TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்க இந்தியா முடிவு... பங்காளிகளுக்கு புது ஆப்பு!
சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டும் விதத்தில் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக கடற்படை தளபதி சுனில் லன்பா கூறி இருக்கிறார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஒரு நாட்டின் படைபலத்தை பரைசாற்றுவதில் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டுவது, இயக்குவது, பராமரிப்பது என அனைத்துமே யானையை கட்டி தீணி போடுவது போலத்தான். எனவே, ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் நகரும் படைத்தளம் போல செயல்படும் என்பதால், உலகின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதிகபட்சமாக அமெரிக்காவிடம் மட்டும் அதிகபட்சமாக 11 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் வலிமை பொருந்திய நாடாக விளங்குகிறது. தற்போது ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் செயல்பாட்டில் உள்ளது. இந்த போர்க்கப்பல் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் (R11) என்ற புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமைக்குரிய இந்த கப்பல் 2020ம் ஆண்டில் சோதனை ஓட்டத்திற்கு வருகிறது. 2023ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.19,341 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை நாடான சீனா வசம் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் செயல்பாட்டில் உள்ளது. அண்மையில் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலின் சோதனை ஓட்டத்தையும் துவங்கி இருக்கிறது.
தன் வசம் உள்ள படை பலத்தை மனதில் வைத்து அவ்வப்போது இந்திய எல்லைப்பகுதிகளில் சில்மிஷம் செய்து வருகிறது. எல்லைப்பகுதிகளில் மட்டுமின்றி, அண்மையில் இந்திய கடல் எல்லைக்குள் தனது நீர்மூழ்கி போர்க்கப்பலை அனுப்பி இந்திய கடற்படை பலத்தை ஆழம் பார்த்தது.
மேலும், புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சீனா கட்டி வருகிறது. இதனால், இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை இருக்கிறது. இதனை மனதில் கொண்டு மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலையும் இந்தியா கட்ட முடிவு செய்துள்ளது. ஐஎன்எஸ் விஷால் என்ற பெயரில் இந்த புதிய கப்பல் பெயரிடப்படும் என்று தெரிகிறது.
இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது இந்தியாவிலேயே உருவாக்கப்படும் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலாகவும் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த கப்பலும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில்தான் கட்டப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதன் கட்டுமானப் பணிகள் துவங்கும். 7 முதல் 8 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் 40,000 டன் எடை கொண்டதாக இருக்கும் நிலையில், புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் 65,000 டன் எடை கொண்டதாக இருக்கும். மேலும், பழைய கப்பல்களை போல அல்லாமல் கடற்படையில் பெண்களும் பணியாற்றும் வசதிகளுடன் கட்டமைக்கப்பட இருக்கிறது.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் தவிர்த்து, 56 புதிய போர்க்கப்பல்களையும், 6 புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல்களையும் இந்தியா களமிறக்க உள்ளது. பழைய போர்க்கப்பல்களுக்கு மாற்றாகவும், கூடுதல் பலம் வேண்டி அதிக எண்ணிக்கையிலான போர்க்கப்பல்களையும் கடற்படையில் இந்தியா விரைவில் இணைக்க இருக்கிறது.
இதன்மூலமாக, எல்லைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. வரும் 2050ம் ஆண்டில் 200 போர்க்கப்பல்களையும், 500 போர் விமானங்களுடன் உலகின் மிக பலம் பொருந்திய கடற்படையாக சீனா விளங்கும் என்று அமெரிக்காவின் ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கிறது. அதற்கு தக்கவாறு இந்திய கடற்படை ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வருகிறது.
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராத், எச்எம்எஸ் ஹெர்மிஸ் என்ற பெயரில் இங்கிலாந்து கடற்படையில் பயன்பாட்டில் இருந்தது. 1959ல் இங்கிலாந்து கடற்படையில் பயன்பாட்டிற்கு வந்த, இந்த கப்பலை 1986ல் இந்தியா வாங்கி பயன்பாட்டில் வைத்திருந்தது. பழமையான இந்த கப்பல் 2016ம் ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.