இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் ரெடி!

Written By:

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணு ஆயுத நீர் மூழ்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த், அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதையடுத்து, இந்த புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்ற வரும் இந்த புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 நீண்ட நாள் கனவுத் திட்டம்

நீண்ட நாள் கனவுத் திட்டம்

கடந்த 1970ம் ஆண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை சொந்தமாக தயாரிப்பதற்கான திட்டத்தை இந்தியா கையிலெடுத்தது. அதன்பின்னர், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர், 1985ம் ஆண்டில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலின் வரைவு திட்டம் இறுதி வடிவம் பெற்றது.

Photo Credit: Wikimedia

இறுதிக் கட்டம்

இறுதிக் கட்டம்

அதன்பிறகு, 1998ம் ஆண்டில் இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகள் துவங்கின. எல்&டி மற்றும் வால்சந்த் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பல்வேறு தடைகளை கடந்து 2013ம் ஆண்டு இந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின. 2013ல்தான் இந்த கப்பலில் அணு உலை கட்டமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகால உழைப்பில் இந்த கப்பல் உருவாகியிருக்கிறது.

கட்டுமானம்

கட்டுமானம்

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில்தான் இந்த நீர்மூழ்கி கப்பல் கட்டமைக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலை கட்டுவதற்கு ரஷ்யாவும் அதீத ஒத்துழைப்பை நல்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இயக்குவதற்கும், ஆயுதங்களை ஏவுவதற்குமான பயிற்சிகளின்போது, அவசர உதவிகளை வழங்குவதற்காக ரஷ்யா தனது ஆர்எஃப்எஸ். எப்ரான்ன் என்ற நீர்மூழ்கி கப்பலை விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளது.

Photo credit: Wikimedia

சோதனைகள் வெற்றி

சோதனைகள் வெற்றி

கடந்த 5 மாதங்களாக இந்த கப்பல் ஆழ்கடலில் நீர் அழுத்தத்தை தாங்கும் சோதனை மற்றும் ஆயுதங்கள் ஏவுதல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், அனைத்து சோதனனைகளிலும் ஐஎன்எஸ் அரிஹந்த் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதல் வழங்கிய பின்னர், கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

Photo Credit: Youtube

எடை

எடை

ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி போர்க்கப்பல் 6,000 டன் எடை கொண்டது. 110 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலை கட்டமைப்பதற்கு 30,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் 95 வீரர்கள் பணியாற்றுவார்கள்.

Photo Credit: Youtube

முதலாவது கப்பல்

முதலாவது கப்பல்

இந்த குடும்ப வரிசையில் கட்டமைக்கப்படும் 5 நீர்மூழ்கி போர்க்கப்பல்களில் முதலாவதாக அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது. எந்த நேரத்திலும் இந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்படலாம் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Photo Credit: Youtube

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலில் 700 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர வகையிலான 12 கே-15 ஏவுகணைகளையும் 3,500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் 4 கே-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பொருத்த முடியும்.

Photo Credit: Wikipedia

பெரும் பலம்

பெரும் பலம்

இந்த கப்பலிலிருந்து நீர், நிலம், ஆகாயம் என மூன்று வகையான இலக்குகளையும், நீருக்கு அடியிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகளை ஏவ முடியும். இதன்மூலம், இந்திய ராணுவ பலத்தில் புதிய உயரத்தை எட்டும். அதாவது, உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்து இயக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன.

Photo Credit: Youtube

மற்றொரு கப்பல்

மற்றொரு கப்பல்

தற்போது ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் சக்ரா என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போர் என்று வந்தால் இந்தியாவை காக்கும் ஆயுதங்கள்

போர் என்று வந்தால் இந்தியாவை காக்கும் ஆயுதங்கள்

மேலும்... #ராணுவம் #military
English summary
India’s first nuclear submarine INS Arihant ready for operations.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark