இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல்

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு நடத்துவதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு பெரும் முதலீடு செய்யவும் அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்துக்கு பெரும்பான்மையான முதலீட்டை செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் புல்லட் ரயில்

மும்பை-அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே பிரான்ஸ் அரசும் ஒப்புதல் தெரிவித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

 முதலீடு

500 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த பாதைக்கு ஒரு டிரில்லியன் யென் செலவாகும் என முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போட்டா போட்டி

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தில் முதலீடு செய்ய ஜப்பானுக்கும், பிரான்ஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், மன்மோகன்சிங் சுற்றுப்பயணத்தின்போது, புல்லட் தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

 ஜப்பான் விருப்பம்

ரயில் பாதை அமைத்தல், ரயில் பெட்டிகள், தொழில்நுட்பம், முதலீடு ஆகியவற்றை ஜப்பான் அரசு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

ரயில் வேகம்

இந்தியாவின் முதல் ரயில் பாதையாக அமையும் இந்த வழித்தடத்தில் 300 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாத்தியக்கூறுகள்

புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை இணைந்து மேற்கொள்ள ஜப்பானும், இந்தியாவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்து இறுதி திட்ட அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

 பயண நேரம்

மும்பை-அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டால், இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரம் தற்போது இருக்கும் 8 மணி நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரமாக குறையும்.

இதர திட்டங்கள்

இதுதவிர, டெல்லி-மும்பை, பெங்களூர்-சென்னை-திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் விடுவதற்காக ரயில்வே துறை பட்டியலிட்டுள்ளது. இதில், சில வழித்தடங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. மும்பை-அகமதாபாத் திட்டத்தில் ஒரு திடமான முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த திட்டங்களை ரயில்வே துறை தீவிரமாக கையிலெடுக்கப்படும் என தெரிகிறது.

இருக்கை அமைப்பு படம் 1

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த முதல் படம்.

இருக்கை அமைப்பு படம் 2

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 2.

இருக்கை அமைப்பு படம் 3

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 3.

இருக்கை அமைப்பு படம் 4

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 4.

இருக்கை அமைப்பு படம் 5

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 5.

 இருக்கை அமைப்பு படம் 6

புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 6.

Most Read Articles
English summary
India is set to benefit from the famed Japanese bullet train technology, with Tokyo pledging to invest heavily in building high speed railway systems in the country. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X