் என்றும் தேஜஸ் பற்றி டெஸ்ட் பைலட் ரெங்காச்சாரி மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

பயன்

பயன்

வெளிநாடு ஒன்றில் இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் முதல்முறையாக பங்கேற்று பாராட்டுதல்களை பெற்றிருப்பது, இந்தியாவிற்கு பல விதங்களில் நன்மை பயத்திருக்கிறது. ராணுவ பலத்தை எதிரி நாடுகளுக்கு பரைசாற்றியிருப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த போர் விமானத்தை வாங்குவதற்கு வெளிநாடுகளும் ஆர்வம் காட்டுவதற்கு இந்த ஏர் ஷோ வழி வகுத்திருக்கிறது.

பில்லியன் டாலர் வர்த்தகம்

பில்லியன் டாலர் வர்த்தகம்

இதுவரை பல பில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுத்து போர் விமானங்களை இந்தியா வாங்கி வருகிறது. இந்தநிலையில், வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் போர் விமானங்களைவிட பல மடங்கு குறைவான விலையிலேயே இந்த போர் விமானத்தை தயாரிக்கப்படுகிறது. அத்துடன், ஏற்றுமதி செய்யும்போது பல பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டும் வாய்ப்பும் ஏற்படும்.

 ஹெலிகாப்டர் சாகசம்

ஹெலிகாப்டர் சாகசம்

தேஜஸ் விமானம் தவிர்த்து, இந்தியாவின் சரங் ஏர் டிஸ்ப்ளே டீம் நிகழ்த்திய ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதர தொடர்புடைய செய்திகள்

*ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் பெட்டர்... யூ-டர்ன் அடித்த மத்திய அரசு... காரணம் என்ன?

*உதவிக்கு ஓடோடி வரும் துருவ் ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்!!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
India's Tejas Fighter Jet delights in 2016 Bahrain Airshow.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark