ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் இந்திய மகாராஜாக்களும்

Written By:

இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்ததால், 1908ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகமாயின.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மும்பையில் நடைபெற்ற ஒரு கார் பந்தய போட்டியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்ததது. 'பியர்ல் ஆஃப் இந்தியா' என்று பெயரிடப்பட்ட அந்த காரின் திறனை பார்த்த குவாலியர் மகாராஜா 2ம் மாதவ்ராவ் சிந்தியா உடனே சொந்தமாக்கிக்கொண்டார்.

இதன்மூலம், இந்தியாவில் முதன்முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய பெருமை அவரையே சாரும். அவருக்கு பிறகு பல ராஜாக்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கத்தொடங்கினர்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

அழகும், கம்பீரமும், வேகமும் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர இந்தியாவில் அப்போது இருந்த பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

 இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இதனால் அரசர்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின. இதுக்குறித்து தீவிரமாக யோசித்த மகாராஜாக்கள், கார்களை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு ஆடர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மகாராஜாக்களின் இந்த நடவடிக்கைக்கு பிறகு தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டது. ஒரு சில ராஜாக்களின் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதே வேளையில், ஒரு சில அரசர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்த வரிசையில், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அறிந்த ஜாம் நகர் சமஸ்தானத்தின் மகாராஜா, இந்தியப் பிரிவு ரோல்ஸ் ராய்ஸ் அலுவலகத்திற்கு ஒரு பார்சல் அனுப்பினார். பார்சலை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பார்சலில் பெண்கள் அணியும் இளச்சிவப்பு நிற செருப்பு இருந்தது, அதனுடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஜாம் நகர் சமஸ்தான மகாராஜா கடிதத்தில் அதே செருப்பின் நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அதை மகாராணிக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஜாம் நகர் சமஸ்தான் மகாராஜாவிற்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தின் மீது தனது கோபத்தை வேறு விதமாக காட்டினார் பரோடா சமஸ்தானத்தின் மகாராணி சிம்னா பாய்.

சிம்னா பாய் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரில் கேபின்கள், குஷன் கொண்ட அரியணை வடிவிலான இருக்கைகள், டிரைவர் இருக்கைக்கும், தன் இருக்கைக்கும் தடுப்பு என ஒரு பெரிய பட்டியலை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார். இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்த சம்பவங்களை எல்லாம் விட உலகளவில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான புகழை மங்கசெய்த பெருமை ராஜஸ்தானின் ஆல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங்கையே சாரும். இவரது நடவடிக்கையால் ரோல்ஸ் ராய்ஸ் வியாபாரம் ஒருமுறை படுத்தே விட்டது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஒருமுறை மகாராஜா ஜெய்சிங் லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றிருந்தார். அவரை பார்த்த ஷோரூம் ஊழியர் ஒருவர் யாரோ ஏழை என்று நினைத்து வெளியே போக சொல்லிவிட்டார்.

கடும்கோபக்காரரான ஜெய்சிங் அடுத்தமுறை தனது அலங்கார பரிவாரங்களுடன் செல்ல ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

அதையெல்லாம் ஏற்காமல். ஷோரூமில் இருந்த மொத்த 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் வாங்கி, அங்குயிருந்த ஊழியர்கள் அனைவரும் மதிக்கும் படி நடந்தார். இருந்தாலும் மகாராஜா ஜெய்சிங்கின் மனது பொறுக்கவில்லை.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

லண்டனில் வாங்கிய ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் கப்பலில் இந்தியாவிற்கு அனுப்பினார். இந்தியா வந்து இறங்கிய கார்கள், ஆல்வார் நகர அழுக்குகளை அல்ல குப்பை வண்டியாக பயன்படுத்த மகாராஜ ஜெய்சிங் உத்தரவிட்டார். இதை அறிந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் குப்பை அள்ள பயன்படுகிறது என்ற தகவல் உலகம் முழுக்க பரவியது. இதனால் யாராவது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருப்பதாக சொன்னால் மற்றவர்கள் சிரித்தார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளுக்கு மதிப்பு குறைந்து வருவதை அறிந்த நிறுவனம், மகாராஜா ஜெய்சிங்கை சந்தித்து, நடந்த தவறுக்காக மன்னிப்பு கோரியது.

மேலும் ஆறு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இலவசமாக தருவதாக தெரிவித்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

நந்தகான் சமஸ்தானத்தின் மகாராஜா சர்வேஸ்வர தாஸ், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை வேட்டைக்காக பயன்படுத்தினார். பதுங்கி நிற்கும் விலங்குகளை தேடுவதற்காக அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுயிருந்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

காரின் வெளியே பாதுகாவலர்கள் ஏறிக்கொண்டே வருவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் அந்த மகாராஜா பயன்படுத்திய மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் கூரையில் வைக்கோலான கூரை வேயப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்தியாவில் ராஜாக்கள் பயன்படுத்திய கார்களிலேயே அதிக விலையுயர்ந்தது பாட்டியாலா மாகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். ராஜா பூபேந்தரின் கார், தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை.

சர்வீஸிற்கு அக்கார் சென்றால் அதை சுற்றி ஆயூதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். பாட்டியாலா மகாராஜா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண் பூஜ்யம் (0) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மைசூரை ஆண்ட மகாராஜாக்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண்ணிக்கை மொத்தம் 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்கள் 38. ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்த இந்திய ராஜாக்களிலேயே முதலிடம் வகிப்பது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் . அவரிடம் மொத்தம் 50ற்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இவ்வாறு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கௌரவத்தின் சின்னமாக இந்தியாவில் வலம் வந்தாலும், அதனை வைத்துக் கொண்டு நமது நாட்டு மகாராஜாக்கள் செய்த காரியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.

English summary
The world's most famous car brand Rolls-Royce is also has a close assoication with ancient indian rulers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark