அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் கார் மாடல்கள்: சுவாரஸ்யமான தகவல்கள்..!

Written By:

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் அரசியல் என்பது மக்களிடம் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே இருக்கிறது. இங்கு அரசியல்வாதிகள் மீது மக்கள் அன்பும், பாசமும், ஈடுபாடும், நேசமும், அவ்வளவு ஏன் வெறித்தனம் கொண்டவர்களாகக் கூட இருக்கின்றனர்.

சினிமா நட்சத்திரங்களின் மீது இருக்கும் அதீத ஈடுபாட்டை தங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் மீதும் மக்கள் கொண்டிருக்கின்றனர். சினிமா நட்சத்திரங்களைக் காட்டிலும் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் கார்களை அதிகமாகவே பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் என விஐபிக்கள் பயன்படுத்தும் அஃபீஷியல் வாகனமாக இருந்து வந்தது அம்பாஸிடர் கார் மட்டுமே. தற்போது பல தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த சொகுசுக்கார்கள் அந்த இடத்தை நிரப்பியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அரசியல்வாதிகள் கார் கலெக்‌ஷன் பற்றிய இந்தத் தொகுப்பை பிரதமர் மோடியிடம் இருந்தே தொடங்கிவிடலாம். பிரதமர் ஆவதற்கு முன்னதாக குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி மஹிந்திரா ஸ்கார்பியோ காரையே பயன்படுத்தி வந்தார்.

தற்போது நாட்டின் பிரதமர் என்பதால் சர்வதேச தரத்திலான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 சீரீஸ் காரை பயன்படுத்துகிறார். இது பிரதமருக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டது. சந்தையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் காரின் விலை ரூ.1.2 கோடியாக இருந்தாலும் விஷேச பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்தக் கார் அதனைக் காட்டிலும் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

நாட்டின் பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தி உலகின் சக்திவாய்ந்த பெண்மனிகளுள் ஒருவராகவும் விளங்கி வருகிறார்.

இவரை டாடா சஃபாரி அல்லது ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி காரில் பொதுவாக பார்க்கலாம். பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி வேலைகளுக்காக செல்லும்போது சஃபாரி காரிலும், தலைநகர் டெல்லியில் அன்றாட பயணத்திற்கு ரேஞ்ச் ரோவர் காரையும் பயன்படுத்துகிறார் சோனியா. ரேஞ்ச் ரோவர் கார் மாடல்களின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.48.73 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் தாக்ரே

ராஜ் தாக்ரே

மராட்டிய மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் குடும்ப வாரிசான ராஜ்தாக்ரே மகராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ஆவார்.

48 வயதான ராஜ் தாக்ரே சொகுசுக் கார் விரும்பியாக இருக்கிறார். இவரிடம் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ், ஆடி க்யூ-7, டொயோட்டா லேண்ட் குரூசர் உள்ளிட்ட காஸ்ட்லி கார்கள் உள்ளன.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தியின் விருப்பமான கார் ஹோண்டா சிஆர்-வி தான். இதனை தவிர்த்து இவர் டாடா சஃபாரி முதல் லெக்ஸஸ் எல்எக்ஸ் 470, டொயோட்டா லேண்ட் குரூஸர், ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களையும் வைத்துள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசிய அரசியலில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஆவார்.

தென்னகத்தின் இரும்புப் பெண்மணி என்ற பெயர் எடுத்த இவர் உயிரிழக்கும் வரை இசட் பிளஸ் என்ற உயர் ரக பாதுகாப்பில் இருந்தார். இவர் குண்டு துளைக்காத மிட்சுபிஷி பஜிரோ, மாண்டிரோ மற்றும் டொயோட்டா லேண்ட் குரூஸர் பிராடோ கார்களை பயன்படுத்தி வந்தார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா, பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி வேலைகளின் போது டாடா சஃபாரியில் தான் செல்கிறார்..

தன்னுடைய சொந்த பயணங்களுக்காக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை பயன்படுத்துகிறார்.

மம்தா பேனர்ஜி

மம்தா பேனர்ஜி

மேற்கு வங்க மாநில முதலமைச்சரான மம்தா பேனர்ஜி மற்ற தலைவர்களில் இருந்து இந்த ஒரு விஷயத்தில் முற்றிலும் மாறுபடுகிறார். இவர் நீண்டகாலமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறிய மாடலான ஃசென் காரை பயன்படுத்தி வந்தார். தற்போது டொயோட்டா இன்னோவாவை பயன்படுத்துகிறார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

சாதாரண நிலையில் இருந்து தேசிய அரசியலில் நுழைந்து டெல்லி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசியலிலும் மாற்றத்தை உருவாக்க முயலும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மம்தாவைப் போல சிறிய ரக மாருதிசுசுகி வேகன் ஆர் காரையே பயன்படுத்தி வந்தார். இவரும் தற்போது இன்னோவாவுக்கு மாறியிருக்கிறார்.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

மத்திய நிதி அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரிடம் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோர்சே உள்ளிட்ட கார்கள் இருந்தாலும் இவரின் விருப்ப வாகனமாக இருப்பது டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தான்.

உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா

குளிர்பிரதேச மாநிலமான காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நீண்ட கால அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டின் குறைந்த வயது கொண்ட முதல்வர் என்ற அரிய சிறப்பையும் பெற்று விளங்கிய இவர் ரேஞ்ச் ரோவர் காரை பயண்படுத்தி வருகிறார்.

English summary
Read in Tamil about Indian politicians and their cars. price, specs and more
Please Wait while comments are loading...

Latest Photos