பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

Written By:

பாகிஸ்தான் எல்லையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்க இருக்கிறது இந்தியா.

தடுப்பு சுவர் அமைத்தது போல டி90 பீரங்கிகள் அடங்கிய 10 புதிய படைப்பிரிவுகளும் துவங்கப்பட இருக்கின்றன. இந்த டி90 பீரங்கியின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட டி90 பீரங்கிகளுடன் 18 படைப்பிரிவுகள் நம் நாட்டு ராணுவத்திடம் உள்ளது. இந்த டி90 பீரங்கிகள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லையோரம் நிறுத்தப்பட்டு உள்ளன.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஏவி விட்டு வருகிறது. எனவே, எல்லையில் எந்நேரமும் போர் பதட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் எல்லையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய டி90 பீரங்கிகள் வாங்கப்பட உள்ளன.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டி90 பீரங்கிகள் பீஷ்மா என்ற பெயரில் சேவையாற்றி வருகின்றன. இவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதுடன், டி90 பீரங்கியின் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய மாடலை வாங்குவதற்க ராணுவ தலைமையும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

இதையடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்புத் துறை கொள்முதல் பிரிவின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. விரைவில் அனுமதி கிடைத்தவுடன், டி90 பீரங்கிகள் ரஷ்யாவிடமிருந்து உரிமம் பெறப்பட்டு ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

உலகில் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ள முதன்மை போர் பீரங்கிகளில் விலை குறைவாகவும், அதிக அளவில் தயாரிக்கப்படும் மாடல்தான் டி90. ரஷ்யாவின் டி72 பீரங்கியின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் டி90.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

மூன்றாம் தலைமுறை அம்சங்கள் பொருந்திய இந்த பீரங்கியின் உற்ப்ததி 1992ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 3,200க்கும் அதிகமான டி90 பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

2001ம் ஆண்டில் 310 டி90 பீரங்கிகளை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில், 124 டி90 பீரங்கிகள் முழுவதுமாக கட்டப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டன. மீதமுள்ள டி90 பீரங்கிகள் பாகங்களாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்யப்பட்டன.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

2006ம் ஆண்டில் 330 டி90எம் பீஷ்மா முதன்மை பீரங்கிகளை வாங்க ஒப்பந்தமானது. சென்னை, ஆவடியில் உள்ள கனரக வாகன ஆலையில் இந்த மாடல் அசெம்பிள் செய்யப்பட்டது. இந்த பீரங்கியானது டி90எஸ் மாடலைவிட சிறப்பாக மேம்படுத்தப்பட்டது. ரஷ்யா மற்றும் பிரான்ஸ் உதவியுடன் இந்த பீஷ்மா பீரங்கி நவீன அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

தற்போது வாங்க இருக்கும் புதிய டி90 பீரங்கியில் தெர்மோ இமேஜிங் முறையில் 1.5 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை இரவு நேரத்திலும் கண்டறிந்து துல்லியமாக தாக்க முடியும். பீரங்கியின் கமாண்டர் இந்த வசதியுடன் எதிரி இலக்குகளை தாக்குதல் நடத்த உத்தரவிட முடியும்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

இந்த பீரங்கியில் ஸ்நொர்க்கெல் எனப்படும் எஞ்சினுக்கு தங்கு தடையில்லாமல் காற்று செல்லும் குழாய் இருப்பதால், 5 மீட்டர் ஆழமுடைய நீர் நிலைகளையும் எளிதாக கடக்கும்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

டி90 பீரங்கியில் உள்ள 125மிமீ ஸ்மூத்போர் துப்பாக்கி குழலை எளிதாக மாற்ற முடியும். இந்த பீரங்கி குழல் மூலமாக பல்வேறு வகை வெடிகுண்டுகளை வைத்து ஏவ முடியும். 23.4 கிலோ ஏவுகணைகளை இந்த பீரங்க குழல் கையாளும் திறன் கொண்டது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

இந்த பீரங்கியின் மூலமாக பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட 9எம்119 மற்றும் 9எம்119எம் ஏவுகணைகளை செலுத்த முடியும். அதிகபட்சமாக 100 மீட்டர் முதல் 4,000 மீட்டர் தூரம் வரை இலக்குகளை நோக்கி செலுத்த முடியும்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

மேலும், இந்த ஏவுகணைகளை வைத்து 5 கிமீ தொலைவிற்குள் தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும். வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தானியங்கி முறையில் லோடு செய்ய முடியும்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

முக்கிய பீரங்கி தவிர்த்து 7.62 மிமீ விட்டமுடைய பிகேடி எந்திர துப்பாக்கி மற்றும் 12.7மிமீ விட்டமுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் உள்ளன. இந்த பீரங்கியில் 5.45மிமீ ஏகேஎஸ் - 74 ரக துப்பாக்கியும் உள்ளது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

அணு ஆயுதம், ரசாயனம் மற்றும் உயிரி தாக்குதல்களிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் விசேஷ அமை்புகள் உள்ளன. தானியங்கி முறையில் தீத்தடுப்பு அம்சங்களும் உண்டு.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

இந்த பீரங்கியில் 840எச்பி பவரை அளிக்க வல்ல வி12 பிஸ்டன் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் டி-2 அல்லது டிஎஸ்-1 கிரேடு மண்ணெண்ணெய் மற்றும் ஏ-72 பென்ஸின் எரிபொருளில் இயக்க முடியும். 1,600 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இவை தீப்பிடிக்காத விசேஷ பூச்சு கொண்டவை.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த பீரங்கி அதிகபட்சமாக 550 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த பீரங்கியை மூன்று ராணுவ வீரர்கள் இயக்குவர்.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

மொத்தத்தில் பாகிஸ்தான் எல்லையில் எதிரிகள் எளிதில் நுழையாத அளவிற்கு டி90 பீரங்கிகளை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. வரும் 2020ம் ஆண்டிற்குள் 1,640 டி90 பீரங்கிகளை களத்தில் வைக்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.

 பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த புதிதாக 464 டி-90 பீரங்கிகளை வாங்கும் இந்தியா!

Picture credit: Wiki Commons

மேலும்... #ராணுவம் #military
English summary
Indian Army To Aquire 464 T-90 Battle Tanks Soon. Read in Tamil.
Story first published: Wednesday, November 2, 2016, 16:33 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark