சோலார் சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் சோலார் ரயிலின் சோதனை

By Ravichandran

சோலார் சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் சோலார் ரயிலின் சோதனை ஓட்டம் விரைவில் நடத்தபட உள்ளது.

இந்திய ரயில்வேயின் இந்த புதிய திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ரயில்வே...

இந்திய ரயில்வே...

இந்திய ரயில்வே தான், உலகின் 4-வது மிகப்பெரிய ரயில் நெட்வர்க் ஆகும்.

இந்திய ரயில்வே, சுமார் 1,15,000 கிலோமீட்டர் அளவிலான டிராக் உள்ளது. இந்திய ரயில்வேயின் கீழ் சுமார் 7,112 ரயில் நிலையங்கள் உள்ளன.

சோலார் சக்தி...

சோலார் சக்தி...

இந்திய ரயில்வேயில் தொடர்ந்து ஏராளமான முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்திய வளார்ச்சியாக, சோலார் சக்தி உபயோகிக்கபடும் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரத்தில் நடைபெற உள்ளது.

இந்த சோதனை ஓட்டம், இந்த மே மாத இறுதியில் நடைபெற உள்ளது.

சோலார் பேனல்கள்;

சோலார் பேனல்கள்;

இந்தியாவின் இந்த முதல் சோலார் ரயிலின் அனைத்து பெட்டிகளின் மேற்கூரைகள் மீதும் சோலார் பேனல்கள் பொருத்தபட்டுள்ளது.

சோலார் சக்தியின் பிரயோகம்;

சோலார் சக்தியின் பிரயோகம்;

இந்தியாவின் முதல் சோலார் ரயிலில் தயார் ஆகும் மின்சாரம், இந்த ரயிலின் உள்ளே உள்ள லைட்கள் மற்றும் உட்புற எலக்ட்ரிக் உபகரணங்களை உபயோகிக்க உதவும்.

இந்த ரயில் வழக்கமான டீசல் லோக்கோமோடிவ் இஞ்ஜின் மூலமே இயங்கும்.

இலக்கு;

இலக்கு;

இந்திய ரயில்வேயின் இந்த முதல் சோலார் ரயில் குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

இந்திய ரயில்வே, வரும் 2020-ஆம் ஆண்டிற்குள், சோலார் சக்தி மூலம் சுமார் 1,000MW மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் கொண்டுள்ளது.

டீசல் பிரயோகம்;

டீசல் பிரயோகம்;

இந்திய ரயில்வே, தற்போதைய நிலையில் ஒரு வருடத்திற்கு சுமார் 90,000 லிட்டர் டீசல் பிரயோகம் செய்து வருகிறது.

இந்திய ரயில்வே, இந்த அபரிவிதமான டீசல் பிரயோகத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறது.

பிற சக்திகளின் பிரயோகம்;

பிற சக்திகளின் பிரயோகம்;

இந்திய ரயில்வே, ஏற்கனவே சிஎன்ஜி, பயோடீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை உபயோகிக்க துவங்கிவிட்டது.

டெல்லி டிவிஷனில் உள்ள ரோஹ்தக்-ரிவாரி பிரிவில் இயங்கும் லோக்கல் ரயில்களில் சிஎன்ஜி உபயோகிக்கபட்டு வருகிறது. ஆனால், இந்த பகுதியில், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டின் பிரயோகமும் நடைபெறுகிறது.

மாசு குறைப்பு;

மாசு குறைப்பு;

இந்திய ரயில்வே, சோலார் சக்தி மற்றும் பிற சக்திகளை உபயோகிக்க துவங்கியதன் மூலம், கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அளவுகள் குறைந்து வருகிறது.

சமீபத்தில் தான், இந்தியாவில் உள்ள நகரங்கள் உலகிலேயே மிகவும் மாசு அடைந்த நகரங்களாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் இந்த புதிய திட்டங்கள், வருங்கால தலைமுறைக்காக பசுமையான உலகம் வழங்கும் நோக்கத்தை ஒட்டிய வெற்றிகரமான நடவடிக்கையாக ஆகும்.

முழுமையான சோலார் ரயில்;

முழுமையான சோலார் ரயில்;

முன்னதாகவும், இந்திய ரயில்களின் பெட்டிகளில் சோலார் பேனல்கள் உபயோகிக்கபட்டது. எனினும், முழுவதுமான பயணியர் ரயில்களில் இப்படி பிரயோகிக்கபடவில்லை.

ஆனால், தற்போது தான் முதல் முறையாக ஒரு பயணியர் ரயில் முழுவதும் அனைத்து பெட்டிகளிலும் சோலார் பேனல்கள் உபயோகிக்கபடுகிறது.

வருங்காலங்களில், இத்தகைய ஏற்பாடுகள் அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரயில் பெட்டிகளை சோலார் மயமாக்க இந்திய ரயில்வேயின் முன்னோடி திட்டம்

உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி படகு - சிறப்புத் தகவல்கள்!

சிங்கிள் சார்ஜில் 1,496 கிமீ தூரம் பயணித்து புதிய சாதனை படைத்த 'சோலார்' கார்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Indian Railways is the fourth largest rail network in the whole world. Indian Railways is set to conduct Trial Run of its First Solar Powered Train. This Train Trial is to be conducted during end of May 2016 in Rajasthan's Jodhpur city. This is the first Train, in which all coaches of this train has Solar Panels on its rooftop. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X