இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ ஐ8 கார் பெங்களூரில் தரிசனம்!

Posted By:

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் பெங்களூரில் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில்தான் இந்த கார் ரூ.2.29 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் பெங்களூர் சாலைகளில் நடமாட்டத்தை வீடியோவாக எடுத்து யூ ட்யூபில் வெளியிட்டுள்ளனர்.

பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் புரட்சிகரமான இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதில் முதலாவதாக கருதப்படும் கார்தான் தற்போது நீங்கள் வீடியோவில் பார்க்கப் போகிறீர்கள். இந்த காருடன் ஃபெராரி 458 இட்டாலியா மற்றும் லம்போர்கினி அவென்டேடாரும் போட்டி போடுகின்றன. வீடியோவில் கண்டு களியுங்கள்.

<center><iframe width="100%" height="450" src="https://www.youtube.com/embed/DBXrAysmOJo" frameborder="0" allowfullscreen></iframe></center>  

English summary
India's First BMW i8 Spotted in Bangalore.&#13;

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark