பெரிய தலைவர்களின் சிறிய கார்கள்- சுவாரஸ்யமான தகவல்களுடன் ஒரு பார்வை

இந்திய அரசியல் தலைவர்கள் பொதுவாகவே ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர்கள். ஆனால், சமீபத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள சொத்து விபரத்தில் சில சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதில், பளிச்சென பலரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பது அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் கார்கள்தான்.

பிரதமர் மன்மோகன்சிங் தனக்கு சொந்தமாக ஒரே ஒரு மாருதி 800 கார் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் சிறிய கார் விபரங்களை காணலாம்.

பிரணாப் முகர்ஜி கார்

பிரணாப் முகர்ஜி கார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த குடியரசு தலைவர் பிரணாபுக்கு அம்பாசடர் மீதுதான் கொள்ளை பிரியம். அம்பாசடர் அவருடைய சொந்த மாநிலத்தில் தயாராவதும் ஒரு காரணம். குடியரசு தலைவரனாதும் வழங்கப்பட்ட பென்ஸ் லிமோசின் கார் ரிப்பேர் ஆனதையே சாக்காக வைத்து மீண்டும் அம்பாசடரில் பயணத்தை துவங்கினார். ஆனால், பிரணாப் சொந்தமாக வைத்திருப்பது ஃபோர்டு ஐகான். இதன் மதிப்பு ரூ.1,06,250 ஆக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 கமல்நாத்திடம் நானோவா..!!

கமல்நாத்திடம் நானோவா..!!

சக அமைச்சர்களை ஒரு படி மேலே போய் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத் டாடா நானோ காரை வைத்திருக்கிறார். நானோ தவிர அம்பாசடரும் உண்டு. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஃபோர்டு ஃபியஸ்ட்டா உள்பட 3 கார்களை சொந்தமாக வைத்துள்ளார். இந்த 3 கார்களின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் அந்தோணியிடம் மாருதி வேகன்-ஆர்

அமைச்சர் அந்தோணியிடம் மாருதி வேகன்-ஆர்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே.அந்தோணி சொந்தமாக மாருதி வேகன்ஆர் காரை வைத்திருக்கிறார். அரசு அலுவல்களை தவிர்த்து சொந்த உபயோகங்களுக்கு இந்த காரைத்தான் அவர் பயன்படுத்துகிறார். இந்த காருக்கு ரூ.1.36 லட்சமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ஸென்

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ஸென்

சர்ச்சைகளுக்கு பெயர் போன மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொந்தமாக மாருதி ஸென் காரை வைத்திருக்கிறார்.கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

பிரதமரிடம் மாருதி 800

பிரதமரிடம் மாருதி 800

இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்து வரும் மன்மோகன்சிங் மாருதி 800 காரை வைத்திருக்கிறார். அரசின் அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் ஒருவர் சொத்து மதிப்பீடு செய்யும்போது பிரதமரின் மாருதி காருக்கு ரூ.21,033 மதிப்பீடு செய்துள்ளார். .

Most Read Articles
English summary
Indian politicians are mostly known mostly for their petty politics, scams, luxury lifestyle and party hopping (the political ones). But recent disclosures of their property has revealed some interesting facts. Some of the ministers in the Indian cabinet own some plush cars and bikes while some cling on the cars that is mostly owned by the common man.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X